சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனுஷ்கோடியில் பிரார்த்தனை மண்டபம் அகற்றம்

Added : மே 28, 2010
Advertisement

ராமேஸ்வரம் : தனுஷ்கோடியில் அனுமதி இன்றி கட்டப்பட்ட பிரார்த்தனை மண்டபத்தை, போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் இடித்து அகற்றினர். தனுஷ்கோடியில் கட்டப்பட்ட குறிப்பிட்ட மதத்தின் பிரார்த்தனை மண்டபத்தை , ராமேஸ்வரம் தாசில்தார் ராஜேந்திரன் பார்வையிட்டு, கட்டடம் கட்டிய ஜோஸ்வா என்பவரிடம் விசாரணை செய்தார். இன்று காலை 10 மணிக்குள் பிரார்த்தனை மண்டபத்தை தாங்களாகவே இடித்து விடுவதாக கூறிய ஜோஸ்வா, மதியம் வரை அகற்றவில்லை. இதை தொடர்ந்து நாகநாதன் வி.ஏ.ஓ., தலைமையில் தனுஷ்கோடி சென்ற வருவாய்த்துறையினர் , போலீசார் பாதுகாப்புடன் கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தினர். கட்டடம் இடிக்கப்பட்டதை தொடர்ந்து, பாம்பன் அக்காள் மடம் அரைஸ் அன்டு பியுல்டு சோஷியல் சர்வீஸ் டிரஸ்ட் நிர்வாகி ஜோஸ்வா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தனுஷ்கோடி போலீசில் வி.ஏ.ஓ., புகார் செய்தார்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X