சம்பவம் செய்தி

தமிழ்நாடு

"டிவி' குழுவினர் மீது தாக்குதல்; சாலை மறியல்

Added : செப் 15, 2010
Advertisement

சென்னை சென்னை சாந்தோம் சர்ச்சில் செய்தி சேகரிக்கச் சென்ற நிருபர்கள் தாக்கப்பட்டதால், பத்திரிகையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மந்தைவெளியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியர் மற்றும் மாணவரின் பெற்றோர் இடையே தகராறு நடந்தது. இதுகுறித்து, மாணவனின் பெற்றோர் சார்பில் ஆசிரியர் மீது மயிலை மறைமாவட்ட பேராயர் சின்னப்பாவுக்கு புகார் மனு அனுப்பப்பட்டது. இதன்பேரில், பேராயர் விளக்கம் கேட்டதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட ஆசிரியை, புகார் அனுப்பியவர் மீது எழும்பூர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சாட்சியாக பேராயரும் சேர்க்கப்பட்டார். பேராயர் கோர்ட்டில் ஆஜராக கோர்ட்டில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது.இதை எதிர்த்து ஐகோர்ட்டில் பேராயர் வழக்கு தொடர்ந்தார். சம்மன் அனுப்பியதற்கு தடை விதித்த ஐகோர்ட், வக்கீல்கள் குழு அமைத்து பேராயரை நேரில் சந்தித்து விசாரித்து அறிக்கை அளிக்க பரிந்துரைத்தது. வக்கீல் ஜான் தலைமையில் விசாரணை நடத்த எழும்பூர் கோர்ட் உத்தரவிட்டது. வக்கீல்கள் குழு நேற்று காலை சாந்தோம் சர்ச் வளாகத்தில் உள்ள பேராயர் வீட்டுக்குச் சென்றது.இதை படம் எடுக்க தனியார் "டிவி' நிறுவனத்தினர் உள்ளே நுழைந்தனர். "டிவி' குழுவினரை சில பாதிரியார்கள் தாக்கி, உள்ளே அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்து பத்திரிகையாளர்கள் அங்கு கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.பேராயர் சின்னப்பா, நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டார். சம்பவ இடத்திற்கு வந்த கூடுதல் கமிஷனர் ஷகீல் அக்தர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். தாக்குதல் சம்பவம் குறித்து தனியார் "டிவி' சார்பில் மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் தரப்பட்டது. தாக்குதல் சம்பவத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X