இறுதி துணை வாக்காளர் பட்டியல் வெளியீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இறுதி துணை வாக்காளர் பட்டியல் வெளியீடு

Added : செப் 16, 2010
Share
கரூர்: கரூர் மாவட்டத்தில் இறுதி துணை வாக்காளர் பட்டியல் அடிப்படையில், நான்கு சட்டசபை தொகுதிகளிலும் சேர்த்து 6 லட்சத்து 85 ஆயிரத்து 773 வாக்காளர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 33 ஆயிரத்து 920 பேர் சேர்க்கப்பட்டனர்.கரூர் மாவட்டத்தில் அடங்கியுள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை சட்டசபை தொகுதிகளின் 2010ம் ஆண்டுக்கான போட்டோவுடன் கூடிய இறுதி துணை வாக்காளர் பட்டியல்

கரூர்: கரூர் மாவட்டத்தில் இறுதி துணை வாக்காளர் பட்டியல் அடிப்படையில், நான்கு சட்டசபை தொகுதிகளிலும் சேர்த்து 6 லட்சத்து 85 ஆயிரத்து 773 வாக்காளர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 33 ஆயிரத்து 920 பேர் சேர்க்கப்பட்டனர்.கரூர் மாவட்டத்தில் அடங்கியுள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை சட்டசபை தொகுதிகளின் 2010ம் ஆண்டுக்கான போட்டோவுடன் கூடிய இறுதி துணை வாக்காளர் பட்டியல் நேற்று கரூர் மற்றும் குளித்தலை ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் வெளியிடப்பட்டது.கரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கலெக்டர் (பொ) பிச்சையா பட்டியலை வெளியிட்டு, கூறியதாவது:கரூர் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களில் ஆண் 3 லட்சத்து 20 ஆயிரத்து 906 என்பதில் இருந்து 3 லட்சத்து 38 ஆயிரத்து 831 என அதிகரித்துள்ளது. பெண் வாக்காளர் எண்ணிக்கை 3 லட்சத்து 28 ஆயிரத்து 400 என்பதில் இருந்து 3 லட்சத்து 46 ஆயிரத்து 942 எனவும் அதிகரித்துள்ளது. தற்போது மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6 லட்சத்து 85 ஆயிரத்து 773 என உயர்ந்துள்ளது.நான்கு சட்டசபை தொகுதியிலும், 2010ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரி 38 ஆயிரத்து 323 விண்ணப்பம் வந்தது. இவற்றுள் 33 ஆயிரத்து 920 அனுமதிக்கப்பட்டு, மற்றவை தள்ளுபடி செய்யப்பட்டது. இறந்தவர், இடம் பெயர்ந்த வாக்காளர் மற்றும் இருமுறை பதிவானது என 1,395 பெயர் நீக்கம் செய்யப்பட்டது.



தற்போதைய இறுதி துணை வாக்காளர் பட்டியலை சேர்த்து, அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 365, கரூரில் 1 லட்சத்து 82ஆயிரத்து 840, கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 861, குளித்தலையில் 1லட்சத்து 73 ஆயிரத்து 707 எனவும் வாக்காளர் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இறுதி துணை வாக்காளர் பட்டியல், கரூர், குளித்தலை ஆர்.டி.ஓ., அலுவலகம் மற்றும் அனைத்து தாலுகா அலுவலகத்திலும் மக்கள் பார்வைக்க வைக்கப்பட்டுள்ளது. மக்கள், தங்கள் பதிவு குறித்து பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.கரூர் ஆர்.டி.ஓ., அசோக்குமார், கரூர் தாசில்தார் தர்மராஜ், தேர்தல் தாசில்தார் கோவிந்தராஜ், துணை தாசில்தார் சிவக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X