அரசியல் செய்தி

தமிழ்நாடு

பன்றிக் காய்ச்சல் தடுப்பு ஊசியை இலவசமாக வழங்க ஜெ., கோரிக்கை

Updated : செப் 17, 2010 | Added : செப் 16, 2010 | கருத்துகள் (32)
Share
Advertisement

சென்னை : "பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு ஊசியை, அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்க பணம் ஒதுக்க முடியாதா?' என அ.தி. மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை: மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. இருதய அறுவை சிகிச்சை, புற்று நோய், மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை போன்ற முக்கியமான அறுவை சிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. பன்றிக் காய்ச்சல், சிக்குன் குனியா, காலரா, டைபாய்டு மற்றும் இதர மர்ம நோய்கள் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் மாண்டு போகின்றனர். இந்த நோய்களுக்கு எல்லாம் காப்பீட்டுத் திட்டத்தில் நிவாரணம் உண்டா என்றால் இல்லை என்ற பதில் தான் கிடைக்கிறது.

தற்போது பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து குறித்து சில நாட்களுக்கு முன் சென்னை அரசு பொது மருத்துவமனை முதல்வரிடம் கேட்ட போது, "பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு ஊசி மருந்தை விற்பனை செய்ய தனியார் கம்பெனிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது' என்றும், "போலியோ சொட்டு மருந்து போல் இலவசமாக அளிக்க அரசு கொள்கை முடிவு எடுத்தால் தான் அரசு மருத்துவமனைகளில் வழங்க முடியும்' என்றும் தெரிவித்திருக்கிறார். அமைச்சரோ, "பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கிறது. இந்த தடுப்பு மருந்தை போட்டுக் கொண்டால் இந்த நோயிலிருந்து மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ளலாம்' என்றும், அரசு மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து கிடைக்காது' என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளுங்கள் என அறிவுரை கூறுவதற்கு அமைச்சர் எதற்கு? தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமென்றால் 600 ரூபாய் வரை ஏழை, எளிய மக்கள் செலவழிக்க வேண்டும். இந்த செலவை தி.மு.க., அரசு ஏற்றுக் கொள்ளுமா என்பதை அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். "மருந்து கிடைக்காது' என சொல்லி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறார் இன்னொரு அமைச்சர். பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு ஊசியை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்க பணம் ஒதுக்க முடியாதா? பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு ஊசியைக் கூட இலவசமாக வழங்க இயலாமல் மருத்துவத்துறையை தனியாருக்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிற தி.மு.க., அரசின் முதல்வர் கருணாநிதிக்கு, வரும் சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
joel - madurai,இந்தியா
17-செப்-201020:56:52 IST Report Abuse
joel பன்றிக்கு நன்றி சொல்லி, குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் பன்றிக்காய்ச்சலை ... உபயம்: இருபத்தி மூன்றாம் டுபாக்கூர் சித்தமருத்துவர்
Rate this:
Cancel
வசந்த் - சிங்கபோரே,இந்தியா
17-செப்-201019:59:23 IST Report Abuse
வசந்த் செந்தில் - India, என்ன பெரிய அறிவாளின்னு நெனப்பா. அங்கே தான் சொல்லி இருக்குல்ல. poleo சொட்டு மருந்து மாதிரி கொடுக்க வேண்டியது தானே. அது என்ன அமைச்சரு சொல்லுறது. தனியார் மருத்துவ மனையில போயி ஊசி போட. அப்பறம் எதுக்கு அமைச்சரு மன்னாங்கட்டி. ஜெயலலிதா என்ன அமைச்சரா மருந்த கண்டு புடிக்க சொன்னுச்சு. தடுப்பு ஊசி தானே அரசாங்க மருத்துவ மனை மூலமா கொடுக்க சொல்லுது. கொஞ்சமாவது logic-உள்ளது போல பேசுய்யா.வந்துட்டாரு வெளக்கம் கொடுக்க. இலவசத்த கொடுத்து சோம்பேறி ஆக்க சொல்லல. ஏழை மக்களோட உயிரை மட்டும் தான் காப்பத சொல்லுது. எது எதை compare பண்ணி விளக்கம் கொடுக்குறதுன்னு வெவஸ்தையே இல்ல.
Rate this:
Cancel
Prem - Chennai,இந்தியா
17-செப்-201019:08:27 IST Report Abuse
Prem Why couldn't you provide free medicine to HIV and Bird Flu patients during your period ? think 9 times before you open your Damn mouth.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X