சோனியாவுடன் மந்திரி பரூக் ஆலோசனை:காஷ்மீரில் ஊரடங்கு தொடர்கிறது

Added : செப் 16, 2010 | கருத்துகள் (1)
Share
Advertisement
சோனியாவுடன் மந்திரி பரூக் ஆலோசனை:காஷ்மீரில் ஊரடங்கு தொடர்கிறது

புதுடில்லி:தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து, காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே, காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு நேற்றும் நீடித்தது.

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக வன்முறை அதிகரித்துள்ளது. அங்கு, பாதுகாப்புப் படையினருக்கு அளிக்கப்படும் சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக, முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கும், காங்கிரஸ் மேலிடத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. காஷ்மீரின் பிரதான எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் முப்தி முகமது சயீதுவுடன், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் சமீபத்தில் ஆலோசனை நடத்தினர்.இதனால், மக்கள் ஜனநாயக கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாயின.


இதையடுத்து, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, நேற்று டில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து பேசினார். காஷ்மீரின் தற்போதைய நிலவரம் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. காஷ்மீர் பிரச்னையில், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாட்டை போக்குவது குறித்து அவர் பேசியதாக தகவல்கள் வெளியாயின.இதற்கிடையே, காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சி பிரதிநிதிகள் அடங்கிய தூதுக் குழு, வரும் 20ம் தேதி காஷ்மீர் செல்லும் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


ஊரடங்கு நீட்டிப்பு: காஷ்மீரில் கடந்த 12ம் தேதி முதல், காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஐந்தாவது நாளாக நேற்றும் ஊரடங்கு உத்தரவு நீடித்தது. மாநில போலீசாரும், பாதுகாப்புப் படையினரும் தெருக்களில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.சோபூர், குப்வாரா, கிரால்பூரா, திரேகம், பண்டிபுரா மற்றும் டாங்மார்க் உள்ளிட்ட பதட்டம் நிறைந்த பகுதிகளில், கண்காணிப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. உணவு, மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே, ஊரடங்கு உத்தரவை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.மேலும், அங்கு பத்திரிகை அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளதால், மீடியா துறை முற்றிலும் முடங்கியுள்ளன.


இதுகுறித்து, காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றத் தலைவர் குலாம் அசன் காலு கூறுகையில், "காஷ்மீரில் நடந்து வரும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக, கடந்த மூன்று மாதங்களாகவே ஊடகத்துறை முடங்கியுள்ளது. செய்தி சேகரிக்கச் செல்லும் பத்திரிகையாளர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது. கடந்த 12ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக, காஷ்மீரில் எந்த பத்திரிகை அலுவலகங்களும் இயங்கவில்லை' என்றார்.


இதற்கிடையே, பிரிவினைவாத அமைப்புத் தலைவர் சயித் அலி ஷா கிலானி கூறியதாவது:மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரை விலக்கிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், வரும் 21ம் தேதி பாதுகாப்புப் படையினர் முகாம் நோக்கி பேரணி நடத்தப்படும்.காஷ்மீர் நிலவரம் குறித்து, அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டி பேச்சுவார்த்தை நடத்துவதில் பயனில்லை. அமைதி திரும்ப வேண்டுமானால், சுயாட்சி அதிகாரம் வழங்க வேண்டும்.இவ்வாறு கிலானி கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜகன் - சென்னை,இந்தியா
17-செப்-201018:09:52 IST Report Abuse
ஜகன் நம் நாட்டின் மிக முக்கியமான பிரச்சினை காஷ்மீர்.இதை முடிவெடுக்கும் உரிமை சோனியாவா?இந்தியாவிற்கு வந்த சோதனை.பாரூக் பாய் உமக்கும் அறிவில்லையா ? எவ்வளவு பெரிய நிபுணர்கள் இருக்கும் நாடு.அரசியல் ஞானிகள் நிறைந்த நாடு.இவர்களை எல்லாம் விட்டு விட்டு இத்தாலியில் இருந்து வந்த ஒரு பெண்ணுக்கு இவ்வளவு மதிப்பா? இந்திய மக்களே நம் எல்லோரும் பேக்குகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X