தமிழ்நாடு

சென்னையில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் பலி

Added : செப் 17, 2010
Share
Advertisement

சென்னை: பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறியுடன், அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண் இறந்தார். சென்னை அருகே திருவேற்காடு தேவி நகரைச் சேர்ந்தவர் பழனி. இவர் மனைவி குப்பம்மாள் (50). குப்பம்மாள் ஒரு மாதமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். குடியிருக்கும் பகுதியில் உள்ள டாக்டர்களிடம் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், காய்ச்சல் குறையாத நிலையில் நேற்று முன் தினம் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதனால், குப்பம்மாளை உடனே அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மருத்துவமனையில் டாக்டர்கள் பரிசோதித்ததில் பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறிகள் தெரிந்ததால் சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை அளித்தனர். மூச்சுத் திணறல் இருந்ததால் வென்டிலேஷன் வைத்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று குப்பம்மாள் இறந்தார். அவர் உடல், பிளாஸ்டிக் கவரில் பாதுகாப்பான முறையில் கட்டி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது, அரசு பொது மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் வார்டில் நான்கு பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பேருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் இருப்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டது. பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறியுடன் குப்பம்மாள் இறந்தார். அரசு பொது மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை ஆறு பேர் இறந்துள்ளனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X