இந்தியா

ஊழல் நீதிபதிகள்: மாஜி சட்ட அமைச்சர் வெளியிட்ட பட்டியலால் பரபரப்பு

Updated : செப் 17, 2010 | Added : செப் 17, 2010 | கருத்துகள் (3)
Share
Advertisement

டில்லி: ஊழல் மற்றும் நீதிமன்ற அவமதிப்புக்குள்ளான சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 8 பேரை கைது செய்து சிறையிலடைக்க கோரி மனு தாக்கல் செய்து பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார் முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், பிரபல சீனியர் வக்கீலுமான ஷாந்தி புஷானன். பிரபல சீனியர் வக்கீலும் முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான ஷாந்திபுஷானன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் ஒன்று செய்துள்ளார். அதில் நீதித்துறையில் ஊழல்கள் பெருகிவிட்டன. ஊழல் நீதிபதிகளால் நீதித்துறைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. சுப்ரீம் கோட்டின் முன்னாள் நீதிபதிகள், அவர்களுக்கு பிறகு நீதிபதிகளாக வந்தவர்கள் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 16 பேர் ஊழலில் ஈடுபட்டதாகவும், அதில் 8 நீதிபதிகள் நிச்சயமாக ஊழல் புரிந்துள்ளதாகவும் அதில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக இருந்த ரங்கநாத்மிஸ்ரா, கே.என்.சிங், எம்.எச்.கனியா, எல்.எம். ஷர்மா, எம். வெங்கடாசலய்யா, ஏ.எம்.அகமது, ஜெ.எஸ். வர்மா, எம்.எம். பூஞ்சி, ஏ.எஸ்.ஆனந்த், எஸ்.பி. பரூட்சா, பி.என். கிர்பால், ஜி.பி.பதக், ராஜேந்திரபாபு, ஆர்.சி.லகோதி, வி.என். காரே, ஓய்.கே.சர்பர்வால் என பட்டியலிட்டு இதில் இரண்டு நீதிபதிகள் லஞ்சம் கொடுத்து நீதிபதிகளாக பதவிபெற்றதாக தன்னிடம் தனிப்பட்ட முறையில் கூறியதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இவர்கள்மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கோரியுள்ளார். கடந்த 1972-77-ம் ஆண்டுகளில் இந்தியாவில் நெருக்கடி நிலைமை பிரகடனப்படுத்தப்படுவதற்கு முன்பு மறைந்த முன்னாள் பிரதமர் மொரர்ஜிதேசாய் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தவர் ஷாந்தி புஷானன். இவரது மகன் பிரசாந்த புஷானன் பிரபல சீனியர் வக்கீல் ஆவார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜவஹர் - சேலம்,இந்தியா
17-செப்-201016:47:13 IST Report Abuse
ஜவஹர் அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு நீதிபதிகளை நியமிக்கிறார்கள். லஞ்சம் கொடுத்தவர்கள் சும்மா இருப்பார்களா. அவர்களும் தங்கள் பங்கிற்கு மக்களுக்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு சேவை செய்கிறார்கள். இதைவிட கொடுமை சட்டம் தெரியாதவர்கள்கூட நீதிபதிகளாய் இருப்பது அதைவிட கொடுமை. தினகரனை என்ன செய்ய முடிந்தது பதவியை விட்டு தூக்க முடிந்ததா? மாவட்ட நீதிபதிகளை அடுத்தது நியமிக்கப்போகிறார்கள். ஒரு சீட்டுக்கு ஒரு கோடியாம். வாழ்க பணநாயகம்.
Rate this:
Cancel
இந்தியன் - Chennai,இந்தியா
17-செப்-201009:42:36 IST Report Abuse
இந்தியன் நீதித்துறையில் ஊழல் மலிந்து அழுகி நாறிக்கொண்டு இருக்கிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் தேவையே இன்றி 3 லட்சத்திற்கு மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே எடுக்க நபர் ஒன்றுக்கு ருபாய் 10, 000 முதல் 1 லட்சம் வரை வக்கீல்கள் விலை பேசுகின்றனர். இதன் மூலம் மட்டும் ஆண்டுக்கு ரூபாய் 8000 கோடி வக்கீல்கள் & நீதிபதிகளுக்கு வருமானம் கிடைக்கிறது. மேலும் நீதிபதிகள் நியமனம், நடத்தை விதிகள், தவறு செய்தால் தண்டிக்கும் முறைகள் எதுவுமே முறையாக வரையறுக்கப்பாடாமல், நீதித்துறை தான்தோன்றித்தனமாக செயல்படுகிறது. இந்தியாவின் வரலாற்றில் ஊழல் காரணமாக ஒரு நீதிபதியைக்கூட இதுவரை தண்டித்தது கிடையாது. இப்படிப்பட்ட நீதித்துறையின் வாசலில் நீதி கேட்டு சுமார் 10 கோடி இந்திய மக்கள் 10 வருடம், 15 வருடம் என வாழ்க்கையை தொலைத்துவிட்டு அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.
Rate this:
Cancel
G Sankaran - cupertino,யூ.எஸ்.ஏ
17-செப்-201006:49:37 IST Report Abuse
G Sankaran நீதிபதிகள் மீது பிரபல வழக்கறிஞர் முன்னாள் மத்திய மந்திரி ஊழல் புகார் கூறியிருப்பது துரதிருஷ்டவசமானது. இவர்கள் கூறிய தீர்ப்புகள் எப்படி நியாமானதாக இருந்திருக்கும்? இந்தியாவை கடவுள் தான் காப்பற்ற வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X