காஷ்மீர் பிரச்னையில் முடிவு காண அரசு ஆவல் : பிரணாப், சிதம்பரம் தலைமையில் குழு

Added : செப் 17, 2010 | கருத்துகள் (6)
Share
Advertisement
காஷ்மீர் பிரச்னையில் முடிவு காண அரசு ஆவல் : பிரணாப், சிதம்பரம் தலைமையில் குழு

புதுடில்லி : காஷ்மீர் நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக செல்லவுள்ள அனைத்துக் கட்சி குழுவில், மூத்த அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, சிதம்பரம் ஆகியோரை அனுப்பி வைக்க, காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. மூத்த தலைவர்களை அனுப்பி வைப்பதின் மூலம் இப்பிரச்னையின் பரிமாணத்தை அறிந்து, தீர்வு காண விரும்புவதில் அரசு ஆவலாக இருப்பதைக் காட்டுகிறது.


காஷ்மீரில் கடந்த மூன்று மாதங்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த மூன்று மாதங்களில் மட்டும் 90 பேர் பலியாகியுள்ளனர். மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்நிலையில், பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, டில்லியில் சமீபத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இதில், காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்படும் என்றும், இந்த குழு, காஷ்மீருக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.


குழுவில் காங்கிரஸ் சார்பில் யாரை அனுப்புவது என முடிவு செய்வதற்காக, காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நேற்று நடந்தது. காங்., தலைவர் சோனியா, இதற்கு தலைமை தாங்கினார். கட்சியின் மூத்த தலைவர்கள் பிரணாப் முகர்ஜி, சிதம்பரம், அந்தோணி, குலாம் நபி ஆசாத், பிரித்விராஜ் சவான், சய்புதீன் சோஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், காஷ்மீருக்கு செல்லும் அனைத்துக் கட்சி குழுவில், காங்கிரஸ் சார்பில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோர் இடம் பெறுவர் என்றும், இவர்கள் காஷ்மீரில் கடந்த மூன்று மாதங்களாக நிகழ்ந்து வரும் சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்து, அறிக்கை அளிப்பர் என்றும் முடிவு செய்யப்பட்டது.


அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழு, நாளை மறுநாள் காஷ்மீர் செல்லவுள்ளது. அங்கு, பொதுமக்கள், பாதுகாப்பு படையினர், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்துவதுடன், அங்கு உள்ள நிலைமை குறித்தும் இந்த குழு ஆய்வு செய்யவுள்ளது. மேலும், காஷ்மீரைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய அனைத்து கட்சிக் கூட்டம் ஒன்றை நடத்தவும், இந்த குழு திட்டமிட்டுள்ளது. கலவரம் நடந்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதன்மூலம் பிரச்னையை ஆய்வு செய்து தகுந்த தீர்வு காண அரசு முயற்சி மேற்கொள்ள வசதியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. காஷ்மீர் செல்லும் அனைத்துக் கட்சி குழுவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அக்கட்சியின் மூத்த தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பரூக் அப்துல்லா மறுப்பு: தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லா கூறுகையில்,"காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி - காங்., கூட்டணி அரசுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இந்த அரசு, தனது முழு பதவிக் காலத்தையும் பூர்த்தி செய்யும். காஷ்மீர் பிரச்னை குறித்து யூகத்தின் அடிப்படையிலான செய்திகள் அதிகம் வெளியிடப்படுகின்றன. முதல்வர் பதவிக்கு ஒமர் அப்துல்லாவை விட, திறமையான வேறு யாரும் இருப்பதாக நான் கருதவில்லை' என்றார்.


30 பயங்கரவாதிகள் பலி: இதற்கிடையே, ராணுவத்தின் தெற்கு கமாண்ட் பிரிவு செய்தித் தொடர்பாளர் பிரார் கூறுகையில்,"இந்த மாதத்தில் மட்டும், காஷ்மீரின் பல்வேறு இடங்களில் நடந்த என்கவுன்டரில் 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 15 பேர், எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் கொல்லப்பட்டனர். நேற்று மட்டும் (நேற்று முன்தினம்) ஆறு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன' என்றார்.


Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அபு - தம்மம்,இந்தியா
18-செப்-201016:17:04 IST Report Abuse
அபு பிரச்னை என்னவென்றே 99 % மக்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் தெரியாது.
Rate this:
Cancel
sathyan - புதுடில்லி,இந்தியா
18-செப்-201012:54:30 IST Report Abuse
sathyan ஐயா பிரணாப் அண்ட் சிதம்பரம், நாட்டு மக்களுக்கு தெரியும் உங்க ஆசை இந்த பிரச்னையை தீர்கணும்னு. அப்போ இதுக்கு முண்ணாடி உங்களுக்கு இதுல ஆசை இல்லையா.
Rate this:
Cancel
EV ஸ்ரீனிவாசன் - மஸ்கட்ஓமன்,ஓமன்
18-செப்-201012:16:46 IST Report Abuse
EV ஸ்ரீனிவாசன் சிதம்பரம் ஒரு காரியத்தில் தலையிட்டால் அந்த காரியம் குட்டிச்சுவர்தான் ஆகும். மாவோயிஸ்ட் பிரச்சனையை தீர்த்த வேகத்தில் இப்பொழுது காஷ்மீர் பிரச்சனையில் மூக்கை நுழைகிறார். இதுவும் கூடிய விரைவில் முடிக்கவே முடியாத பெரும் பிரச்சனையாகும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X