மக்கள் ஜனநாயக கட்சித்தலைவர் : ஜாமீன் மனு தள்ளுபடி| Dinamalar

மக்கள் ஜனநாயக கட்சித்தலைவர் : ஜாமீன் மனு தள்ளுபடி

Added : செப் 18, 2010
மதுரை: கேரளாவின் மக்கள் ஜனநாயக கட்சியின் செயல் தலைவர் அப்துல்அஜீஸின் ஜாமீன் மனுவை, மதுரை சி.பி.ஐ., கோர்ட் தள்ளுபடி செய்தது. கேரளாவின் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல்மதானி. பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் உள்ளார். இக்கட்சியின் செயல் தலைவர் அப்துல்அஜீஸ். இவர், மும்பையில் உள்ள பேங்க் ஆப் இந்தியாவில் இருந்து பெறப்பட்டதாக போலி "டிடி' தயாரித்து, மதுரை

மதுரை: கேரளாவின் மக்கள் ஜனநாயக கட்சியின் செயல் தலைவர் அப்துல்அஜீஸின் ஜாமீன் மனுவை, மதுரை சி.பி.ஐ., கோர்ட் தள்ளுபடி செய்தது. கேரளாவின் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல்மதானி. பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் உள்ளார். இக்கட்சியின் செயல் தலைவர் அப்துல்அஜீஸ். இவர், மும்பையில் உள்ள பேங்க் ஆப் இந்தியாவில் இருந்து பெறப்பட்டதாக போலி "டிடி' தயாரித்து, மதுரை வடக்குமாசிவீதியில் உள்ள மகாராஷ்டிரா வங்கியில் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்ததாக சி.பி.ஐ.,யினர் 1994ல் வழக்குப்பதிவு செய்தனர்.இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த அப்துல்அஜீஸை, பெங்களூருவில் கடந்த செப்.,3ம் தேதி சி.பி.ஐ.,அதிகாரிகள் கைது செய்து, மதுரை சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி ஜெகநாதன் உத்தரவுப்படி, அப்துல்அஜீஸ் ரிமாண்ட் செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். சி.பி.ஐ., வக்கீல் ரோசாரியா சுந்தர்ராஜ் ஆட்சேபம் தெரிவித்தார். விசாரணை நடத்திய நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X