விக்கிரவாண்டி கோவில் முன் சாமியார் திடீர் உண்ணாவிரதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விக்கிரவாண்டி கோவில் முன் சாமியார் திடீர் உண்ணாவிரதம்

Added : மே 29, 2010 | கருத்துகள் (2)

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் கோவிலை புதுப்பிக்க கோரி சாமியார் ஒருவர் திடீர் உண்ணாவிரதம் இருந்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. தற்போது பழுதடைந்துள்ள இக்கோயிலை கிராம பொதுமக்கள் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டி நேற்று காலை 9 மணிக்கு திருவாரூர் மாவட்டம் திருகண்ணக்குடியை சேர்ந்த நமச்சிவாய நாராயணசாமி கோயிலின் முன்பு ராதாகிருஷ்ண நடனமாடி உண்ணாவிரதம் இருந்தார். நேற்று காலை முதல் கோவில் முன் இரவு 8 மணி வரை அமர்ந்திருந்த அவரை யாரும் விசாரிக்க முன்வரவில்லை. இன்றும்(29ம் தேதி) உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர் கூறினார்.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X