அரசியல் செய்தி

தமிழ்நாடு

திராவிட கட்சிகள் கூட்டத்தை விட அதிக கூட்டத்தை திரட்ட வேண்டும்:காங்., செயற்குழு

Added : செப் 21, 2010 | கருத்துகள் (14)
Share
Advertisement
திராவிட கட்சிகள் கூட்டத்தை விட அதிக கூட்டத்தை திரட்ட வேண்டும்:காங்., செயற்குழு

சென்னை:""திருச்சியில் அ.தி.மு.க., - தி.மு.க., நடத்திய கூட்டங்களை விட, சோனியா, ராகுல் பங்கேற்கும் கூட்டங்களுக்கு தொண்டர்களை அதிகளவில் அழைத்து வர வேண்டும் என, காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் பேசினர்.


தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம், சத்தியமூர்த்திபவனில் நேற்று நடந்தது.மாநில தலைவர் தங்கபாலு தலைமை வகித்து பேசும் போது, "திருச்சியில் அடுத்த மாதம் 9ம் தேதி நடக்கும் காங்கிரஸ் விழாவில் பங்கேற்கும் சோனியாவுக்கும், இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடக்கும் பாதயாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கும் ராகுலுக்கும், சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து மட்டும் பேச வேண்டும். மற்ற விஷயங்களை பற்றி பேச வேண்டாம்' என்றார்.முன்னாள் தலைவர் குமரி அனந்தன்: காங்கிரஸ் கட்சியின் 125 ஆண்டு கால சாதனைகளையும், கட்சி வரலாறை விளக்கும் விஷயங்களையும் புத்தகமாக அச்சடித்து, பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.


முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசு: காங்கிரஸ் கட்சியில் முதலில் நான் இணைந்தேன். திருச்சியில் நடக்கும் விழாவில் என் ஆதரவாளர்கள் இணைகின்றனர். தொண்டர்கள் அனைவரும் ஆதரவு அளித்து, வெற்றி விழாவாக்க வேண்டும்.அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன்: மகளிருக்கு 33 சதவீத ஒதுக்கீடு மசோதாவை ராஜ்யசபாவில் நிறைவேற்றுவதற்கு சோனியா அரும்பாடுபட்டார். அம்மசோதா லோக்சபாவில் நிறைவேற்றும் முயற்சியும் நடந்து வருகிறது.
இதற்கு பக்கபலமாக இருக்கும் சோனியாவை திருச்சியில் பாராட்ட வேண்டும்.


அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்: அதிக தொண்டர்களை கொண்டு வருவதை போலவே, அதிகளவில் விளம்பரம் செய்ய வேண்டும். திராவிடக் கட்சிகளுக்கு இணையாக அரசியல் செய்ய வேண்டும் என்றால், அதிக கூட்டத்தை கூட்ட வேண்டும். அப்போது தான் தேர்தல் நேரத்தில் நமக்கு உரிய மரியாதை கிடைக்கும்.


முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன்: இது மாதிரியான கூட்டத்தை அடிக்கடி தங்கபாலு நடத்த வேண்டும். திருச்சியில் அ.தி.மு.க., - தி.மு.க., நடத்திய கூட்டம் போல, பெரிய கூட்டத்தை கூட்ட வேண்டும். அப்போது தான் காங்கிரசாருக்கு தனி மரியாதை கிடைக்கும். வரும் காலத்தில் அரசியல் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். அதை எதிர்நோக்கி நம் சக்தியை வெளிப்படுத்த வேண்டும்.ஒவ்வொரு பெரிய தலைவர்களுக்கும் மூன்று மாவட்டங்களை ஒதுக்கி தரவேண்டும். அந்த மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்தி கூட்டத்தை அழைத்து வரவேண்டும். நான் மூன்று மாவட்டங்களுக்கு பொறுப்பேற்க தயாராக இருக்கிறேன்.


கடந்த 1972ம் ஆண்டு, மூப்பனார் தலைமையில் இந்திரா காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் இணைப்பு விழா சென்னையில் நடந்தது. பின், மதுரையில் காங்கிரஸ், த.மா.கா., இணைப்பு விழா வாசன் தலைமையில் நடந்தது. இந்த இரு விழாக்களும் பிரமாண்டமாக நடந்தது. அப்படியொரு கூட்டத்தை திருச்சியில் கூட்ட வேண்டும். அப்போது தான் இரு திராவிடக் கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்ப முடியும்.


மத்திய அமைச்சர் வாசன்: அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இது தேர்தல் காலம். காங்கிரஸ் கட்சியின் பலத்தை காட்ட வேண்டும். திருச்சியில் சோனியா பங்கேற்கும் விழாவும், இளைஞர் காங்கிரசாரின் பாதயாத்திரை நிறைவு நாளில் ராகுல் பங்கேற்கும் விழாவையும் பெரிய அளவில் நடத்த வேண்டும். பிரமாண்டமான முறையில் கூட்டத்தை கூட்ட வேண்டும். நமது குடும்ப விழாவாக கருத வேண்டும்.சோனியா வழிகாட்டுதலின் பேரில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்து வரும் மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் இளைஞர் காங்கிரசாரின் பாதயாத்திரையில் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இளைஞர்கள் காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்.


மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத்: அதிக எண்ணிக்கை எம்.எல்.ஏ.,க்கள் தமிழகத்திற்கு கிடைத்தால் தான், ராஜ்யசபா எம்.பி.,க்கள் பலம் அதிகரிக்கும். விரைவில் மேலவை தேர்தல் வரவுள்ளது. மேலவையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதிக பிரிதிநிதிகளை உருவாக்க முடியும். சோனியா, ராகுல் பங்கேற்கும் கூட்டத்திற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். அதிக தொண்டர்களை வரவழைத்து வெற்றி பெற வைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.


சத்தியமூர்த்திபவனில் குலாம் நபி ஆசாத், தங்கபாலு இருவரும் காரிலிருந்து இறங்கிய போது, "இளங்கோவன் வாழ்க' என அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். குலாம் நபி ஆசாத் வருவதற்கு முன்பே வாசன் தனது ஆதரவாளர்கள் புடை சூழ சத்தியமூர்த்திபவனுக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.கூட்டத்தில் இளங்கோவன் பேசி முடித்ததும் உடனே தனது ஆதரவாளர்களுடன் அவர் வெளியேறினார். எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டத் தலைவர்கள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன், முன்னணி தலைவர்கள் அனைவருடன் குலாம்நபி ஆசாத் தனியாக ஆலோசனை நடத்தினார்.


Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வி.கே.லோகநாதன் - REDHILLS,இந்தியா
22-செப்-201015:32:10 IST Report Abuse
வி.கே.லோகநாதன் காங்கிரஸ் தலைவர்கள் தமிழ் நாட்டில் எத்தனைபேர் என்று முதலில் தெரிஞ்சிகுங்கோ..? அண்ணா தி மு.க இந்த முறை ஆட்சி அமைக்கும் என்று தைரியமாக சொல்கிறார்கள். தி.மு.க நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம் என்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் சொல்ல முடியுமா? இதையே தெரியாதா தலைவர்கள் கூடிவிட்டோம் என்பதற்காக ஆளாளுக்கு பேசினால் என்ன பயன்.முதலில் அமைச்சரவையில் நுழைவது எப்படி என்ற அலசி பாருங்கள். பதில் .....கிடைக்கும்.இல்லை என்றால் என்னை சந்தியுங்கள் ......!.
Rate this:
Share this comment
Cancel
பிரவீன் - சன்,இந்தியா
22-செப்-201015:31:24 IST Report Abuse
பிரவீன் இந்த வெயில்ல இந்த காமடி !!!!
Rate this:
Share this comment
Cancel
விஜய் - சென்னை,இந்தியா
22-செப்-201014:33:12 IST Report Abuse
விஜய் இந்த காங்கிரஸ் காரர்கள் என்னத்தான் காசு கொடுத்து கூட்டம் கூட்டினால் கூட அந்த கூட்டத்துக்கு வர்றவங்க யாரும் இந்த காங்கிரஸ் கட்சிக்கு ஒட்டு போடமாட்டாங்க. இந்த முறை உங்களுக்கு திமுக ஒரு 50 சீட்டு கொடுத்து 49 இடத்துல உங்கள திமுகாவே தோக்கடிக்க போகுது. சுகந்திர இந்தியாவின் சாபக்கேடே இந்த காங்கிரஸ் கட்சிதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X