பொது செய்தி

இந்தியா

காமன்வெல்த் மைதான மேற்கூரை இடிந்தது: போட்டிக்கு மீண்டும் சோதனை

Updated : செப் 24, 2010 | Added : செப் 22, 2010 | கருத்துகள் (134)
Advertisement

புதுடில்லி : டில்லி காமன்வெல்த் போட்டிக்கு இன்னொரு சோதனை. ஜவஹர்லால் நேரு மைதானத்தில் உள்ள பளுதூக்குதல் மையத்தின் மேற்கூரை நேற்று இடிந்து விழுந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்பட வில்லை.


டில்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் (அக். 3-14) நடக்க உள்ளன. இதற்கான கட்டுமானப்பணிகள், ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு காரியங்களில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்து உள்ளது. போட்டி நடக்க உள்ள மைதானங்கள், விளையாட்டு கிராமம் போன்றவை தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளன. அதிலும் முக்கியமான ஜவஹர்லால் நேரு மைதானத்தின் நிலைமை படுமோசமாக உள்ளது. முதலில் மைதானத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அப்போது டில்லி துணை கமிஷனர் உள்ளிட்ட 2 போலீசார் காயமடைந்தனர். நேற்று முன் தினம் மைதானத்திற்கு வெளியே உள்ள நடை மேம்பாலம், இடிந்து நொறுங்கியதில் 27 தொழிலாளர்கள் பலத்த காயம் அடைந்தனர்.


மேற்கூரை இடிந்தது: இதன் தொடர்ச்சியாக நேற்று இம்மைதானத்தில் உள்ள பளுதூக்குதல் மையத்தின் அலங்கார மேற்கூரை இடிந்து விழுந்தது. அதிலிருந்து 2 அடி நீளமுள்ள 3 ஓடுகள் மட்டுமே விழுந்ததால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கடந்த 3 நாட்களில் 3 வது முறையாக மைதானத்தில் சில பகுதிகள் இடிந்து விழுந்ததால், காமன்வெல்த் போட்டிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


இது குறித்து டில்லி பொதுப்பணித்துறை இயக்குனர் பி.கே.ஜங்க் கூறுகையில், "" பளுதூக்குதல் மையத்தின் மேற்கூரை முற்றிலுமாக இடிந்து விட வில்லை. கட்டுமான ஊழியர்கள் ஓடுகளை பதித்துக் கொண்டிருக்கும் போது, இச்சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து விசாரித்து வருகிறோம்,'' என்றார்.


முதல்வர் உறுதி: டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் கூறுகையில்,""பளுதூக்குதல் மையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது சாதாரண சம்பவம். இதனால் காமன்வெல்த் போட்டிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இம்மாதிரியான சிறிய நிகழ்வுகளுக்காக, போட்டிகளை ஒட்டுமொத்தமாக நிறுத்தி விட முடியாது. இது என் விளையாட்டோ, உங்கள் விளையாட்டோ அல்ல. இந்திய நாட்டின் கவுரவம் சம்பந்தப்பட்டது. மிகப் பெரிய போட்டிகளை நடத்தும் போது, சிறிய பிரச்னைகள் வருவது இயற்கை தான்,'' என்றார்.


இறுதி கெடு : காமன்வெல்த் போட்டிகள் தொடர்பாக, அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களுக்கு முன்னணி நாடுகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன. இது குறித்து இங்கிலாந்து காமன்வெல்த் கூட்டமைப்பு தலைவர் ஆன்ட்ரூ பாஸ்டர் கூறுகையில்,"" விளையாட்டு கிராமம் தான் தற்போது பெரிய பிரச்னை. வீரர், வீராங்கனைகள் இங்கு தான் தங்க உள்ளனர். இதில், குறைபாடு உள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. அடுத்த 24 முதல் 48 மணி நேரம் மிகவும் முக்கியமானவை. இதற்குள் மைதானம், விளையாட்டு கிராமம் ஆகியவை தயார் நிலையில் இருக்க வேண்டும். இது குறித்து காமன்வெல்த் ஒருங்கிணைப்பு கமிட்டி உறுதி அளிக்க வேண்டும். அதற்குப் பின் தான் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்பது குறித்து இறுதி முடிவு செய்யப்படும்,'' என்றார். போட்டிகளில் பங்கேற்க, இன்று டில்லி கிளம்பவிருந்த ஸ்காட்லாந்து அணியினர், தங்களது பயணத்தை தள்ளி வைத்துள்ளனர். இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இதுவரை எந்த நாட்டை சேர்ந்தவர்களும், டில்லிக்கு வரவில்லை.


முன்னணி வீரர்கள் விலகல் :பாதுகாப்பு பிரச்னை காரணமாக காமன்வெல்த் போட்டியில் இருந்து இங்கிலாந்தின் "டிரிபிள் ஜம்ப்' வீரர் பிலிப்ஸ் இடோவு விலகியுள்ளனர். இதே போல ஒலிம்பிக் 400 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்ற இங்கிலாந்தின் தடகள வீராங்கனை கிறிஸ்டியன் ஒகுருகு, மெல்போர்ன் காமன்வெல்த், 1500 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்ற லிசா டோப்ரிஸ்கி ஆகியோரும் விலகியுள்ளனர்.


பெனல் வருகை : காமன்வெல்த் போட்டிக்கான விளையாட்டு கிராமம் இன்று அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட உள்ளது. திறப்பு விழாவில் பங்கேற்க காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் மைக்கேல் பெனல் இன்று டில்லி வருகிறார். காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து, ஒருங்கிணைப்பு கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ள இவர், பிரதமர் மன்மோகனையும் சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.


Advertisement
வாசகர் கருத்து (134)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murugan - madurai,இந்தியா
24-செப்-201010:03:11 IST Report Abuse
murugan intha latchanathil Olympic ellam namma natil nadakathu ethana thalaimurai vanthalum
Rate this:
Share this comment
Cancel
karthik - bangalore,இந்தியா
24-செப்-201001:33:00 IST Report Abuse
karthik முதலில் விளையாட்டு துறைக்கு அமைச்சராக ஒரு முன்னாள் விளையாட்டு வீரரை நியமிப்பதுதான் நியாயம்,கண்டவனை எல்லாம் அமைச்சர் ஆக்கினால் இப்படித்தான் அவமானப்பட நேரிடும்.ஹூம்..நடந்ததை பற்றி என்ன சொல்ல..."பணம் தின்னும் நாய்கள்" அவனவன் ராத்திரி பகலா கண்முழிச்சி கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்துக்கு tax கட்டினா,இவனுங்க சும்மா உக்காந்துக்கிட்டு அதை அனுபவிக்கிறது இல்லாம,நம்ம நாட்டோட மானத்த எச்ச காசுக்கு விக்கிறானுங்க..முதல்ல இவங்களுக்கு ஓட்டு போடறவன ஒதைக்கணும்..(அதுவும் அவங்களே போட்டுக்கிறாங்க!)
Rate this:
Share this comment
Cancel
நேதாஜி - ராம்நாத்,இந்தியா
24-செப்-201000:19:02 IST Report Abuse
நேதாஜி அரசியல்வாதி இட்ட பிச்சை காசு வாங்கிட்டு ஓட்டு போட ஆட்கள் இருக்கும் போது நீங்கள் நான் கத்தி No Use.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X