வாஷிங் மிஷினில் குழந்தை கொலை போலீசில் மனநோயாளி தாய் சரண்

Added : செப் 24, 2010
Advertisement

சேர்த்தலா: வாஷிங் மிஷினில் தன் எட்டு மாத ஆண் குழந்தையை போட்டு கொலை செய்த தாய், போலீசில் சரணடைந்தார். அவர், மனநோயாளியா என போலீசார் விசாரிக்கின்றனர். கேரள மாநிலம் ஆலப்புழா அருகே சேர்த்தலா தெற்கு பகுதியில் ஆர்த்தங்கல்லைச் சேர்ந்தவர் ஜான் மார்க்கோஸ்(46); எர்ணாகுளத்தில் தனியார் ஓட்டலில் பணியாற்றுகிறார்; இவரது மனைவி சுமா(40). இவர்களது மகள் மிலன் மரியா(10), ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். ஷாரோன் என்ற எட்டு மாத ஆண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் பிற்பகல் 3.30 மணிக்கு, வாஷிங் மிஷினில் நீரை நிரப்பிய சுமா, அதில் குழந்தையை அமுக்கி, வாஷிங் மிஷினை மூடினார். சிறிது நேரம் கழித்து மூடியை திறந்த அவர், குழந்தை இறந்து விட்டதை உறுதி செய்தார். பிறகு, அங்கிருந்து பஸ் மூலம் ஆலப்புழா சென்று, அங்கிருந்து ஆட்டோவில் சென்ற அவர், தான் ஒரு குற்றம் செய்து விட்டதாகவும் யாரிடம் புகார் செய்ய வேண்டும் என, கேட்டதை தொடர்ந்து, போலீஸ் நிலையத்திற்கு ஆட்டோ டிரைவர் அழைத்துச் சென்றார். சுமாவிடம் விசாரணை நடத்திய போலீசார், அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று, வாஷிங் மிஷினில் இறந்து கிடந்த குழந்தையின் சடலத்தை கைப்பற்றினர். குழந்தையை நீரில் அமுக்கி கொடூரமாக கொலை செய்த இவர், ஏற்கனவே தற்கொலை செய்து கொள்ள கை நரம்புகளை அறுத்துக் கொண்டதும் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து அவர் மனநோயாளியா என போலீசார் விசாரிக்கின்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X