இந்தியா

பாலாற்றின் குறுக்கே அணை கட்டியே தீருவோம்: ஆந்திர அமைச்சர்

Updated : செப் 24, 2010 | Added : செப் 24, 2010 | கருத்துகள் (2)
Share
Advertisement

வாணியம்பாடி: பாலாற்றின் குறுக்கே அணை கட்டியே தீருவோம் என்று ஆந்திர நீர்பாசனத்துறை அமைச்சர் பொன்னால லெட்சுமணய்யா தெரிவித்துள்ளார். ஆந்திரம் மாநிலம் குப்பம் அருகே உள்ள கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா நடப்பதாக அறிவித்து, அதில் பங்கேற்பதற்காக ஆந்திர வனத்துறை அமைச்சர் பெத்தராமச்சந்திர ரெட்டியும், நீர்பாசனத்துறை அமைச்சர் பொன்னால லெட்சுமணய்யா ஆகியோர் வந்திருந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அங்கு அதுபோன்று எதுவும் நடக்கவில்லை. இரண்டு அமைச்சர்களும் அணை கட்டுவதற்கான வரைபடத்துடன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்கள் ஆந்திர மக்களின் குடிநீர் தேவைக்காக பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது உறுதி என்றும், இதனை பெருந்தன்மையுடன் தமிழக அரசு விட்டு கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
விக்ரம் - கோவை,இந்தியா
24-செப்-201012:19:56 IST Report Abuse
விக்ரம் கருணாநிதி தானே முதல்வர்.அப்புறம் என்ன? அவரு ஒன்னும் கண்டுக்க மாட்டார்.ஒரு லட்சம் கோடி அடிச்சுட்டான்.அவனுக்கு என்ன கவலை?சென்னை குறுக்கே ஒரு டேம் கட்டினாலும் அவர் ஒன்னும் சொல்ல மாட்டார்.
Rate this:
Cancel
விஜய் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
24-செப்-201008:21:01 IST Report Abuse
விஜய் தமிழனுக்கு எங்கே போனாலும் ஆப்புதான் காவிரி. முல்லை பெரியாறு. இப்போ பாலாறு.நமக்குன்னு எதுவுமே இல்லையா? தமிழக அரசியல் வாதிகளே என்னதண்ட செய்றீங்க?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X