சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவியருக்கு பாலியல் தொந்தரவு : கிறிஸ்தவ போதகரின் காப்பகம் மூடல்

Added : செப் 27, 2010 | கருத்துகள் (26)
Advertisement
மாணவியருக்கு பாலியல் தொந்தரவு : கிறிஸ்தவ போதகரின் காப்பகம் மூடல்

தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகே பள்ளி மாணவியருக்கு, பாலியல் தொந்தரவு தந்த கிறிஸ்தவ போதகர் நடத்திய காப்பகம் மூடப்பட்டது. அது, அனுமதியின்றி செயல்பட்டது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திருச்செந்தூர் அருகே தட்டார்மடம் அடுத்த மணிநகரில் தனியார் தோட்டத்தில், கிறிஸ்தவ மதபோதகர் சவுந்தரராஜன்(56), கடந்த ஏழு ஆண்டுகளாக ஜெபக்கூடம் நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாக மகன் ஜெபஸ்டின் கிறிஸ்டோபர்(25) இருந்து வருகிறார். அதனுள்ளேயே, சவுந்தரராஜன் நடத்திய காப்பகத்தில் கோவை, ஈரோடு, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆதரவற்ற, ஏழை மாணவர்கள் 22 பேரும், மாணவியர் 12 பேரும் தங்கியிருந்தனர்.

அவர்கள், அருகிலுள்ள பள்ளிகளில் படித்தனர். அங்கு மாணவியர் பலருக்கு, இரவு நேரத்தில் பாலியல் தொந்தரவு தரப்படுவதாக தொடர்ந்து புகார் வந்தது. அங்கு செப்., 24 இரவு போலீஸ், சமூக நலத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, அங்கிருந்த சிறுவர், சிறுமியரை மீட்டு, ஸ்ரீவைகுண்டம் அரசு விடுதிக்கு அனுப்பினர்.

தூத்துக்குடி மாவட்ட சமூகநல அலுவலர் முத்துநாயகம், புகாரில், மதபோதகர் சவுந்தரராஜன், மகன் கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டனர். மாணவியரை கட்டாயப்படுத்தி, இயற்கைக்கு மாறான வழியில் அவர்களுக்கு பாலியல் தொந்தரவு தந்ததாகவும், அதை வெளியே சொல்லக் கூடாது என, மிரட்டியதாகவும் கைதானவர்கள் வாக்குமூலமளித்தனர். தலைமறைவாக உள்ள சவுந்தரராஜனின் மற்றொரு மகன் உதய பால ஜெபசிங்கை போலீசார் தேடுகின்றனர்.

காப்பகம் மூடல்: இதுகுறித்து, தூத்துக்குடி கலெக்டர் பிரகாஷ் கூறியதாவது: மாவட்டத்தில் மொத்தம் 72 தனியார் காப்பகங்கள் உள்ளது தெரிந்துள்ளது. அவற்றில், 35 காப்பகங்கள் முறையான அனுமதி பெற்றுள்ளன. மேலும், சில அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளன. ஆனால், பாலியல் புகாரில் இருவர் கைது செய்யப்பட்ட அந்த காப்பகம் அனுமதி பெறாமல் நடந்துவந்துள்ளது.

அந்த காப்பகம் மூடப்பட்டுவிட்டது. எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்கும் பொருட்டு, காப்பகங்களின் உரிமையாளர் யார், அதில் எத்தனை பேர் உள்ளனர் என்பன போன்ற முழுவிவரங்கள் அடங்கிய தகவல் அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் சேகரித்து வைக்கப்படும். இதற்காக வருவாய்த்துறை,சமூகநலத்துறை, போலீஸ்துறை உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழு கூட்டம் விரைவில் நடத்தப்படவுள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mahendran - dhahran,சவுதி அரேபியா
29-செப்-201000:13:44 IST Report Abuse
mahendran பிரான்சிஸ் Raymond - Abudhabi,இந்தியா, இதை சன் டிவி படம் பிடிக்க வேண்டியது தானா? இந்த திராவிட கட்சிகாரர்களுக்கு இந்து மத ஆட்கள் மலசலம் கழிச்சா கூட போட்டோ எடுத்து போடுறது. கிறிஸ்துவ சாமியார் தப்பு பண்ணிட்டு பாவ மன்னிப்பு கேட்டுகிறான்.
Rate this:
Share this comment
Cancel
பிரான்சிஸ் Raymond - Abudhabi,இந்தியா
28-செப்-201022:29:10 IST Report Abuse
பிரான்சிஸ் Raymond எதையும் தெரியாமல் புலம்பாதிர்கள். எதோ ஒரு பெந்தகோஸ்தேகாரன் தவறு செய்துள்ளான் என்பதற்காக பாத்ரியார்கள் என்று கூறாதிர்கள். அவர்கள் பைபிள் பெயரை சொல்லி பணம் சம்பாதிக்கிற கூட்டம். புரிந்து பேசுங்கள் ப்ளீஸ்
Rate this:
Share this comment
Cancel
SIVAM SIREVADARA - arni,இந்தியா
28-செப்-201021:38:38 IST Report Abuse
SIVAM SIREVADARA அவர்கள் எங்கள் மண்ணில் வந்திறங்கினர். அப்போது அவர்கள் கையில் பைபிள். எங்கள் கையில் பூமி. பைபிளை தந்தனர். கண்ணை மூடி ஜெபம் செய்ய சொன்னார்கள். இப்போது எங்கள் கையில் வெறும் பைபிள். அவர்கள் கையில் எங்கள் பூமி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X