பொது செய்தி

தமிழ்நாடு

கட்டாய திருமண பதிவு சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை

Added : செப் 28, 2010 | கருத்துகள் (3)
Advertisement

மதுரை : ""கட்டாய திருமண பதிவு சட்டத்தில் இருந்து கிறிஸ்தவ திருமணங்களை பதிவு செய்ய விலக்கு அளிக்க வேண்டும்,'' என இந்திய தேசிய அப்போஸ்தல பேராயர் பால் ஆர்.டி.மாறன் கேட்டு கொண்டார். மதுரையில் அவர் கூறியதாவது: அப்போஸ்தல பேராயத்தின் கீழ் இயங்கும் இறையியல் பல்கலை சார்பில் 10வது பட்டமளிப்பு விழா, இன்று மதுரையில் நடக்கிறது. 20 மாநிலங்களில் நான்காயிரம் போதகர்களுக்கு, முதற்கட்டமாக இறையியல் பட்டயக்கல்வி, குருத்துவ பயிற்சி தரப்பட்டுள்ளது. இந்தாண்டு தெய்வத்துவ இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற, 465 பேருக்கு, இன்றைய விழாவில் பட்டம் வழங்கப்படுகிறது.

மத்திய, மாநில அரசுகள், அந்தந்த மத குருக்களுக்கு தேசிய மனித நேய நல்லிணக்க வகுப்புகளை நடத்த வேண்டும். கிராம பூஜாரிகள், இஸ்லாமிய உலமாக்களுக்கு இருப்பது போல, கிறிஸ்தவ ஊழியர்களுக்கும், நல வாரியம் ஏற்படுத்த வேண்டும்.

கிறிஸ்தவர்கள், ஏற்கனவே திருச்சபைகளில் இந்திய கிறிஸ்துவ திருமண பதிவு சட்டம் 1872ன்படி, அரசு பதிவு துறையில் பதிவு செய்கின்றனர். தற்போது அரசு கட்டாய திருமண பதிவு சட்டம் 2009 ஐ கொண்டு வந்துள்ளது.

இதனால், கிறிஸ்தவர்கள் இரு முறை திருமணத்தை பதிவு செய்ய வேண்டியுள்ளது. கட்டாய திருமண பதிவு சட்டத்திலிருந்து கிறிஸ்தவ திருமணங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும், என்றார்.


Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கணேஷ் - மாலத்தீவுகள்,மாலத்தீவு
28-செப்-201009:58:34 IST Report Abuse
கணேஷ் இந்த மாதிரியான மனுக்களை அரசு ஏற்றுக்கொள்ளக் கூடாது..., இந்தியர் அனைவரும் கட்டாய திருமண பதிவு செய்ய வில்லையெனில் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் ரத்து செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
சூர்யா - எஸ்செக்ஸ்,யுனைடெட் கிங்டம்
28-செப்-201006:57:46 IST Report Abuse
சூர்யா இந்தியக் குடிமக்களாக எல்லோரும் தங்களின் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும். இதில் விதிவிலக்கு மதி விலக்கு ena குளிர்காயக் கூடாது.
Rate this:
Share this comment
Cancel
Raja - Pudukottai,இந்தியா
28-செப்-201006:51:08 IST Report Abuse
Raja சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் சலுகைகள் போதாதென்று மதமாற்றும் ஊழியம் செய்யும் இவர்களுக்கும் அரசு உதவி செய்ய வேண்டுமாம். கலைஞர் ஓட்டுக்காக கட்டாயம் செய்வார். வெளிநாட்டிலிருந்து வருகின்ற மதமாற்றத்திற்காக செலவிடப்படுகின்ற கோடிக்கணக்கான பணத்தையும் ஊழியங்கள் என்ற பெயரில் வசுல் செய்து செலவிடும் தொகையையும் செலவழித்தாலே தமிழக மக்களுக்கே அன்னதானம் செய்யலாம். மதச்சார்பற்ற நாட்டில் எல்லா மதங்களும் சமமாக நடத்தப்பட வேண்டும். சிறுபான்மையினரின் சலுகை நீக்கப்பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X