இந்தியா மாறியதாக புகார் : குரேஷியின் அதிகாரப்பேச்சு

Added : செப் 29, 2010 | கருத்துகள் (1)
Advertisement
இந்தியா மாறியதாக புகார் : குரேஷியின் அதிகாரப்பேச்சு

நியூயார்க் : "ஐ.நா., பொதுக் கூட்டத்தின் போது நான் சந்திக்கத் தயாராக இருந்த போதும், இந்தியா தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு விட்டது' என, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி குற்றம் சாட்டியுள்ளார்.


அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கடந்த வாரம் முதல், ஐ.நா., சபை பொதுக் கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் ஆகியோர் நியூயார்க் வந்திருக்கின்றனர்.பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷியும், நியூயார்க் பயணம் மேற்கொண்டிருப்பதால், இருநாட்டு அமைச்சர்களும் சந்தித்துக் கொள்வர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தச் சூழலில் சந்திப்பு நடக்க வாய்ப்பில்லை என்று நேற்று முன்தினம் மாலை எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார். மேலும் அவர், ஐ.நா., பொதுச் சபை மற்றும் மக்கள் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களில், குரேஷி காஷ்மீர் பிரச்னை குறித்துப் பேசிவருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்."உள்நாட்டுப் பிரச்னையிலிருந்து மக்களைத் திசை திருப்புவதற்காக குரேஷி காஷ்மீர் பிரச்னையை எழுப்புகிறார்' என்றும் அவர் குற்றம்சாட்டினார்.


இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த குரேஷி, "எங்கு வேண்டுமானாலும் சந்திக்க நான் தயாராக இருப்பதாக தெரிவித்தேன். நான் தங்கியிருக்கும் ரூஸ்வெல்ட் ஓட்டலுக்கு வரும்படி கிருஷ்ணாவுக்கு அழைப்பு விடுத்தேன். அதில் ஏதாவது பிரச்னை இருந்தால், அவர் தங்கியிருக்கும் இடத்துக்கு நானே வருவதாகவும் கூறியிருந்தேன். அவர் ஏன் வரவில்லை என்பதை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும். பாக்., தரப்பில் எந்தக் குறைபாடும் இல்லை' என்று தெரிவித்தார். 


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கருத்து கண்சாமி - திண்டுக்கல்,இந்தியா
30-செப்-201013:08:06 IST Report Abuse
கருத்து கண்சாமி உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட. மாத்தி மாத்தி இப்டி கேட்டு புளிச்சு போச்சி..எதாவது புது சரக்கு எடுத்து விடுங்கப்பா..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X