பாடம் கற்றுக்கொடுக்க வேண்டாம் : பாகிஸ்தானுக்கு கிருஷ்ணா கண்டிப்பு

Updated : அக் 01, 2010 | Added : செப் 29, 2010 | கருத்துகள் (8)
Advertisement

  

நியூயார்க் : மனித உரிமை பற்றியும், ஜனநாயகத்தைப் பற்றியும் பாகிஸ்தான் எங்களுக்கு பாடம் நடத்த தேவையில்லை என மத்திய அமைச்சர் கிருஷ்ணா, ஐ.நா., சபையில் தெரிவித்துள்ளார்.


ஐ.நா., பொது சபை கூட்டத்தில் நேற்று முன்தினம் உரையாற்றிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி, காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினரின் அத்துமீறல் குறித்தும், காஷ்மீருக்கு சுயநிர்ணயம் குறித்து ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் எனவும் பேசினார். இதற்கிடையே நேற்று ஐ.நா., பொது சபையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பேசினார். அவர் பேசியதாவது: காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள், காஷ்மீரை குறி வைத்து செயல்படுகின்றன. இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகள் செயல்படுவதற்கு பாகிஸ்தான் அனுமதியளிக்கக் கூடாது. பாகிஸ்தான் கொடுத்துள்ள வாக்குறுதி படி, இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் பயங்கரவாதிகளை ஒடுக்க வேண்டும். ஜனநாயகம் குறித்தும், மனித உரிமை குறித்தும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு பாடம் நடத்த தேவையில்லை. அண்டை நாடுகளுடன் இந்தியா நல்ல உறவை பேணிக் காக்க உறுதி பூண்டுள்ளது. இந்தியாவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை துவங்குவதற்குரிய சூழலை பாகிஸ்தான் ஏற்படுத்த வேண்டும். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கிருஷ்ணா பேசினார்.


Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஈழவேந்தன் - செமின்கிரேனியர்மொரிசியஸ்,மொரிஷியஸ்
30-செப்-201021:47:31 IST Report Abuse
ஈழவேந்தன் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் இந்தியா முழுவதும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள் .நமது ராணுவ வீரர்கள் தங்கள் உயிரை இழந்து அவர்களை பிடித்தால் அந்த பயங்கரவாதிகளுக்கு உயர்தர பாதுகாப்புடன் பிரியாணியும் கொடுத்து உபசரிக்கிறீர்கள் .பாகிஸ்தான் ராணுவம் தினமும் எல்லையில் ஊடுருவிகிறது என்று சொல்கிறீர்கள் ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை .பாகிஸ்தானுக்கு உதவுவதை முதலில் நிறுத்துங்கள் .நம் பணத்தை வாங்கி கொண்டு நமக்கே ஆட்டம் காண்பிக்கிறான் .பாகிஸ்தானை ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பது எப்படி இருக்கிறது என்றால் நாம் அவர்களிடம் பிச்சை எடுப்பது போல் உள்ளது .
Rate this:
Share this comment
Cancel
கோபி - சென்னை,இந்தியா
30-செப்-201015:59:44 IST Report Abuse
கோபி பேச்சல்லாம் நல்லாத்தான் இருக்குது. ஆனா நம்ப ஊருல நடக்கும் தேர்தல் கூத்துக்கு முன்னாடியே முஷரப்பு அடாவடி தேர்தல் நடத்தி இந்திய அரசியல் வாதிகளுக்கு முன்னோடியா இருந்திருக்குறாருன்ற உண்மையை கிருஷ்ணா மறந்துட்டாரு.
Rate this:
Share this comment
Cancel
வெங்கட்ராம் shrinivas - chennai,இந்தியா
30-செப்-201014:26:46 IST Report Abuse
வெங்கட்ராம் shrinivas Kashmir is never an issue as Pakistan has absolutely no locus standi to stake its claim or talk of it. History has proved that it was Dr.Karani Singh the then Maharaja of Kashmir (father of Dr.Karan Singh) un conditionally ceded Kashmir toi the Union of India immediately after partition. Partition has been raising the bogey of Kashmir just to quieten its population to hide its own pit falls just our politicians use the tool of secularism in India. The only lesson we ought to teach Pakistan to wipe out all terrorist elements just as the US did immediately after the 9/11 attach at New York at Afganistan. No mercy or human right violation can be said to be involved in this since the US has creatred a precedent both in Afganistan and Iraq.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X