பொது செய்தி

இந்தியா

இந்தியாவின் மாபெரும் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி

Added : செப் 30, 2010 | கருத்துகள் (27)
Share
Advertisement
இந்தியாவின் மாபெரும் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி

புதுடில்லி : இந்தியாவின் மாபெரும் கோடீஸ்வரர் என்ற பெருமையை, ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.


உலகின் புகழ் பெற்ற, "போர்ப்ஸ்' பத்திரிகை, இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தை ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி மூன்றாவது முறையாக தக்க வைத்துக் கொண்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு, ஒரு லட்சத்து 21 ஆயிரம் கோடி ரூபாய். இரண்டாவது இடத்தை இரும்பு தொழில் அதிபர் லட்சுமி மிட்டல் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இவரது சொத்து மதிப்பு, ஒரு லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய். மூன்றாவது இடத்தை விப்ரோ நிறுவன அதிபர் அசிம் பிரேம்ஜி பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு, 79 ஆயிரம் கோடி ரூபாய். கடந்தாண்டில் மூன்றாவது இடத்தில் இருந்த ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானி, இந்த முறை ஆறாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். நான்காவது இடத்தில் எஸ்ஸார் நிறுவன சகோதரர்கள் சரி, ரவி ருயா ஆகியோரும், ஐந்தாவது இடத்தை சாவித்ரி ஜிண்டாலும் பிடித்துள்ளனர். பெண் தொழிலதிபர் என்ற முறையில் பெருமை பெற்றவராகிறார். இந்த பட்டியலில் கடந்தாண்டை விட, இந்தாண்டில் 17 பேரின் பெயர்கள் கூடுதலாக இடம் பெற்றுள்ளன. மேலும், இந்தியாவின் மாபெரும் பணக்காரர்களின் ஆஸ்தி மொத்த அளவும் அதிகரித்திருக்கிறது. 


Advertisement


வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தியாகு - சென்னை,இந்தியா
01-அக்-201017:36:54 IST Report Abuse
தியாகு பெஸ்ட் ஆப் லக் , முகேஷ் அம்பானி
Rate this:
Cancel
குமார் - pattiveeranpatti,இந்தியா
01-அக்-201015:49:23 IST Report Abuse
குமார் இவர் அப்பா RIL ஷேர் 380 க்கு கொடுதது UTI மாஸ்டர் ஷேர் ஐ காலி செய்தார் அப்படி சம்பாதித்தது த்தோ இது ஒரு பொலப்பா
Rate this:
Cancel
பாரிஸ் தமிழன் - paris,பிரான்ஸ்
01-அக்-201015:18:48 IST Report Abuse
பாரிஸ் தமிழன் போர்பஸ் பத்திரிகை தகவல்படி நம்ம ஊர் கலாநிதி மாறன் உலகின் 342 வது பணக்காரர். இந்தியாவின் 17 வது பணக்காரர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X