திருமங்கலம் காய்கறி அங்காடி திறக்கப்படாமல் வீண் : நெருக்கடியான ரோட்டில் கடை விரிக்கும் அவலம்| Dinamalar

தமிழ்நாடு

திருமங்கலம் காய்கறி அங்காடி திறக்கப்படாமல் வீண் : நெருக்கடியான ரோட்டில் கடை விரிக்கும் அவலம்

Added : அக் 02, 2010
Share
திருமங்கலம் : திருமங்கலம் நகராட்சி சார்பில், பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட நவீன காய்கறி அங்காடி செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் நெருக்கடியான உசிலம்பட்டி ரோட்டில் சிறு வியாபாரிகள் கடை விரித்து வியாபாரம் செய்யும் அவலத்தில் உள்ளனர். திருமங்கலம் நகராட்சி சார்பில், உசிலம்பட்டி ரோட்டில் "ஒருங்கிணைந்த சிறிய மற்றும் நடுத்தர நகர் மேம்பாட்டுத் திட்டத்தின்' கீழ்

திருமங்கலம் : திருமங்கலம் நகராட்சி சார்பில், பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட நவீன காய்கறி அங்காடி செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் நெருக்கடியான உசிலம்பட்டி ரோட்டில் சிறு வியாபாரிகள் கடை விரித்து வியாபாரம் செய்யும் அவலத்தில் உள்ளனர்.


திருமங்கலம் நகராட்சி சார்பில், உசிலம்பட்டி ரோட்டில் "ஒருங்கிணைந்த சிறிய மற்றும் நடுத்தர நகர் மேம்பாட்டுத் திட்டத்தின்' கீழ் பல லட்சம் ரூபாய் செலவில் 2006ல் காய்கறி அங்காடி கட்டடம் கட்டப்பட்டது. குடிநீர், பார்க்கிங் வசதி, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் உருவாக்கப்பட்டது. ஏலம் அடிப்படையில் கடைகள் வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டன. திருமங்கலம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் காய்கறி அங்காடியை வரப்பிரசாதமாக கருதினர்.


திறப்பு விழாவும் மூடு விழாவும்: இந்த அங்காடி திறப்பு விழா கண்ட சில நாட்களிலேயே மூடுவிழா கண்டது. நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனம் காரணமாக அங்காடி முழுமையான செயல்பாட்டிற்கு வரவில்லை. இதையடுத்து நெருக்கடி மிகுந்த திருமங்கலம் - உசிலம்பட்டி ரோட்டிலேயே சிறு வியாபாரிகள் கடைகளை விரித்து மீண்டும் வியாபாரத்தை துவக்கினர். அவர்களுக்கு அங்காடியில் ஒதுக்கப்பட்ட கடைகளில் வியாபாரம் செய்ய, நகராட்சி நிர்வாகம் முயற்சிகள் எடுக்கவில்லை. இதனால், பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட கட்டடம் வீணானது. இது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. கால்நடைகள் கட்டப்படும் மையமாக மாற்றப்பட்டுள்ளது.

மதுரை போல் மாற்றம் தேவை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சென்ட்ரல் மார்க்கெட் நெருக்கடியில் சிக்கி தவித்தது. அமைச்சர் மு.க. அழகிரி முயற்சியால், மாட்டுத்தாவணி பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதற்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது. இதனால், மீனாட்சி அம்மன் கோயில் சுற்றியுள்ள பகுதியில் நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டது. இதேபோல் திருமங்கலம் - உசிலம்பட்டி ரோட்டில் செயல்படும் காய்கறி கடைகளை மீண்டும் காய்கறி அங்காடியில் செயல்பட நகராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X