வாஷிங்டன்:தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவின் வடக்குப் பகுதியில் நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அர்ஜென்டினாவில் உள்ள சான்டியாகோ நகரின் வடகிழக்கில், 150 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள பகுதியில், இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.9 என பதிவான இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் இல்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement