Yet another kidnap in Chennai : Police nabs the duo | சென்னையில் தொழிலதிபர் மகள் கடத்தல் : 2 பேர் கைது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் தொழிலதிபர் மகள் கடத்தல் : 2 பேர் கைது

Added : மே 10, 2011
சென்னையில் தொழிலதிபர் மகள் கடத்தல் : 2 பேர் கைது

சென்னை : கோவையில் பள்ளிச் சிறுவன், சிறுமி கடத்திக் கொலை, சென்னையில் பள்ளி மாணவன் பணத்துக்காக கடத்தல் என அடுத்தடுத்து பயங்கர சம்பவங்கள் நடந்தன. சமீப காலமாக கடத்தல் தலை தூக்காமல் இருந்தது. இந்நிலையில் சென்னையில் இளம் பெண் ஒருவர் கடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரத்தை அடுத்த செம்பாக்கத்தை சேர்ந்த தொழில் அதிபர் அப்பாராவ். இவரது மகள் அனுஷா (24). எம்.பி.ஏ. படித்துள்ளார். நேற்று காலை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு நிறுவனத்தில் நடந்த நேர்முகத் தேர்வுக்கு புறப்பட்டார். அப்போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். கடத்தல்காரர்கள் அப்பாராவை தொடர்பு கொண்டு 45 லட்சம் பணம் கேட்டு மிரட்டினர். இல்லாவிட்டால் அனுஷாவை ஆபசமாக படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டினர். இந்நிலையில் அப்பாராவ் போலீஸ் உதவியை நாடினார். போலீசார் அறிவுரையின் படி நடந்த அப்பாராவ், 35 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க சம்மதித்தார். பின்னர் அந்த பணத்தை கடத்தல்காரர்கள் சொன்ன ரகசிய இடத்துக்கு எடுத்துச் சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் கடத்தல்காரர்களை மடக்கிப் பிடித்தனர். மேலும் இளம் பெண் அனுஷாவையும் மீட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X