அரசியல் செய்தி

தமிழ்நாடு

"கூடா நட்பு கேடாய் முடியும்': கருணாநிதி பிறந்தநாள் செய்தி

Updated : ஜூன் 04, 2011 | Added : ஜூன் 03, 2011 | கருத்துகள் (59)
Advertisement

சென்னை: ""கூடா நட்பு கேடாய் முடியும்' என்ற பொன்மொழியை புரிந்து கொண்டு பணியாற்றுங்கள்,'' என, தொண்டர்களுக்கு, கருணாநிதி அறிவுரை வழங்கினார். தி.மு.க., தலைவர் கருணாநிதி, தன், 88வது பிறந்த நாளை, நேற்று கொண்டாடினார். காலை, அண்ணாதுரை மற்றும் பெரியார் நினைவிடங்களுக்கு சென்றார். அங்கு, மலர் வளையம் வைத்து, வணங்கினார். அவரிடம், பிறந்த நாள் அன்று, தொண்டர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என, பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, "சமுதாய எழுச்சிக்காகவும், அரசியல் மறுமலர்ச்சிக்காகவும், தங்களை ஒப்படைத்துக் கொண்ட தோழர்கள், உடன்பிறப்புகள், "கூடா நட்பு கேடாய் முடியும்' என்ற பொன்மொழியை மறந்து விடாமல், பணியாற்ற வேண்டும்' என்றார்.

வெறிச்சோடிய அறிவாலயம்: தி.மு.க., தலைவர் கருணாநிதி, தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற தொண்டர்கள் வர வேண்டாம் என, வேண்டுகோள் விடுத்ததால், நேற்று தி.மு.க.,வின் தலைமையகமான அண்ணா அறிவாலயம் களையிழந்து காணப்பட்டது.

தி.மு.க., தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு நேற்று 88வது பிறந்தநாள். ஒவ்வொரு பிறந்த நாளின் போதும், அவர் அறிவாலயத்தில் தொண்டர்களை சந்திப்பது வழக்கம். தமிழகம் முழுவதுமிருந்து வரும் கட்சி நிர்வாகிகள், முக்கியப் பிரமுகர்கள், கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதுடன், பலப் பரிசுகளை வழங்குவர். இம்முறை சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, மகள் கனிமொழி சிறையில் அடைப்பு போன்ற காரணங்களால், கருணாநிதி மன வருத்தத்தில் உள்ளார். திகார் சிறையில் மகள் இருக்கும்போது, தனது பிறந்த நாளை கோலாகலமாகக் கொண்டாட விரும்பவில்லை. இது தொடர்பாக அவர் நேற்றுமுன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "எனது பிறந்தநாளையொட்டி அண்ணாதுரை, பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கும் நிகழ்ச்சிகளைத் தவிர, வேறு எந்த நிகழ்ச்சிகளிலும், கலந்து கொள்ளும் மன நிலையில் நான் இல்லை. எனவே, எனக்கு வாழ்த்து வழங்க, என்னை சந்திக்க வேண்டுமென கட்சியினர் வற்புறுத்த வேண்டாம். வீட்டிற்கோ, கட்சி அலுவலகத்திற்கோ நேரில் வந்து சந்திக்கும் வாய்ப்பு இல்லாமைக்காக, கட்சியினரும், தமிழ் மக்களும் மன்னிக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார். அதையேற்று அறிவாலயத்திற்கு, நேற்று தொண்டர்கள் வரவில்லை. தி.மு.க., மாணவரணி சார்பில் ரத்ததான முகாம் மட்டும் நடந்தது. நேற்று அறிவாலயத்தில் தோரணங்கள் கூட கட்டப்படவில்லை. வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. வந்திருந்த சில தொண்டர்களும் கவலை தோய்ந்த முகத்துடனே காணப்பட்டனர். முக்கிய நிர்வாகிகள் யாரும் வரப்போவதில்லை என்பதை அறிந்ததும், வந்திருந்தவர்களும் புறப்பட்டு சென்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a. murugesan - chennai-74,இந்தியா
06-ஜூன்-201117:14:12 IST Report Abuse
a. murugesan திருமா .. மருத்துவர் அய்யா .. வடிவேலு எல்லாருமே யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்கய்யா யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க..
Rate this:
Share this comment
Cancel
manoharan - chennai,இந்தியா
06-ஜூன்-201112:46:52 IST Report Abuse
manoharan இதை அவர் தமக்கு தானே சொல்லிகொள்வது போல் தெரிகிறது.
Rate this:
Share this comment
Cancel
naina bdm - suura,கஜகஸ்தான்
04-ஜூன்-201123:39:57 IST Report Abuse
naina bdm அய்யா சரியாய் சொன்னிங்க அமைச்சர் பதவி வாங்கிய போது தெரிய இல்லையா இப்போது சொல்லி பயன் இல்லை ஐயோ ஹையோ .........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X