புதுடில்லி: மும்பை தாக்குதலுக்கு திட்டம் தீட்டி கொடுத்த அமெரிக்காவில் வசித்து வரும் ஹெட்லி சில முக்கிய கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். இதில் குஜராத்தில் நடந்த ஒரு என் கவுன்டர் விவகாரம் தொடர்பாக அவர் கூறியிருப்பது குஜராத் மாநில பா.ஜ., அரசு மீதான களங்கம் குறைகிறது. அமெரிக்க போலீஸ் வசம் இருக்கும் ஹெட்லியிடம் அந்நாட்டு அரசு அனுமதி கேட்டு விசாரணை இந்திய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இவர்களிடம் ஹெட்லி குஜராத்தில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட பெண் இஸ்ரத் ஜகான் லஷ்கர் இ.தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர் என கூறியுள்ளார். இஸ்ரத் ஜகான் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 2 பேருடன் கடந்த 2004 ம் ஆண்டில் போலீசார் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டவர். இவர்கள் மோடியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக போலீசார் தரப்பு தெரிவித்திருந்தனர்.
இது போலி என் கவுன்டர் என இவரது தாயார் ஷகீமா கவுசர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு .சி.பி.ஐ போலீசாரால் விசாரிக்கப்பட்டது.இந்நிலையில் ஹெட்லி , தனது வாக்குமூலத்தில் இஸ்ரத் லஷ்கர் இ. தொய்பாவை சேர்ந்தவர் என்று ஹெட்லி கூறியுள்ளதாக புலனாய்வு வட்டாரம் தெரிவிக்கிறது. இந்த விஷயம் குஜராத் மாநிலத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும்.