உலகின் நீளமான தொங்கு பாலம்: சீனாவில் திறப்பு

Updated : ஏப் 05, 2012 | Added : ஏப் 05, 2012 | கருத்துகள் (6)
Advertisement

லண்டன்: உலகிலேயே மிகவும் நீளமான, உயரமான தொங்கு பாலம் ஒன்றை சீனா கட்டியுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. சீனாவின் ஹூனான் மாகாணத்தில் அன்ஹியாட் நகரில் மிகவும் உயரமான மலைத்தொடர்கள் உள்ளன. இங்குள்ள இரு மலைத்தொடர்களையும் இணைக்கும் வகையில் தொங்கு பாலம் கட்ட கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கட்டுமானப்பணிகள் துவங்கின.

மொத்தம் 1,102 அடி நீளம் உள்ள இந்த தொங்கு பாலம், 3,858 அடி உயரமும் கொண்ட இரு மலைத்தொடர்களுக்கிடையே பிரம்மாண்டமாக கட்டப்பட்டி முடிக்கப்பட்டுள்ளது.. பணிகள் முற்றிலும் முடிவடைந்துவிட்டதால், நேற்று போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. இப்பாலம் தான் உலகி‌லேயே மிகவும் நீளமானதும், உயரமானது என அழைக்கப்படுகிறது.
78 அடி அகலம் கொண்ட இப்பாலத்தில் நான்குவழிச்சாலை அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இதில் இருசக்கர வாகனம், கார், கனரக வாகனங்கள் என பல்வேறு வாகனங்கள் செல்வதற்கென தனிப்பாதைகள் மற்றும் பாதசாரிகள் நடக்கவும் தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளன. மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் தான் இப்பாலத்தின் மீது வாகனங்கள் செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக டெய்லி மெயில் எனும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shankar M - chennai ,இந்தியா
05-ஏப்-201219:44:10 IST Report Abuse
Shankar M 1,102 அடி உயரமும், 3,858 அடி நீளமும் கொண்டது இந்த தொங்கு பாலம்.
Rate this:
Share this comment
Cancel
Ramesh Sundram - Yanbu-Al-Bahr,சவுதி அரேபியா
05-ஏப்-201215:27:02 IST Report Abuse
Ramesh Sundram நம்ப ஊரில் கவுனசில்லோர் கட்டிங் வட்டம் கட்டிங் மாவட்டம் கட்டிங் அமைச்சர் கட்டிங் டெண்டர் விடும் engineer கட்டிங் இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.
Rate this:
Share this comment
Cancel
Ramamoorthy - Bangalore,இந்தியா
05-ஏப்-201215:01:36 IST Report Abuse
Ramamoorthy நமது தமிழகத்தில் ஊழல் நாயகன் தானை தலைவர் 1200 கோடி ஊழல் செய்து தண்ணி டேங் சைசில் தலைமை செயலகம் காட்டியுள்ளாரே அதெல்லாம் உங்களுக்கு சாதனையாக தெரியவில்லையா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X