சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாமக்கல் கோவிலில் கொள்ளை

Added : மே 28, 2010
Advertisement

ப.வேலூர்:பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் உண்டியலை உடைத்து, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அருகே பாண்டமங்கலத்தில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில், நேற்று காலை கோவில் துப்புரவு பணியாளர் சுப்ரமணி, சுத்தம் செய்ய வந்தார்.அப்போது, கோவில் பூட்டு உடைக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலும் மாயமாகியிருந்தது.


இதை, கோவில் அர்ச்சகர் ஸ்ரீராம், அலுவலர் சிவசண்முகமிடம், சுப்ரமணி தெரிவித்தார். கோவில் அலுவலர் சிவசண்முகம், போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தினர். கைரேகை பதிவு செய்யப்பட்டது. கோவிலில் திருடப்பட்ட உண்டியல், கோவிலுக்கு பின்புறம் வீசப்பட்டிருந்தது. அதில் இருந்த நகை, பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. உண்டியலில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் இருந்திருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X