பொது செய்தி

தமிழ்நாடு

பாலில் கலப்படம்; பேக்கரியில் சோதனை

Added : அக் 16, 2010
Advertisement

கோவை:பாலில் கலப்படம் செய்வதாக பொதுமக்களிடமிருந்து வந்த புகாரையடுத்து, மாநகராட்சி நகர் நலத்துறை அதிகாரிகள், பேக்கரியில் சோதனை நடத்தினர். கோவை, ஸ்டேட் பாங்க் ரோட்டில், தொலைபேசி அலுவலகத்துக்கு எதிரே உள்ள ஒரு தனியார் பேக்கரியில் பாலில் கலப்படம் செய்வதாக, பொதுமக்கள் மாநகராட்சி, நகர் நலத்துறை அதிகாரிகளுக்கு புகார் செய்தனர். நேற்று மாலை, உணவுப்பொருள் ஆய்வாளர் ஆண்டியப்பன் மற்றும் அதிகாரிகள் அந்த பேக்கரியில் சோதனை நடத்தினர். பாலை அடர்த்தியாக மாற்ற, ஜவ்வரிசியை பயன்படுத்தியது தெரியவந்தது. பாலின்
"மாதிரி' சேகரிக்கப்பட்டு, சோதனைக்காக சேலம் அனுப்பி வைக்கப்பட்டது. உணவு ஆய்வாளர் ஆண்டியப்பன் கூறுகையில், "" கே.ஆர்., பேக்கரியில், பாலில் கலப்படம் செய்வதாக புகார் வந்தது. சோதனை செய்ததில், அது உண்மை என தெரிய வந்தது. பாலின் "மாதிரி' எடுக்கப்பட்டு, சேலத்திலுள் உணவு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. முடிவு கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X