பொது செய்தி

தமிழ்நாடு

வைகோ உட்பட 7 பேர் மீது 9 வழக்குகள்: கூடங்குளம் போராட்டத்தை தூண்டியதாக புகார்

Updated : நவ 17, 2011 | Added : நவ 15, 2011 | கருத்துகள் (199)
Advertisement

அரசின் அனுமதியின்றி நடத்தப்படும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று, பொய் பிரசாரம் செய்ததாக, வைகோ உட்பட தலைவர்கள் மீது, 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கடந்த இரண்டரை மாதங்களாக, ஒரு குழுவினர் போராட்டம் நடத்துகின்றனர். உதயகுமார் என்பவர் தலைமையில், இடிந்தகரை லூர்து சர்ச் வளாகத்தில், இந்த போராட்டம் நடக்கிறது. இதில், தூத்துக்குடி மறை மாவட்ட பாதிரியார் இவான் அம்ப்ரோஸ் உட்பட ஆறு பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் பங்கேற்றனர். போராட்டத்தின் பாதியிலேயே, இவான் அம்ப்ரோஸ் விலகி விட்டார். கூடங்குளம் அணு உலை தொடர்பாக பேச்சு நடத்த நியமிக்கப்பட்ட, தமிழக குழுவிலிருந்தும் அவர் விலகி விட்டார். ஆனால், அவரது கட்டுப்பாட்டில் உள்ள மற்ற பாதிரியார்கள், போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.போராட்டத்தில் ஈடுபட்டோர், அணுமின் சக்தி வாகனங்களை வழிமறித்தது, பாதையை தடுத்தது, மத்திய அரசுக்கு சொந்தமான, அணு உலை விஜய் குடியிருப்புக்கு சென்ற தண்ணீர் குழாயை உடைத்தது போன்ற பல்வேறு வன்முறை சம்பவங்களால், அங்கு கடந்த ஒரு மாத காலமாக பதட்ட சூழல் உள்ளது. இதனால், போராட்டத்தில் பங்கேற்போர், நடத்துவோர், தூண்டிவிடுவோர் மீது, கூடங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.போராட்டம் நடக்கும் ஒவ்வொரு நாளும், சட்டவிரோதமாக கூடி, அரசுக்கு எதிராக பிரசாரம் செய்ததாக, வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த வகையில், நேற்றுடன், 77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, நெல்லை மாவட்ட போலீஸ் அதிகாரி கூறியதாவது:போலீஸ் அனுமதியின்றி போராட்டம் நடக்கிறது. போராட்டத்திற்கு அனுமதி மறுத்துவிட்ட நிலையில், அணுஉலை எதிர்ப்புக்குழுவினர் போராடுவதால், அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்கின்றனர்.போராட்டக்காரர்கள், அவர்களை வழிநடத்தும் போராட்டக்குழு, பாதிரியார்கள், சர்ச் வளாகங்களை அரசுக்கு எதிராக பயன்படுத்தும் குழுவினர், அனுமதியற்ற சட்டவிரோத போராட்டத்தில் பங்கேற்று, மக்கள் மத்தியில் பொய் பிரசாரம் செய்வோர் ஆகியோர் மீது, அரசின் திட்டங்களுக்கு எதிராக செயல்படுதல், அரசின் திட்டங்களை தடுத்தல், மக்களிடம் பொய் தகவல்களை கூறி பீதியூட்டுதல் போன்ற 15 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இவற்றிற்கு ஊடக செய்திகள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் உள்ளதால், குற்றத்தை நிரூபித்து, தண்டனை வாங்கி தர முடியும்.இந்த அடிப்படையில், பாதிரியார்கள் மட்டுமின்றி, சர்ச் வளாகத்திற்கு வந்து, அரசியல் நோக்கத்திற்காக, மக்கள் மத்தியில் பொய் பிரசாரம் செய்யும் அரசியல் தலைவர்கள் மீதும், வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்குகளில், இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டது தொடர்பான, சட்டப்பிரிவுகளும் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த அடிப்படையில், தே.மு.தி.க., எம்.எல்.ஏ., மைக்கேல் ராயப்பன், வைகோ, திருமாவளவன், ஜி.கே.மணி., தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., அப்பாவு, சமூக ஆர்வலர் மேதா பட்கர் உள்ளிட்ட ஏழு மீது, 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


வழக்கில் சிக்கிய தலைவர்கள்
வைகோ ம.தி.மு.க., பொதுச்செயலர் -1
ஜி.கே.மணி பா.ம.க., தலைவர் -1
திருமாவளவன் வி.சிறுத்தைகள் கட்சி -2
மைக்கேல் ராயப்பன் தே.மு.தி.க., எம்.எல்.ஏ., -2
அப்பாவு தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., -1
வெள்ளையன் வணிகர் சங்கம் -1
மேதா பட்கர் சமூகஆர்வலர், டில்லி -1


-நமது சிறப்பு நிருபர்-

Advertisement
வாசகர் கருத்து (199)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jai - Bangalore,இந்தியா
17-நவ-201100:17:21 IST Report Abuse
Jai இந்த போராட்டம் எப்போது நடத்தி இருக்க வேண்டும் ? அணு உலை திட்டம் ஆரம்பித்த பொழுது. இல்லை எனில் ஜப்பானில் சுனாமி வந்தபோது. இப்போது அரசு 13000 கோடி கொட்டி திட்டம் ஆரம்பித்துள்ளது. அனைத்து வேலைகளும் முடிந்து உற்பத்தியை ஆரம்பிக்கும் பொழுது இப்படி ஒரு போராட்டம் தேவையா? கல்பாக்கத்திற்கு பக்கத்தில் நான் 2 வருடம் வேலை செய்துள்ளேன். அங்கு வேலை செய்யும் மக்கள் சிலரை என்னக்கு நேரடியாக தெரியும். அவர்கள் யாரும் இவ்வாறு பயப்படவில்லை. கல்பாக்கம் அணு உலை வளாகத்தில் உள்ளே IGCAR உள்ளது. இது அணு ஆராய்ச்சி செய்யும் நிலையம் ஆகும். அணு உலை ஆபத்து என்றல் அதன் அருகில் அரசு ஆராய்ச்சி மையம் அமைக்குமா? மக்கள் சிந்திக்க வேண்டும். மக்களின் நலனுக்க போராடுகிறீர்களா? முதலில் டாஸ்மாக்யை எதிர்த்து போராடுங்கள். புகை பழக்கத்தை எதிர்த்து போராடுங்கள். தமிழகம் தான் சர்க்கரை வியாதிகளில் no.1 . இதற்காக அரசு உதவ வேண்டும் என்று போராடுங்கள். விபத்து நடப்பது உலகில் இந்திய முதலில் உள்ளது. அதிலும் தமிழ் நாடு முதலில் உள்ளது. இதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எட்று போராடுங்கள். இதெலாம் அமைந்த பின் அணு உலைக்கு எதிராக போராடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Veera Rajesh - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-நவ-201123:36:40 IST Report Abuse
Veera Rajesh போராட்டகாரர்கலே! இவ்வளவு நாள் இல்லாமல் ஏன் அணு உலை ஆரம்பிக்கும்போது தான் எல்லாம் தோணுதா?
Rate this:
Share this comment
Cancel
sam - channai,இந்தியா
16-நவ-201123:22:21 IST Report Abuse
sam WHY YOU PEOPLE WAS SILENT DURING BEGINNING OF THIS CONSTRUCTION. AFTER GOVT SPENT THIS MUCH HUGE MONEY, IS IT CORRECT TO MAKE PROBLEM?. Sam- BAHRAIN.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X