அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணை விவகாரம்: மத்திய அரசு மீது கருணாநிதி அதிருப்தி

Updated : டிச 11, 2011 | Added : டிச 09, 2011 | கருத்துகள் (48)
Share
Advertisement

சென்னை: ""முல்லை பெரியாறு அணை பிரச்னையில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளும் திருப்தியாக இல்லை. மத்திய அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லையே என்பதாலும் அதிருப்தியாக இருக்கிறது,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.

அவரது பேட்டி: மதுரையில் நடக்கும் மனிதச் சங்கிலி அணிவகுப்புக்கு, பொதுச் செயலர் அன்பழகனும், தேனியில் ஸ்டாலின், திண்டுக்கலில் துரைமுருகன், சிவகங்கையில் சற்குணபாண்டியன், ராமநாதபுரத்தில் வி.பி.துரைசாமியும் தலைமை வகிக்கின்றனர். மதுரையில் நடக்க உள்ள மனிதச் சங்கிலியில் அழகிரி கலந்து கொள்ளாததற்கு, அவர் மத்திய அமைச்சர் என்பது தான் காரணம். பார்லிமென்டில் வரும் கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டிய பொறுப்பு இருப்பதால், அதைத் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அவர் வரவில்லை. முல்லை பெரியாறு அணை பிரச்னையில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளும் திருப்தியாக இல்லை. மத்திய அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லையே என்பதாலும் அதிருப்தியாக இருக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து, எல்லாருடைய ஆலோசனைகளையும் பெற்று, தமிழர்களாகிய நாம் இந்தப் பிரச்னையிலாவது, வேறுபடாமல் இருக்கிறோம் என்பதை உறுதிபடத் தெரிவிக்க வேண்டும். அதற்கு, அனைத்துக் கட்சிக் கூட்டம் பயன்படும் என நம்புகிறேன். எங்கள் ஆட்சியில் அப்படித்தான் செய்தோம்.


தி.மு.க., ஆட்சியில் நாங்கள் மெத்தனமாகச் செயல்பட்டதாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியிருக்கிறார். எங்கள் ஆட்சிக்குப் பிறகு தான் சுப்ரீம் கோர்ட்டே, ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்து, அதன் விசாரணை நடந்து வருகிறது. அதை மறைத்துவிட்டு, இது போன்ற பேச்சுக்களுக்கும், விமர்சனங்களுக்கும் பதில் அளிப்பதன் மூலம், தமிழர்கள் ஒற்றுமையாக இல்லை என்பதை எடுத்துக் காட்டுகிற நிலை தான் ஏற்படும். ஒட்டுமொத்த தமிழகத்தின் நலன் கருதி, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதையும் முக்கியமாகக் கொண்டு, அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டுமே அல்லாமல், ஒருவருடைய விமர்சனத்துக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பது முறையுமல்ல; தேவையுமில்லை. இந்தப் பிரச்னையில் மத்திய அரசு காத்து வரும் அமைதியை, இந்தச் செயற்குழுவின் தீர்மானம் ஓரளவாவது அசைக்கும் என கருதுகிறேன். இது போன்ற பிரச்னைகளில் மத்திய அரசு நமது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லையே என வருந்தி, தீவிரமான நடவடிக்கை எடுத்தால், வேறு விதமான விளைவுகள் ஏற்படும் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. இவ்வாறு கருணாநிதி கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilselvan - Chennai,இந்தியா
10-டிச-201122:40:11 IST Report Abuse
Tamilselvan தாத்தா அதிருப்தி பட்டால் மட்டும் போதாது. பதவியில் இருக்கும் ஒண்ணுக்கும் உதவாத உங்களது அல்ல்கைகளை பதவியை தூக்கி எறிந்து விட சொல்லுங்கள்.
Rate this:
Cancel
M.S.Jeyakumar - Thirunelveli,இந்தியா
10-டிச-201121:06:15 IST Report Abuse
M.S.Jeyakumar ஆ ! வந்துடாருயா , மக்களை பத்தி இப்பதான் தெரியுதாகும். 5 வருசமா உங்க மக்களைதானே நெனிசீங்க இப்போ பொத்துகிட்டு அந்தாகுல டெல்லி கு ஒரே ஓட்டமா ஓடி எல்லாத்தையும் தீர்திடுவாரு
Rate this:
Cancel
Tamilselvan - Chennai,இந்தியா
10-டிச-201119:19:38 IST Report Abuse
Tamilselvan அஞ்சா நோஞ்சான் பாராளுமன்றத்தில் பதில் அளிப்பாரா ??? அவர் பாராளுமன்றத்தில் இதுவரை வாய் திறந்ததாக சரித்திரம் இல்லை.அவரை வைத்து காமடி,கீமடி பன்னுகிரரா தலைவர் !!! இவர் ஆட்சியில் இருந்த போது என்ன நடவடிக்கை எடுத்தார் என்பது இந்திய மக்கள் எலோருக்கும் தெரியும்.நாம்தான் ஸ்பெக்ட்ரம்,மக்கள் சொத்துகளை ஆட்டை போடுவது,, ஊழல்,மான் ஆட மயில் ஆட,நமீதா குத்து டான்ஸ் என்று படு பிஸியாக இருந்து விட்டோம்.மறந்து விட்டதா ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X