கோர தாண்டவம் ஆடிய "தானே' புயல்: வீடுகள், மரங்கள் காற்றில் பறந்தன

Added : டிச 30, 2011 | கருத்துகள் (12) | |
Advertisement
புதுச்சேரி: தமிழகத்தை பயமுறுத்திய, "தானே' புயல், நேற்று முன்தினம் நள்ளிரவில், கடலூர் மாவட்டத்திலும், புதுச்சேரியிலும் கோரத் தாண்டவம் ஆடியது. கடலூர், விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில், 26 பேர் உயிரிழந்தனர்; பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உயிரிழந்தோரின் குடும்பத்தின ருக்கு இரு மாநில முதல்வர்களும் தலா 2 லட்சம் ரூபாய்

புதுச்சேரி: தமிழகத்தை பயமுறுத்திய, "தானே' புயல், நேற்று முன்தினம் நள்ளிரவில், கடலூர் மாவட்டத்திலும், புதுச்சேரியிலும் கோரத் தாண்டவம் ஆடியது. கடலூர், விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில், 26 பேர் உயிரிழந்தனர்; பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உயிரிழந்தோரின் குடும்பத்தின ருக்கு இரு மாநில முதல்வர்களும் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளனர்.


திசை மாறிய புயல்: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடுமையான புயலாக உருவெடுத்தது. கடலூருக்கும், நெல்லூருக்கும் இடையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட, "தானே' புயல், நேற்று முன்தினம் இரவு, புதுச்சேரியையும், கடலூரையும் நோக்கி திரும்பியது. இதன் எதிரொலியாக, இவ்விரண்டு பகுதிகளிலும், நேற்று முன்தினம் மதியம் முதலே மழை பெய்யத் துவங்கியது; மாலையில் பலத்தக் காற்று வீசியது. நள்ளிரவில், பலத்த சத்தத்துடன், 100லிருந்து, 140 கி.மீ., வேகத்தில், புயல் காற்று வீசியது.


புதுச்சேரி: நள்ளிரவில் துவங்கிய புயல் காற்று, விடிய விடிய வீசி, புதுச்சேரி நகரை மட்டுமல்லாமல், கிராமங்களையும் சூறையாடியது. காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், வீடுகளின் மாடியில் போடப்பட்டிருந்த ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகள், தகரக் கூரைகள் பறந்தன; அனைத்து குடிசைப் பகுதிகளும் உருக்குலைந்தன. லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. கிழக்கு கடற்கரை சாலை, விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை ஆகிய சாலைகளில், பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பொதுப்பணித் துறையினரும், தீயணைப்புத் துறையினரும், பொக்லைன், புல்டோசர் போன்ற இயந்திரங்களின் உதவியுடன், பிரதான சாலைகளில் விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தினர். பின், பஸ் போக்குவரத்து துவங்கியது.


அலங்கோலமானது நகரம்: சாலைகளில் இருந்த மின்சார கம்பங்கள், சிக்னல் விளக்குகள், வழிகாட்டி பலகைகள், பெயர் பலகைகள் உள்ளிட்ட எதுவும், புயல் காற்றுக்கு தப்பவில்லை. பெரும்பாலான இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்தும், வளைந்தும் கிடக்கின்றன. அனைத்து தெருக்களும் அலங்கோலமாகக் காட்சியளிக்கின்றன.


கொட்டியது பலத்த மழை: புதுச்சேரியில் நேற்று காலை, 9 மணியளவில், காற்று சற்று ஓய்ந்தது. இதைத் தொடர்ந்து, கனமழை பெய்யத் துவங்கியது. நேற்று முன்தினம் காலை, 8.30 மணியில் இருந்து நேற்று காலை, 8.30 மணி வரையிலான, 24 மணி நேரத்தில், 14 செ.மீ., மழை கொட்டி தீர்த்துள்ளது.


கடலூர் மாவட்டம்: புயல் சின்னம் காரணமாக, கடலூர் பகுதி கடலில், இரண்டு மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்பின. கடலோரப் பகுதி கிராமங்களில் கடல் நீர் உட்புகுந்தது. நேற்று அதிகாலை, 5 மணிக்கு, காற்றின் வேகம், 130 கி.மீ., வரை உயர்ந்தது. பயங்கர சத்தத்துடன் புயல் கோரத் தாண்டவமாடியது. மக்கள் வெளியே தலை காட்ட முடியவில்லை. புயல் சீற்றம், நேற்று காலை, 11 மணி வரை நீடித்தது. அதன்பின், படிப்படியாக காற்றின் வேகம் குறைந்தது.


தகவல் தொடர்பு துண்டிப்பு: கடலூர், பண்ருட்டி, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த, பி.எஸ்.என்.எல்., மற்றும் மொபைல் போன் டவர்கள் முறிந்து விழுந்தன. இதனால், நேற்று காலை, 6.30 மணிக்கு மொபைல் போன் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டதால், மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள், புயல் பாதிப்பு குறித்து தகவல் பெற முடியாமல் பெரும் அவதிப்பட்டனர்.


விழுப்புரம் மாவட்டம்: விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், புயல் காற்றுடன் கூடிய மழையால் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் பரவலாக கிராமப் பகுதிகளில் கூரை வீடுகள் சேதமடைந்தன. புயலின் கோரத் தாண்டவத்தில் ஏராளமான மின் கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளதால் மின் வினியோகம் சீராக, ஒரு வாரத்திற்கு மேலாகும் எனக் கூறப்படுகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.


நிவாரண நிதி: தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் 21 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் 2 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 2 பேரும், சென்னையில் ஒருவரும் ஆக மொத்தம் 26 பேர் பலியாகியுள்ளனர். இவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் புயலுக்கு பலியான 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்க புதுவை முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.


வீதிக்கு வந்த பொருட்களை வாரி சுருட்டிய கும்பல்: தானே புயலின் தாக்குதலுக்குள்ளான, கடலூரில், சிதறிக் கிடந்த விளம்பர போர்டுகள், இரும்புத் தகடுகளை, மர்ம கும்பல் வாரி சுருட்டிச் சென்றது. இரும்புத் தகடுகள், விளம்பர போர்டுகளில் இருந்த டியூப் லைட்டுகள், ஐமாஸ் விளக்கு பல்புகள், இரும்பு ஆங்கிள், டிஜிட்டல் பேனர்களை அள்ளிச் சென்றனர். இன்னும் சிலர், மூன்று சக்கர வண்டியில் ஏற்றிச் சென்றனர். வீதியில் முறிந்து விழுந்த தென்னை மரங்களில் இருந்த தேங்காய்களை, மூட்டை மூட்டையாக கட்டிச் சென்றனர். புயலின் கோர தாண்டவத்தில், பலர் வீடுகளை இழந்து, நிர்கதியாய் தவிக்கும் போது, வீதியில் கிடப்பது தனக்கே சொந்தம் என, தேங்காயைக் கூட விட்டு வைக்காமல் சில கும்பல் தன் கைவரிசையைக் காட்டியது, வேதனையளிப்பதாக இருந்தது.


போக்குவரத்து பாதிப்பு: புதுச்சேரியிலிருந்து கடலூர், இ.சி.ஆர்., விழுப்புரம் மெயின் ரோடுகளின் ஓரத்தில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்ததால், மேற்கண்ட மார்க்கங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பிற்பகலில் தற்காலிகமாக கிளைகளை மட்டும் வெட்டி அகற்றி, போக்குவரத்துக்கு வழி செய்யப்பட்டது. நகரம், கிராமம் என, புதுச்சேரி முழுவதும் லட்சக்கணக்கில் மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. இதனால், கிராமப்புற பகுதிகளுக்கும் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PARASAKTHI v - coimbatore,இந்தியா
31-டிச-201111:48:35 IST Report Abuse
PARASAKTHI v ஊடகங்களின் சேவை ஒப்புகொள்கிறேன்... அரசு எங்கே மெத்தனமாக செயல்பட்டது என்று புரியவில்லை கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்..
Rate this:
Cancel
Mike Mani - Pollachi,இந்தியா
31-டிச-201109:57:28 IST Report Abuse
Mike Mani வெட்டி நாயம் பேசாம உபயோகமான வழிய பாருங்க. தினமலர் இதற்கு ஒரு பண்ட் உருவாக்கி பாதிக்க பட்டவர்களுக்கு உதவலாம்.
Rate this:
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
31-டிச-201107:41:20 IST Report Abuse
JAY JAY மனிதனை விடவா புயல் கோர தாண்டவம் ஆடுகிறது...! ? மனிதன் பண்ணுகிற அழிவுகளைவிட இயற்கை நமக்கு குறைவான அழிவுகளை தான் இதுவரை தந்துள்ளது !
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X