சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொண்டு நிறுவனங்களில் ரெய்டு : அணு எதிர்ப்பாளர்கள் பீதி

Updated : ஜன 19, 2012 | Added : ஜன 17, 2012 | கருத்துகள் (27)
Share
Advertisement

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரானவர்களுடன் தொடர்புடைய, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது, டெல்லியிலிருந்து வந்துள்ள, மத்திய அரசு அதிகாரிகள் கணக்குக்கேட்டு, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதால், அணுஉலை எதிர்ப்பாளர்கள் பீதியடைந்துள்ளனர். தூத்துக்குடி தன்னார்வ நிறுவனங்களில், மத்திய அரசு அதிகாரிகள், நேற்று ரெய்டு நடத்தினர். டெல்லியிலிருந்து ரகசியமாக வந்துள்ள சிறப்பு படையினர், தூத்துக்குடி மல்டி பர்ப்பஸ் சோஷியல் சர்வீஸ் சொசைட்டி தொண்டு நிறுவனம் மற்றும் அதன் கிளை நிறுவன நிர்வாகிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து, மத்திய உள்துறை அதிகாரிகள் கூறியதாவது: புதுடில்லியிருந்து, மத்திய அரசில் பணியாற்றும் துணைச்செயலர் அந்தஸ்தில் உள்ள, ஜோகிந்தர் பிரசாத் மற்றும் கணக்குப்பிரிவு அதிகாரி, சுக்கிந்தர் சிங் ஆகியோர் கொண்ட சிறப்பு படையினர், தூத்துக்குடி தன்னார்வ நிறுவனங்களிடம் ரகசிய விசாரணை நடத்துகின்றனர்.
அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற, தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர், இவான் அம்ப்ரோஸ் அலுவலக நிர்வாகிகளிடம் விசாரணை நடந்துள்ளது. இரவு வரை, தொண்டு நிறுவன ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வெளிநாட்டிலிருந்து வந்த பணம், அதற்கான முறையான செலவுக்கணக்கு மற்றும் அதற்கான ஆவணங்களை அதிகாரிகள் கேட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இதில், பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த திடீர் ரெய்டில், முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதால், அணுஉலை எதிர்ப்பாளர்கள் பீதியடைந்துள்ளனர்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J. Gopalakrishnan - Chennai-80,இந்தியா
18-ஜன-201222:09:43 IST Report Abuse
J. Gopalakrishnan கோடிக்கணக்கான பணத்தை போட்டு பல வருடங்களக இந்த மின் திட்டத்தை ஆரம்பித்து ஒரு சில மாதங்களில் மின்சார உற்பத்தி தொடங்கும் இந்த நேரத்தில் போராடுவோர் ஏன் முன்பே, அதாவது ஆரம்பத்திலே ஏன் போராடவில்லை. உங்கள் பிள்ளைகள் கெரோசின் விளக்கில் படிக்க வேண்டுமா? சிந்தியுங்கள்.
Rate this:
Cancel
Siddharth Shiva - Coimbatore,இந்தியா
18-ஜன-201220:22:43 IST Report Abuse
Siddharth Shiva என்ன கொடும சார் இது
Rate this:
Cancel
karthi - tirupur,இந்தியா
18-ஜன-201218:59:41 IST Report Abuse
karthi இந்த பாரத தேசத்தை ஆள திட்டம் வகுக்கும் அம்மாவுக்கு இந்த அடிப்பொடிகளை அடக்குவதற்கு அரை நாள் ஆகாது.மத்திய அரசு அம்மாவிடம் எல்லா விசயங்களிலும் முரண்டு பிடிப்பதால் அம்மா இந்த திட்டத்தை கண்டும் காணாமல் இருக்கிறார்.மத்திய அரசு தமிழக அரசுக்கு தேவையான நிதி திட்டங்களை அளித்து ஆதரவு கொடுக்குமானால் அம்மா மனது வைத்தால் கூடங்குளம் அணுமின் நிலையம் ஒரு மாதத்தில் செயல் பட துவங்கும்.உதயகுமார் தன தாய் நாட்டிற்கு சென்று( அமெரிக்கா) செட்டில் ஆகி விடுவார்.இங்கு உள்ள அப்பாவி மீனவர்கள் தங்கள் தொழிலுக்கு சென்று விடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X