பதிவு செய்த நாள் :
கருத்துகள் (22)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

ஜெய்ப்பூர்: சர்ச்சைக்குரிய ஆங்கில நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி பேசிய வீடியோ காட்சிகள், முஸ்லிம்களின் போராட்டத்தின் காரணமாக இலக்கிய விழாவில் நேற்று திரையிடப்படவில்லை. இதனால், பெரும் சலசலப்பும், சர்ச்சைøயும் எழுந்தது. இந்தியாவில் பிறந்து பிரிட்டனின் குடியுரிமை பெற்றவர் சல்மான் ருஷ்டி. பல ஆங்கில நாவல்களை எழுதிய சிறந்த எழுத்தாளர். இதற்காக, இவர் புக்கர் விருதை பெற்றார். 1988ல், "சாத்தானின் கவிதைகள்' என்ற புத்தகத்தை எழுதினார். முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் இந்த நூல் அமைந்ததால், ஈரான் தலைவர் அயதுல்லா கோமெனி, ருஷ்டிக்கு மரண தண்டனை அறிவித்தார். இதற்கு பிறகு, ருஷ்டி பல ஆண்டு காலம் பிரிட்டனில் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். சர்ச்சைக்குரிய இந்த புத்தகம் இந்தியாவிலும் தடை செய்யப்பட்டது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய திருவிழாவுக்கு அவர் ழைக்கப்பட்டிருந்தார். "தாருல் உலூம் தியோபந்த்' உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம் அமைப்புகளும், முஸ்லிம் மத தலைவர்களும் ருஷ்டியின் இந்திய வருகையை எதிர்த்தனர்.
"ருஷ்டி இந்தியா வந்தால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும். மும்பையை சேர்ந்த நிழல் உலக தாதாக்கள் அவரை கொல்ல திட்டமிட்டுள்ளனர்' என, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் போலீசார்எச்சரித்தனர். இதையடுத்து, ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொள்வதை ருஷ்டி தவிர்த்தார். "என்னை இந்த விழாவில் கலந்து

கொள்வதை தடுக்கவே, ராஜஸ்தான் போலீசார் இதுபோன்ற கதையை புனைந்துள்ளனர்' என, ருஷ்டி தன் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார். இதில் ராஜஸ்தான் முதல்வர் கெலாட் சாமர்த்தியமாக செயல்பட்டிருப்பதாக இலக்கிய விழாவில் பங்கேற்ற பலர் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையே, ஜெய்ப்பூரில் இலக்கிய திருவிழா நேற்று நிறைவு பெற்றது. இந்த விழாவில், ருஷ்டியின் உரையை வீடியோவில் ஒளிபரப்ப விழா ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.
வீடியோ காட்சிக்கு தடை : நேற்று மதியம் 3.45 மணியளவில் "மிட் நைட்ஸ் சைல்ட்' என்ற நாவலை பற்றி ருஷ்டியின் அனுபவ உரை ஒளிபரப்ப ஏற்படாகியிருந்தது. இதை தெரிந்து கொண்ட முஸ்லிம் அமைப்பினர் இலக்கிய விழா நடக்கும் பகுதியில் நுழைந்து, "ருஷ்டியின் வீடியோ காட்சியை ஒளிபரப்பக் கூடாது' என, போராட்டம் நடத்தினர்.
இதனால், அங்கு பதட்டம் ஏற்பட்டது. சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் உள்ளதால், ருஷ்டியின் வீடியோகாட்சியை ரத்து செய்யும்படி போலீசார் அறிவுறுத்தினர். வேறு வழியில்லாத நிலையில், விழா ஏற்பாட்டாளர்கள் இந்த வீடியோ காட்சியை ரத்து செய்தனர். அதுமட்டுமல்லாது ருஷ்டியின் வீடியோ காட்சி இணைப்பும் அரசால் துண்டிக்கப்பட்டது.
இலக்கிய விழா நடக்கும் இடத்தை அளித்த ராம்பிரதாப் சிங் குறிப்பிடுகையில், ""என் இடத்தை சுற்றிலும் போராட்டக்காரர்கள் சூழ்ந்துள்ளனர். என்னுடைய சொத்து அமைந்த பகுதியில் வன்முறை ஏற்படுவதை விரும்பவில்லை; என்னுடைய குடும்பத்தினரும், குழந்தைகளும் இந்த இடத்தில் தான் உள்ளனர். எனவே, வீடியோ காட்சியை அனுமதிக்க முடியாது,'' என்றார். முன்னதாக திட்டமிட்டபடி வீடியோ காட்சி ஒளிபரப்பப்படும் என, விழா நிர்வாகி சஞ்சய் ராய் கூறியிருந்தார்.
வீடியோ காட்சி ரத்தானது குறித்து சஞ்சய் ராய் குறிப்பிடுகையில், ""சல்மான் ருஷ்டியின் முகத்தை

Advertisement

திரையில் காட்டுவதை கூட நாங்கள் பொறுத்து கொள்ள மாட்டோம்'' என, போராட்டக்காரர்கள் எங்களிடம் கூறினர். இது துரதிருஷ்டவசமானது முட்டாள் தனமான சூழலால் மீண்டும் நாங்கள் பேச்சுரிமை சுதந்திரத்துக்கு எதிரான போராட்டத்தில் பின் தங்கியுள்ளோம். விழா திடலில் கூடியுள்ளவர்களை பாதுகாக்க, நாங்கள் போராட்டக்காரர்களின் நிபந்தனைகளுக்கு பணிய வேண்டியதாக விட்டது. எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போராட்டக்காரர்கள், விழா நடக்கும் இடத்திலேயே தொழுகை நடத்தினர். ருஷ்டியின் வீடியோ ஒளிபரப்பினால் அதிகப்படியானபாதுகாப்பு அளிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என, துணை கமிஷனர் வீரேந்திர ஜாலா கூறினார். இது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. எங்கள் மனம் மிகவும் புண்பட்டுள்ளது' என்றார்.
ஓட்டு வங்கி அரசியல் : ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மைனாரிட்டி மக்கள் சிலர் உயிரிழந்தனர். இதையெல்லாம் மூடி மறைக்கவும், உத்தர பிரதேச தேர்தலில் முஸ்லிம்களின் ஓட்டுகளை பெறவும், இலக்கிய திருவிழாவில் ருஷ்டியின் வீடியோ காட்சியை அரசு துண்டித்துள்ளது. இதன் மூலம் இன்டர்நெட் தணிக்கை முறையை திணிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இலக்கிய விழாவுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருப்பதாக தெரிவித்த மாநில அரசு, போராட்டக்காரர்களை விழா பந்தலுக்குள் நுழைய விட்டது எப்படி? இது முன்கூட்டியே திட்டமிட்ட செயல். ஓட்டு வங்கிக்காக காங்கிரஸ் அரசு, தரம் தாழ்ந்து செயல்படுகிறது.
- பிரகாஷ் ஜவேத்கார், பா.ஜ., தகவல் தொடர்பாளர்


மேலும் சம்பவம் செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (22)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இர்பான் கான் - nagappattinam dist,இந்தியா
25-ஜன-201222:50:45 IST Report Abuse
இர்பான் கான் பிரச்சனை கூறிய எழுத்தாளர் இவர் , இவரை வைத்து இலக்கிய விழா நடத்துவது ஆபத்து , இலக்கிய விழா எற்பாடு செய்தவர்களை தண்டிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
devaraya kumaravel - mysore,இந்தியா
25-ஜன-201214:30:49 IST Report Abuse
devaraya kumaravel There are more serious problems in India which media should focus other than Rushdie
Rate this:
Share this comment
Cancel
Ahamed Syed - Al Ajman,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஜன-201211:51:04 IST Report Abuse
Ahamed Syed விடியோவை தடை செய்ததற்கு மிகவும் மகிழ்ச்சி.... மிகவும் நன்றி ராஜஸ்தான் போலீஸ்.....
Rate this:
Share this comment
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
25-ஜன-201210:22:26 IST Report Abuse
JAY JAY ருஷ்டி ஒரு குறிப்பிட்ட மதத்தை கேவலபடுத்தி எழுதியதால் , அந்த மதத்தினர் , ருஷ்டியை எதிர்க்கின்றனர்.... இதில் பாஜக வுக்கு என்ன கவலை ?? புரியவில்லையே எதிரிக்கு எதிரி நண்பன்?
Rate this:
Share this comment
Cancel
SENTHIL KUMAR - MADURAI,இந்தியா
25-ஜன-201207:39:40 IST Report Abuse
SENTHIL KUMAR தனிப்பட்ட ஒரு சமுதாயத்திற்கு எதிராக அந்த வீடியோவில் அப்படி என்னதான் உள்ளது. வீடியோவில் என்ன இருக்கிறது என்பது தெரியாமலே அதை கண்மூடித்தனமாக எதிர்ப்பது துரதிர்ஷ்டவசமானது.
Rate this:
Share this comment
Cancel
Paramasivam Ramasamy - Namakkal,இந்தியா
25-ஜன-201207:03:48 IST Report Abuse
Paramasivam Ramasamy ஒரே வார்த்தைல கிருஷ்ணன் முடிச்சுட்டாரு..... இதுக்கு மேல பேச ஒன்னும் இல்ல.... அதுதானே உண்மை....
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
25-ஜன-201206:38:55 IST Report Abuse
ஆரூர் ரங சீரங்க நாதரையும் தில்லை நடராசரையும் பீரங்கி வைத்துப் பிளப்பதுவும் எக்காலம்? ஏரோட்டும் மக்களெல்லாம் ஏங்கித் தவிக்கையிலே தேரோட்டம் ஏன் உனக்கு என இந்து நம்பிக்கைகளை திராவிட இயக்கத்தினர் கேவலமாக சித்திரித்தபோது,இந்துக்கள் பொங்கியா எழுந்தனர்? ஆனால் அப்போததைவிட இப்போதுதான் அதிக பக்தி. அதிக குடமுழுக்கு விழாக்கள், புதுப் புதுக் கோவில்கள் என தமிழகம் இந்துமதத்தைப் போற்றுகிறது. சில பிச்சைக்கார லூசுகளின் போராட்டத்துக்காக பயந்து எந்தக் கடவுளும் ஓடமாட்டார் எல்லாம் வல்ல இறைவனுக்கு தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளத் தெரியும் . எங்க மதத்தை நாங்கதான் காக்கிறோமென யாராவது சொன்னால் அது அறியாமை
Rate this:
Share this comment
Cancel
rejish babu FR - trivandrum,இந்தியா
25-ஜன-201206:28:27 IST Report Abuse
rejish babu FR அட்ரா சக்கை.... ராமன் குடிகாரன்... ராமன் என்ன பொறியாளரா என கேட்டவர்களை எல்லாம் மடியில் வைத்துகொள்ளும் காங்கிரஸ் சல்மான் ருஷ்டியை மட்டும் ஏன் தடை செய்கிறது.... சரி அதை விடுவோம். எந்த மதத்தை பத்தி தவறாக சொன்னாலும் அது கண்டிக்கத்தக்கது.....முஸ்லிம் மதத்தை தவறாக கூறிய ருஷ்டியை எதிர்த்து முஸ்லிம் அமைப்பினர் போராடுவதில் எந்த தவறும் இல்லை...ஆனால் ஹிந்துக்களுக்கு ஆதரவாக .யாராவது போராடினால் அவர்களை மட்டும் மதவாதிகள் என முத்திரை குத்துவது எதனால்?.. ஹிந்துக்களே சிந்திப்பீர்...
Rate this:
Share this comment

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load.asp, line 349