பொது செய்தி

இந்தியா

"என்னை கிரிமினலாக்க பார்க்கின்றனர்': அன்னா ஹசாரே

Updated : ஜன 30, 2012 | Added : ஜன 27, 2012 | கருத்துகள் (48)
Share
Advertisement

புதுடில்லி: "வன்முறைக்கு ஆதரவாக, நான் எதையும் பேசவில்லை' என, காந்தியவாதி அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிராக போராடி வரும் அன்னா ஹசாரே, மகாராஷ்டிராவில் உள்ள தனது கிராமமான ராலேகான் சித்தியில், உடல்நலக் குறைவு காரணமாக, ஓய்வெடுத்து வருகிறார். ஊழலுக்கு எதிரான கதையம்சம் கொண்ட, "கலி கலி சோர் ஹாய்' என்ற திரைப்படம், இவருக்காக ராலேகான் சித்தி கிராமத்தில், சமீபத்தில் திரையிடப்பட்டது. இந்த படத்தை இயக்கிய டைரக்டர்கள், இப்படத்தில் நடித்த நடிகர்கள்


உள்ளிட்டோர், ஹசாரேவுடன் சேர்ந்து படத்தை பார்த்தனர். அப்போது, ஹசாரே குறிப்பிடுகையில், " ஊழல் முடிவுக்கு வராத நிலையில், பொறுமையிழக்கும் போது, ஊழல்வாதியை கன்னத்தில் அறைவதைத் தவிர வேறு வழியில்லை' என கூறியிருந்தார். இதற்கு, காங்கிரஸ் கட்சி சார்பில், கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. "அகிம்சையை போதித்த காந்தியடிகள் வழியில் நடப்பதாகக் கூறும் ஹசாரே, கன்னத்தில் அறைவதை ஆதரித்துபேசுகிறார்' என்றும், "அவர் வன்முறையை தூண்டுகிறார்' என்றும், கண்டனங்கள் எழுந்தன.

இது குறித்து, ஹசாரே தனது சமூக வலை தளத்தில் குறிப்பிடுகையில், "நான் பல ஆண்டுகளாக, ஊழலுக்கு எதிராக போராடி வருகிறேன். இந்த கால கட்டத்தில், நான் யாரையும் தாக்கியது கிடையாது; தாக்கச் சொன்னதும் கிடையாது. அப்படி இருக்கையில்,


நான் வன்முறையை தூண்டுவதாகக் கூறி, என்னை கிரிமினலாக்க பார்க்கின்றனர். "சமீப கால நிகழ்வுகளை வைத்தும், படத்தில் வந்த காட்சி குறித்தும் கேட்ட போது, நான் கன்னத்தில் அறைவதற்கு ஆதரவாக பேச நேர்ந்ததேதவிர, நான் ஒரு போதும் வன்முறையை ஆதரித்துப் பேசவில்லை. என் மீது அவதூறை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். என் மீது சிறு கறை படிவதைக் கூட, நான் அனுமதிப்பதில்லை. உடல் நலம் தேறியதும், நாடு முழுவதும் சுற்றுப் பயணம் சென்று, ஊழலுக்கு எதிராக பிரசாரம் செய்ய உள்ளேன். அப்போது மக்களும், ஊழல்வாதிகளும் என்னைப் பற்றி புரிந்து கொள்வார்கள்' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bn7 indian - kaandhahar,ஆப்கானிஸ்தான்
28-ஜன-201222:28:29 IST Report Abuse
bn7 indian இங்கே அன்னா ஹசாரே அவர்களை குறை கூறுபவர்கள் அனைவரக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். அன்னா ஹசாரே அவர்களிப்பற்றிய முதல் மூன்று குறைகளை எழுவதற்கு முன்பாக நீங்கள் ஒவ்வொருவரும் இதுவரை ஊழலை தடுப்பதற்காக செய்த காரியங்களில் ஏதேனும் ஒன்றே ஒன்றை எழுதிவிட்டு பின்னர் உங்கள் "அன்னா ஹசாரே குறைப் பட்டியலை" தொடங்கினால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
Rate this:
Cancel
raja - karaikudi,இந்தியா
28-ஜன-201222:04:15 IST Report Abuse
raja வயிறு பிரச்சனை எதுவும் இருந்தால் மறுபடியும் போய் உண்ணாவிரதம் இருக்க வேடியது தானே .உன்னை நம்பியும் கூட்டம் கூடுகிறார்கள் அவர்களை சொல்லணும்
Rate this:
nakkeeran - chennai,இந்தியா
30-ஜன-201215:28:23 IST Report Abuse
nakkeeranநிறுத்து உனக்கெல்லாம் கொஞ்சமாவது..........
Rate this:
Cancel
Vijayakumar - Chennai,இந்தியா
28-ஜன-201214:05:56 IST Report Abuse
Vijayakumar த‌ங்க‌மான க‌ருத்து..... த‌ங்க‌ராசு சார்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X