பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் கவலை: லட்சியத்துக்கு வேட்டு வைக்கும் மின்வெட்டு

Added : பிப் 12, 2012 | கருத்துகள் (39)
Share
Advertisement
கோவை:தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தொடர் மின்வெட்டு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கு தயார் ஆகி வரும் மாணவ மாணவியருக்கு கவலை அளித்துள்ளது. தேர்வு முடியும் வரையிலாவது இரவு நேர மின்வெட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என, முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வரும் மார்ச் மாதமும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள்
 மாணவர்கள் கவலை: லட்சியத்துக்கு வேட்டு வைக்கும் மின்வெட்டு:தேர்வு காலத்தில் பாடங்களை படிக்க ச

கோவை:தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தொடர் மின்வெட்டு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கு தயார் ஆகி வரும் மாணவ மாணவியருக்கு கவலை அளித்துள்ளது. தேர்வு முடியும் வரையிலாவது இரவு நேர மின்வெட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என, முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வரும் மார்ச் மாதமும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரலிலும் நடைபெறவுள்ளன. பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இயற்பியல் செயல்முறை தேர்வுகள் நடத்துவது பள்ளிகளுக்கு பெரும் சவால் ஆக இருந்து வருகிறது. இதனால் மின்வெட்டு இல்லாத நேரத்தில் செய்முறை தேர்வுகளை நடத்துமாறு, பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு பல்வேறு இடர்களுக்கு மத்தியில் அதிக மதிப்பெண் பெறும் நோக்கத்துடன் மாணவ, மாணவியர் இரவும், பகலும் தீவிரமாக படித்து வருகின்றனர்.


மாணவ மாணவியரின் முயற்சியை குலைக்கும் விதமாக உள்ளது அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு. பகல் பொழுதை பள்ளி மற்றும் டியூஷன் வகுப்புகளில் கழிக்க வேண்டிய நிலையில் உள்ள மாணவ மாணவியர், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில்தான் அமைதியாக தேர்வுக்கு படிக்க முடிகிறது. ஆனால் இரவில் ஏற்படும் மின்தடையால் படிக்க முடியாமல் மாணவ மாணவியர் திணறுகின்றனர். கடந்த சில நாட்களாக இரவில் ஒரு மணி நேரம் விட்டு, ஒரு மணி நேரம் மின் வினியோகம் துண்டிக்கப்படுகிறது.


கோவை சித்தாபுதூரை சேர்ந்த மாணவி தன்யா கூறுகையில், ""எப்போது கரன்ட் போகும், எப்போது வரும் என தெரியாததால், பாடங்களை திட்டமிட்டு படிக்க முடியவில்லை. தேர்வுகள் முடியும் வரை இரவு மட்டும் கரன்ட் "கட்' ஆகாமல் இருந்தால் நன்றாக இருக்கும். எங்கள் நலனுக்காக, முதல்வர் இந்த கோரிக்கையை ஏற்க வேண்டும்,'' என்றார்.


இப்போதெல்லாம் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய முக்கிய சப்ஜெக்ட் பாடங்களில் "சென்டம்' பெறுவது சர்வசாதாரணமாகி விட்டது. ஆகவே, மொழிப் பாடங்கள் உட்பட மொத்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால்தான் சிறந்த உயர்கல்வியை தேர்வு செய்ய முடியும் என்ற சூழல் உள்ளது. பிள்ளைகளின் லட்சியம் நிறைவேற பல வீடுகளில் கேபிள் "டிவி' இணைப்பை பெற்றோர் துண்டித்து விட்டனர். பின்னிரவு வரை காத்திருந்து பிள்ளைகளுக்கு டீ வைத்து கொடுப்பது, சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பது போன்ற செயல்களில் பெற்றோர் ஈடுபட்டுள்ளனர். பள்ளிகளிலும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.


ஆனால், மாணவர்களின் லட்சியத்துக்கு தடை போடும் விதமாக மின்சார வெட்டு இருப்பதால், அதிக மதிப்பெண் பெற முடியாமல் போய் விடுமோ என்ற கவலை, பயத்தில் மாணவ மாணவியர் மூழ்கியுள்ளனர். மாணவ மாணவியரின் மன உளைச்சலை போக்கும் விதமாக, தேர்வு முடியும் வரையாவது இரவு நேர மின்வெட்டுக்கு தடை விதிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
john - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-பிப்-201202:06:01 IST Report Abuse
john இங்கே கட்சிகள் மாறும் ஆனால் காட்சிகள் மாறாது...இவர்களிடம் மின் தட்டுபாடை போக்க திட்டங்களே இல்லை , சங்கரன் கோயில் தேர்தலில் வெற்றி பெறுவதை சவால் விட்ட முதல் அமைச்சர் மின் தட்டுபாட்டை போக்க சவால் விட வேண்டியது தானே ....மைனாரிட்டி என்று ஏக வசனம் பேசினால் போதாது மின் myனரிடியை மெஜாரிட்டி யாக மாற்றி காட்டுங்கள் .......இது தன உங்களுக்கு எட்டர சவால்...
Rate this:
Cancel
devaraya kumaravel - mysore,இந்தியா
13-பிப்-201219:44:07 IST Report Abuse
devaraya kumaravel The year 2011 month February and the year 2012 February, same power plants ,same Electricity Board ,same Industries but 2011 february power cut everyday 2 hours, 2012 february power cut 8 hours ,only change was govt ,people wanted change for better but what they got was worst.
Rate this:
Cancel
raja - chennai,இந்தியா
13-பிப்-201219:26:08 IST Report Abuse
raja நெய்வேலி,சமயநல்லூர் மின் நிலையம், சென்னை அனல் மின் நிலையம் ,கல்பாக்கம் அணு மின் நிலையம் ,பெரியாறு மின் திட்டம்,குந்தா மின் திட்டம் கும்பார்,மேட்டூர் ,மோயாறு,கூடலூர் நீர் மின் திட்டம் ,சாண்டிய நல்லூர் ,பரம்பிக்குளம் இவை அனைத்தும் காமராஜரால் தொடங்கப்பட்டது . மற்றவர்கள் என்ன செய்தார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X