சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் வேலைநிறுத்தம் : ரூ. 60 கோடி அளவிற்கு பாதிப்பு

Added : பிப் 22, 2012 | கருத்துகள் (5)
Share
Advertisement
திருப்பூர் : மாநிலத்தில் நிலவி வரும் தொடர்மின்வெட்டை கண்டித்தும், தடையில்லா மின்சாரத்திற்கு கூடங்குளம் அணுமின் உøலையை உடனே திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூர் தொழிற்பாதுகாப்புப் படை சார்பில் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு நடைபெற்றது. பெட்டிக்கடைகள் முதல் பெரிய ஹோட்டல்கள் வரை அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. தங்களது போராட்டம் 90 சதவீதம்
திருப்பூரில் வேலைநிறுத்தம் : ரூ. 60 கோடி அளவிற்கு பாதிப்பு

திருப்பூர் : மாநிலத்தில் நிலவி வரும் தொடர்மின்வெட்டை கண்டித்தும், தடையில்லா மின்சாரத்திற்கு கூடங்குளம் அணுமின் உøலையை உடனே திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூர் தொழிற்பாதுகாப்புப் படை சார்பில் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு நடைபெற்றது.

பெட்டிக்கடைகள் முதல் பெரிய ஹோட்டல்கள் வரை அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. தங்களது போராட்டம் 90 சதவீதம் வெற்றி அடைந்துள்ளதாக தொழிற்பாதுகாப்புபடை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்றைய ஒருநாள் வேலைநிறுத்தத்தின் மூலம், ரூ. 40 கோடி அளவிற்கு பனியன் உற்பத்தியும், ரூ. 20 கோடி அளவிற்கு வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தொடர்மின்வெட்டு காரணமாக, ரூ. 30 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருப்பூர் காதர்பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் பனியன் சில்லரை வர்த்தகத்தில் ரூ. 25 கோடி அளவிலும், பனியன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பிரிவில் ரூ. 35 கோடி அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கோவையில் கல்வீச்சு - 12 பேர் கைது: மின்வெட்டை கண்டித்தும், கூடங்குளம் அணுமின் உலையை உடனே திறக்கக் கோரி இந்து முன்னணி அமைப்பு சார்பில் கோவை, பல்லடம், அவிநாசி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடையடைப்பு நடத்தப்பட்டது. கோவையில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. கிராஸ்கட் பகுதியில் திறந்திருந்த 4 பேக்கரி, 1 ஹோட்டல் உள்ளிட்ட 12 வர்த்தக நிறுவனங்கள் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
baburahavan - chennai,இந்தியா
22-பிப்-201220:30:36 IST Report Abuse
baburahavan திருப்பூர் வேலைநிறுத்தத்தால் பாதிப்பு அவர்களுக்கு மட்டும் இல்லை, சென்னை மற்றும் தூத்துக்குடி இல் உள்ள C&F, Logistics தொழில் செய்யும் அனைவருக்கும் தான்
Rate this:
Cancel
Ebenezar Sundararaj - vellore,இந்தியா
22-பிப்-201217:24:48 IST Report Abuse
Ebenezar Sundararaj ஜெயா விலையில்லா பொருள் வேண்டாம் தடையில்லா மின்சாரத்திற்கு வழி செய்தால் போதும்
Rate this:
Cancel
BLACK CAT - Marthandam.,இந்தியா
22-பிப்-201216:44:31 IST Report Abuse
BLACK CAT திருப்பூரில் வேலைநிறுத்தம் : ரூ. 60 கோடி அளவிற்கு பாதிப்பு :::: இதுவரை நீங்கள் அடித்த கொள்ளை லாபம் போதும் . பத்து நாள் கடை மூடினாலும் பரவா இல்லை ....
Rate this:

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load_full_taboolabc.asp, line 394