ரத்தத்தில் சர்க்கரையை குறைக்கும் ஹார்மோன் கண்டுபிடிப்பு

Added : ஏப் 05, 2012 | கருத்துகள் (7)
Advertisement
ரத்தத்தில் சர்க்கரையை குறைக்கும் ஹார்மோன் கண்டுபிடிப்பு

வாஷிங்டன்: ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழி செய்யும் ஹார்மோனை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். உலகம் முழுவதும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. தற்போது இவர்களுக்கு "இன்சுலின்' மருந்து மட்டுமே வரபிரசாதமாக உள்ளது. இதற்கு மாற்று வழியை கண்டு பிடிக்க பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைகழக விஞ்ஞானிகள், ரத்தத்தில் "குளுகோஸ்' அளவை குறைக்கும் ஹார்மோனை கண்டு பிடித்துள்ளனர். முதல் கட்டமாக இந்த ஹார்மோனை எலிக்கு சோதனை செய்து பார்த்து வெற்றியடைந்துள்ளனர். இதை மனிதர்களிடம் சோதனை செய்து பார்க்கும் முயற்சியில் விஞ்ஞானி ஜொனாதன் க்ராப் தலைமையிலான குழு ஈடுபட்டுள்ளது. "இந்த பரிசோதனை வெற்றியடைந்தால், இன்சுலின் மூலமோ அல்லது மாற்று வகையிலோ இந்த ஹார்மோனை செலுத்தி ரத்தத்தில் சர்க்கரையை கணிசமாக குறைக்க முடியும்' என, விஞ்ஞானி க்ராப் தெரிவித்துள்ளார்.


Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganesan SP - chennai ,இந்தியா
07-ஏப்-201200:05:38 IST Report Abuse
Ganesan SP சர்கரைநோயளிகள் இப்பவே பணம் சேர்த்துவைக்க ஆறம்பிக்கவும் வசுல்வேட்டைக்கு சில டாக்டர்கள் தயார்.
Rate this:
Share this comment
Cancel
ppp - vysarpadi,இந்தியா
06-ஏப்-201222:18:13 IST Report Abuse
ppp Ayurveda tells to eat only 3 meals a day. Lunch is the heaviest meal of the day. And nothing in between. In between our body should burn existing fat. Not keep digesting new foods. And do Hatha yoga. Unave marunthu. Marunthe unavu..
Rate this:
Share this comment
Cancel
Ali Akbar - Male,மாலத்தீவு
06-ஏப்-201217:27:46 IST Report Abuse
Ali Akbar சக்கரை நோய் ஒரு சமுக நோய், ஏன்னா நம்மளோட வாழ்க்கை வாழும் முறை மாறியதே இந்த சக்கரை நோய்க்கு காரணம். இதற்காண நிரந்திர மருந்தை நமது உலக விஞ்ஞானிகள் கண்டறிதல் வேண்டும். அது உலக மக்களுக்கு ஒரு வர பிரசாதமாக அமையும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X