அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்.பி., குழுவில் இளங்கோவன் நியமனம்: தி.மு.க.,வில் அதிருப்தி

Updated : ஏப் 12, 2012 | Added : ஏப் 11, 2012 | கருத்துகள் (40)
Advertisement

இலங்கை செல்லும் எம்.பி.,க்கள் குழு உறுப்பினர் நியமனம் குறித்து, தி.மு.க.,வில் அதிருப்தி அலை எழுந்துள்ளது. ஜெனீவாவில் கடந்த மாதம் 23ம் தேதி நடந்த ஐ.நா., மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக இந்தியா ஓட்டளித்தது. அதன் தொடர் நிகழ்வாக, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில், இந்திய எம்.பி.,க்கள் குழு, வரும் 16ம் தேதி இலங்கை செல்கிறது. ஐந்து நாள் பயணமாக இலங்கை செல்லும் இக்குழுவில், பா.ஜ., சார்பில் வெங்கையா நாயுடுவும் இடம் பெறுகிறார். காங்கிரஸ் சார்பில் கிருஷ்ணசாமி, மாணிக் தாக்கூர், என்.எஸ்.வி.சித்தன், சுதர்சன நாச்சியப்பன், மார்க்சிஸ்ட் சார்பில் டி.கே.ரங்கராஜன், தி.மு.க., சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதிபருடன் சந்திப்பு: இலங்கையில் போரால் அதிகம் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை பார்வையிட்டு, இலங்கையில் தமிழர்களுக்கு செய்யப்பட வேண்டிய மறுவாழ்வுப் பணிகள் குறித்து, இக்குழு ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேயையும் சந்தித்துப் பேச திட்டமிடப்பட்டுள்ளது. இக்குழுவின் நிகழ்ச்சி நிரல்களைப் பார்த்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.க., இக்குழுவில் இடம்பெறாது என்று நேற்று அறிவித்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு இலங்கை சென்ற எம்.பி.,க்கள் குழுவில், டி.ஆர்.பாலு, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். அவர்கள், "ராஜபக்ஷேவை சந்தித்து டீ, பிஸ்கட் சாப்பிட்டு வந்தது தான் மிச்சம்' என்று, அரசியல் ரீதியான விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், தி.மு.க., சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் குழுவில் இடம்பெற்றிருப்பது, அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கைப் பிரச்னை குறித்து பார்லிமென்டில் பலமுறை குரல் கொடுத்து வருபவர்களான டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோரில் ஒருவரை குழுவில் நியமித்திருக்க வேண்டும். ஆனால், அவர்களைப் புறக்கணித்து இளங்கோவனை நியமித்திருப்பது, சிலரை திருப்திப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கனிமொழி காரணமா: கனிமொழியின் பரிந்துரையின்படி, பார்லிமென்ட் குழுவில் இளங்கோவன் இடம்பெற்றுள்ளதாக கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதுகுறித்து, தி.மு.க.,வின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும் போது, "கடந்த 2002ம் ஆண்டு தி.மு.க.,வுக்கு வந்தவர் இளங்கோவன். பல மூத்த உறுப்பினர்களைப் புறக்கணித்து அவருக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது, கட்சியின் மூத்த தலைவர்களின் மத்தியில் அதிருப்தி அலையை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் பொதுச்செயலர் க.அன்பழகன் கூட அதிருப்தியில் உள்ளார். இந்த அதிருப்தி கட்சியின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும்' என்றார்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dharmaraj - Toronto,கனடா
12-ஏப்-201221:12:52 IST Report Abuse
Dharmaraj இவர்கள் சுதந்திரமாக மக்களை சந்திக்க முடியாது என தெளிவாகத் தெரிந்த பின்னரும் கூட எதற்காக அங்கு செல்ல வேண்டும்? பரிசுகளை ஒன்றும் ராஐபக்ஷே சும்மா கொடுப்பதில்லை. பரிசுகளில் அனேகமாக விலைஉயர்ந்த ரத்தினக்கற்கள் வளமையாக இருக்கும். இவை சும்மா கற்கள் அல்ல, மலையாள மற்றும் சிங்கள மந்திரவாதிகளால் மந்திரிக்கப் பட்டவை. இவற்றை வைத்திருப்பவர்களின் வாழ்க்கையில் பிரச்சினைகள் தோன்றும். போன தடைவ இவ்வாறான மந்திரிக்கப் பட்ட ரத்தினக் கற்களைப் பெற்றுக் கொண்ட கனிமொழி கம்பி எண்ண வேண்டி வந்தது. தி.மு.க தூக்கி எறியப்பட்டது. திருமாவளவன் செல்வாக்கை இழந்து நிற்கிறார். இம்முறை மாட்டப் படப்போவது யார் என்று பார்ப்போம் தர்மராஜ் canada
Rate this:
Share this comment
Cancel
No.17 Kala - Chengalpattu,இந்தியா
12-ஏப்-201215:59:04 IST Report Abuse
No.17 Kala இது ஒரு குழு இதுக்கு இளங்கோ போனால் என்ன வேறு எதாவது M P போனால் ஒன்னும் நடக்கபோரதில்லை இதுக்கு அதிருப்தி வேற அட போங்கப்பா,,... அசோக் குமார் B
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
12-ஏப்-201215:09:50 IST Report Abuse
Nallavan Nallavan இலங்கைத் தமிழர்களை அவர்தம் வீடுகளில் மீள்குடி அமர்த்த இலங்கையை வற்புறுத்துவதில் ஜே-க்கு அக்கறை இல்லையோ என்று முதலில் (அதிமுக எம்.பி. -யாரையும் அனுப்ப மறுத்ததால்) நினைத்தேன். திமுக-வில் எழுந்துள்ள சர்ச்சையைப் பார்த்தால் இலங்கை செல்லும் எம்.பி.-க்கள் குழு நோக்கத்தை மறந்து விட்டு, கவுரவப் பிரச்னை, அதிகாரம், மரியாதை போன்ற விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துவது போலத் தோன்றுகிறது. இவர்கள் போய் ஒன்றும் கிழிக்கப் போவதில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X