"பத்து நாட்களில் கருத்தை வாபஸ் பெறவேண்டும்' : நித்யானந்தா எச்சரிக்கை

Updated : மே 04, 2012 | Added : மே 02, 2012 | கருத்துகள் (124) | |
Advertisement
மதுரை:""என்னிடம் விளக்கம் கேட்காமல், என்னை பற்றி அவதூறாக பேசிய கருத்தை, 10 நாட்களுக்குள் வாபஸ் பெறாவிட்டால் வழக்கு தொடருவேன்,'' என, தனக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய ஆதீனங்களுக்கு சாமியார் நித்யானந்தா எச்சரிக்கை விடுத்தார். நேற்று மதுரை ஆதீனம் மடத்தில் அவர் கூறியதாவது :இளைய ஆதீனமாக நான் நியமிக்கப்பட்டதற்கு எதிராக, நேற்று முன் தினம் மயிலாடுதுறையில் ஆதீனங்கள்

மதுரை:""என்னிடம் விளக்கம் கேட்காமல், என்னை பற்றி அவதூறாக பேசிய கருத்தை, 10 நாட்களுக்குள் வாபஸ் பெறாவிட்டால் வழக்கு தொடருவேன்,'' என, தனக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய ஆதீனங்களுக்கு சாமியார் நித்யானந்தா எச்சரிக்கை விடுத்தார். நேற்று மதுரை ஆதீனம் மடத்தில் அவர் கூறியதாவது :இளைய ஆதீனமாக நான் நியமிக்கப்பட்டதற்கு எதிராக, நேற்று முன் தினம் மயிலாடுதுறையில் ஆதீனங்கள் பேசியுள்ளனர். நான் தன்னிலை விளக்கம் அளிக்க தயாராக இருந்தும், பலமுறை போனில் தொடர்பு கொண்டும், பிரதிநிதிகள் மூலம் பேசவும் ஆதீனங்கள் மறுத்துவிட்டனர். கொலை குற்றவாளிக்குகூட பேச வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் எனக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. என்னை குற்றவாளியாக்கி விட்டனர். இது வருத்தத்திற்குரியது.

பொது வாழ்க்கையில் யார் மீதுதான் வழக்கு இல்லை. இந்தியாவில் 3.50 லட்சம் கற்பழிப்பு வழக்குகள் உள்ளன. அதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் இருக்கும். ஆனால் என் மீது போடப்பட்ட பாலியல் வழக்கில், எந்த பெண்ணின் பெயரும் இல்லை. அது பொய் வழக்கு. இந்து மத தாக்குதலாக இதை கருதுகிறேன். நான் பீடத்திற்குள் இருந்திருந்தால் இப்பிரச்னை வந்திருக்காது. நான் ஆன்மிக சேவை செய்வதால் பிரச்னை செய்கின்றனர். உலகிலேயே ஆன்மிக கருத்துகளை பரப்புவதில் நான்தான் முதலிடத்தில் உள்ளேன். மொத்தம் 10 ஆயிரம் மணி நேரம் பேசியுள்ளதால், இந்தாண்டு இறுதியில் கின்னஸிலும் இடம்பெறுவேன்.

புகழ், பணத்திற்காக இளைய ஆதீனமாக நான் பொறுப்பேற்கவில்லை. மூத்த ஆதீனத்திற்கு பணி செய்யவே வந்தேன். நான் மற்ற ஆதீனங்களுக்கு போட்டி இல்லை. என்னை பற்றி அவர்கள் பேசியதால், நானும் பேச வேண்டியுள்ளது. இது போராக மாறிவிட்டது. இனி நான் பின்வாங்கினால் அது அசிங்கம். எனது சொத்துக்களை விட்டுவிட்டு, நடுரோட்டில் வருகிறேன். ஆதீனங்களும் வரட்டும். நான் ஒருமாதத்தில் மீண்டும் நித்யானந்தா பீடத்தை உருவாக்கி காட்டுவேன். நான் சவால் விடவில்லை.

உறுதிமொழி : மதுரை ஆதீனம் சொத்தை விற்கமாட்டேன். என்னால் எந்த இழப்பும் வராது. நான் இருக்கும் வரை மேன்மேலும் சொத்துகள் சேர்ப்பேன். ஆதீனத்தின் பணிகள் விரிவுப்படுத்தப்படும் என உறுதி கூறுகிறேன். ஏற்கனவே நித்யானந்தா பீடத்திற்குரிய சொத்துக்களை வெளியிட்டேன். ஆதீனம் விரும்பினால், ஆதீன மடத்தின் சொத்துக்களை வெளியிட ஏற்பாடு செய்வேன்.

5 பிரிவுகளில் வழக்கு: சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பிறகே நான் இளைய ஆதீனமாக பொறுப்பேற்றேன். ஆதீனங்கள் சட்ட நடவடிக்கை எடுத்தால் அது செல்லாது. ஆதீனங்களுக்கு எதிராக கூட்டுச்சதி, மானநஷ்டம், அவதூறு, ஜாதியை பற்றி அவதூறு, மத உணர்வுகளை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின்கீழ் எனது பக்தர்கள் வழக்கு தொடர உள்ளனர்.

மதஉணர்வை தூண்டும் வழக்கிற்கு அரசு அனுமதி தேவை. இதற்காக சீடர்கள் ரத்த கையெழுத்து, கைநாட்டு வைத்து அரசுக்கு விண்ணப்பிப்பர். பத்து நாட்களுக்குள் என்னை பற்றிய கருத்துகளை ஆதீனங்கள் வாபஸ் பெறாவிட்டால், தருமபுரம் ஆதீன மடம் முன் சீடர்கள் தொடர் உண்ணாவிரதம் இருப்பர். அவர்களை நான் தடுக்க முடியாது. ஆதீனங்கள் குறித்து 108 "விஷயங்களை' என்னால் கூறமுடியும்.யார் தடுத்தாலும் எனது ஆன்மிக பணியை நிறுத்த முடியாது. எல்லாவித இழப்பையும், மானபங்கத்தையும் பார்த்துவிட்டேன். எதுவும் இல்லாமல் என்னால் வாழ முடியும்.

தனியார் துப்பறியும் நிறுவனம் மூலம் நான் விசாரித்ததில், மதுரை ஆதீனம் சொத்தை சட்டவிரோதமாக அனுபவிக்கும் 7 பேர்தான், எனக்கு எதிராக பிரச்னையை தூண்டியது தெரியவந்தது. நான் பொறுப்புக்கு வந்துவிட்டால், கண்டுபிடித்துவிடுவேனோ என்ற பயமே இதற்கு காரணம். இவர்கள் குறித்து போலீசில் புகார் செய்வேன். இந்து அமைப்புகள் என்ற பெயரில் யாராவது தகராறு செய்தால், அதற்கு திருப்பனந்தாள் ஆதீனம்தான் பொறுப்பு. இவ்வாறு கூறினார்.

நான் சைவ பிள்ளை!சைவ பிள்ளைமார் வகுப்பை சேர்ந்தவர்களைதான் மதுரை ஆதீனமாக நியமிக்கப்படுவது மரபு. ஆனால் நித்தியானந்தா முதலியார் வகுப்பை சேர்ந்தவர் என சர்ச்சை எழுந்தது. இதை மறுத்த நித்யானந்தா,""நான் பரம்பரை சைவ பிள்ளைமார் வகுப்பை சேர்ந்தவன். இதை இங்கு வந்துள்ள எனது தாத்தா, பெரியப்பாவிடமே கேளுங்கள்,'' என்றார். தாத்தா, பெரியப்பா கூறுகையில், ""நாங்கள் சைவ பிள்ளைமார் வகுப்பை சேர்ந்தவர்கள். தொழில் அடிப்படையில் முதலியார், செட்டியார் என்று பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொள்வோம்,'' என்றனர்.

மதுரை ஆதீனம் கூறுகையில், ""289,290வது ஆதீனமாக இருந்தவர்கள் தொண்டை மண்டல முதலியார் வகுப்பை சேர்ந்தவர்கள். ஆனால் அடிப்படையில் அவர்கள் பரம்பரை சைவ பிள்ளை. அதுபோல்தான் நித்தியானந்தாவும் தொண்டை மண்டல முதலியார்,'' என்றார்.

சீடருக்கு கை நழுவிய பதவி!"இவ்வளவு சர்ச்சைகளுக்கு பிறகும், இளைய ஆதீனமாக பதவி வகிக்க வேண்டுமா' என நிருபர்கள் கேட்டதற்கு, நித்யானந்தா கூறியதாவது:
எனக்கு பதவி வேண்டாம் என நான்கு முறை ஆதீனத்திடம் கூறினேன். எனக்கு பதிலாக, எனது சீடர் ஞானசொரூபானந்தாவை நியமிக்குமாறு கேட்டேன். இவர் துபாயில் ஓட்டல் மேனேஜ்மென்ட்டாக பணிபுரிந்து ஆண்டுக்கு ரூ.25 லட்சம் சம்பாதித்தவர். பணத்திற்காக
ஆசைப்படாதவர். ஆனால் இவரை ஆதீனம் ஏற்கவில்லை. நான்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார். அவர் கூறினால் இப்போதே விலகிவிடுகிறேன். நான் பொறுப்பேற்றதை வி.எச்.பி., தலைவர் அசோக்சிங்கால், ரவிசங்கர்ஜி, மாதாஅமிர்தானந்தமயி, காஞ்சி ஜெயந்திரர் மற்றும் 40 சமூக, ஆன்மிக தலைவர்கள், சைவ வேளாளர் அமைப்பினர் ஆதரித்துள்ளனர் என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (124)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tamizhalagi - chennai,இந்தியா
06-மே-201222:11:31 IST Report Abuse
tamizhalagi எனக்கு எதுவும் சொல்ல தோன்றவில்லை. பேசாமல் எல்லா ஆன்மிக மடங்களின் சொத்தையும் அரசுடமையாக்கி ( அரசியல்வாதிகள் திருடாமல் இருக்க வேண்டும் ) அரசாங்கமே கோயில்களையும் பராமரித்து,ஒவ்வொரு மடத்திற்கும் கோயில் சேவை செய்ய சமய நெறி பரப்ப மாதம் தோறும் மான்யம் அளிக்க வேண்டும். முற்றும் துறந்த மடாதிபதிகள் இதற்கு ஒத்துகொள்வார்களா? மடங்களின் சொத்துக்களை எல்லாம் எடுத்து முறைப்படி செலவளித்தால் தமிழ் நாட்டில் அனாதை குழந்தைகளும் முதியவர்களும் முழுமையாக காப்பாற்ற படலாம்.பல மருத்துவமனைகள் கட்டி ஏழைகளுக்கு மருத்துவ சேவை செயலாம்.பல வேலை வாய்பை ஏற்படுத்தலாம்.பிராணிகளுக்கு காப்பகங்கள் அமைக்கலாம்.இப்படி எத்தனையோ செயலாம்.இதையெல்லாம் அரசு நடவடிக்கை எடுத்து முறைபடுத்தி செயல் படுத்துமேயானால் கண்ட திருட்டு பூனைகளும் மடத்தின் கஜானாவை உருட்டி திருடி தின்பதை தவிர்க்கலாம்.....
Rate this:
Cancel
K.T.SELVAKUMAR - COIMBATORE,இந்தியா
04-மே-201211:21:36 IST Report Abuse
K.T.SELVAKUMAR இது போன்ற ஆட்களின் பின்னால் செல்லும் குருட்டு கும்பல் திருந்தினால் தான், அந்த நாள் விரைவில் வர, உண்மையான ஆன்மிக பக்தர்கள் இறைவனை பிராத்திப்போம்.நம் போன்றவர்களால் வேறு என்ன செய்ய முடியும் .
Rate this:
Cancel
arumugam subbiah - alkobar,சவுதி அரேபியா
03-மே-201223:56:11 IST Report Abuse
arumugam subbiah 2500 ஏக்கர் மதுரை ஆதினத்திற்கு சொந்தமான நிலம் தனியாருக்கு சில வருட காலம் குத்தகைக்கு விடப்பட்டது. குத்தகை முடிந்த பின்பும் அதை ஆதினத்திற்கு திரும்ப தராமல் தன்னகத்தே கையகப்படுத்த நினைக்கும் கும்பலிடமிருந்து மீட்டு சமூகம் பயன் பெறும் வகையில் மருத்துவ கல்லூரி கட்டுவேன் என்றே நித்யானந்தா கூறியுள்ளார். கோவில் (ஆதினம்) சொத்தை தன்னலமாக்க நினைக்கும் கயவர்களை இங்கு யாரும் சீண்டவில்லை. ஆனால் தான் சம்பாதித்த (அவருக்கு பொது மக்கள் கொடுத்த நன்கொடையாக கூட இருக்கலாம் ) பணத்தை 5 கோடி ரூபாயை ஆதினந்தின் வளர்ச்சி பணிக்கு கொடுக்கும் அவருக்கு வசை மழையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X