கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நான் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை: மதுரை ஆதீனம் ஐகோர்ட்டில் பதில்

Updated : மே 05, 2012 | Added : மே 03, 2012 | கருத்துகள் (35)
Advertisement

மதுரை: மதுரை ஆதீனத்தை ஆஜர்படுத்தக்கோரிய வழக்கில், "நான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை', என அவர் மதுரை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். மதுரை தர்மபுரம் ஆதீன மடம் மேலாளர் குருசாமி தேசிகர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு: நித்யானந்தா, மதுரை ஆதீனத்தை மிரட்டி, தன்னை அடுத்த ஆதீனமாக அறிவிக்கச் செய்துள்ளார். நித்யானந்தாவின் முழுக் கட்டுப்பாட்டில் மதுரை ஆதீனம் உள்ளார். மதுரை ஆதீனம் சுயமாக முடிவு எடுக்கவில்லை. அவரை சட்டவிரோத காவலில் நித்யானந்தா வைத்துள்ளார். மதுரை ஆதீனத்தை ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இம்மனு நேற்று, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், டி.ஹரிபரந்தாமன் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மதுரை ஆதீனம் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலம்: நான், நித்யானந்தா உட்பட யாருடைய கட்டுப்பாட்டிலும், சட்டவிரோத காவலிலும் இல்லை. தினமும் பக்தர்கள், பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். மடத்தை நிர்வகிக்க, சரியான அடுத்த ஆதீனத்தை நியமிக்கும் அதிகாரம் எனக்கு உண்டு. நான் வெளிநாடு செல்ல திட்டமிடவில்லை. மனுதாரர் யாரென்று எனக்குத் தெரியாது. அவர் பிறர் தூண்டுதலில், உள்நோக்குடன், கற்பனையான குற்றச்சாட்டுகளுடன் மனு தாக்கல் செய்துள்ளார். சுய விளம்பரத்திற்காக இவ்வாறு செய்துள்ளார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நீதிபதிகள் விசாரணையை இன்று ஒத்தி வைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Maruthu Kps - Madurai,இந்தியா
08-மே-201214:04:34 IST Report Abuse
Maruthu Kps இன்னும் காலம் காலமாக இந்த கொடுமை நடக்குமா?
Rate this:
Share this comment
Cancel
M.S.Jeyakumar - Thirunelveli,இந்தியா
05-மே-201220:39:40 IST Report Abuse
M.S.Jeyakumar எங்க ஊர்ல ஒரு மடத்த புடிக்கணும், ரஞ்சிதா மேடம் ஒரு யோசனை சொல்லுங்க ப்ளீஸ். ஆதீனம் அந்த விசயத்துல இம்.....இம் அப்போ ஈஸீயா புடுசுடலாம்ல, ஹெல்ப் பண்ணுங்க
Rate this:
Share this comment
Cancel
Krishnakumar - Nellore,இந்தியா
04-மே-201222:39:20 IST Report Abuse
Krishnakumar ஹிந்து மதத்தை மட்டும் மட்டம் தட்டி எழுதுவுவதுள் இங்குள்ள வாசகர்களுக்கு என்ன ஓர் ஆனந்தம். கிறிஸ்தவன் முஸ்லிமுக்கு உரிமை இருக்கும் பொது, ஏன்டா எங்க ஹிந்துக்களுக்கு உரிமை இல்ல .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X