அரசியல் செய்தி

தமிழ்நாடு

1,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் சூரிய மின் உற்பத்தி பூங்காக்கள்

Updated : மே 05, 2012 | Added : மே 03, 2012 | கருத்துகள் (23)
Advertisement

சென்னை: தமிழகத்தில், 1,000 மெகா வாட் உற்பத்தி செய்யும், சூரிய மின் உற்பத்தி பூங்காக்கள் அமைக்கப்படும் என, தொழில் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். சட்டசபையில் நேற்று, தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து, அமைச்சர் தங்கமணி பேசியபோது, அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

வேலைவாய்ப்பு: * தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ), தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள வாயலூர் கிராமத்தில், 160 கோடி ரூபாய் முதலீட்டில், பாலிமர்ஸ் பொருட்கள் உற்பத்தி வளாகம் உருவாக்கப்படும். இவ்வளாகத்தில், மோட்டார் வாகனங்கள் மற்றும் இயந்திரங்களுக்குத் தேவையான பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும், 100 தொழிற்சாலைகள் அமைப்பதற்கான வசதிகள் இருக்கும். இவ்வளாகம் முழுமையாகச் செயல்படும்போது, 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

முதலில் எங்கு? * தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023ல், தமிழகத்தில், வரும் 11 ஆண்டுகளில், சூரிய சக்தி மூலம் 5,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில், டிட்கோ நிறுவனம், வரும் ஐந்தாண்டுகளில், 1,000 மெகா வாட் சூரிய மின் உற்பத்தி திட்டங்களைச் செயல்படுத்த, சூரிய மின் உற்பத்தி பூங்காக்கள் அமைக்கப்படும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், படிப்படியாக இவை செயல்படுத்தப்படும். முதல் கட்டமாக, தென் மாவட்டங்களில், 500 ஏக்கர் பரப்பளவில், 1,000 கோடி ரூபாய் முதலீட்டில், 100 மெகா வாட் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் துவக்கப்படும்.

ஊர்தி நிறுத்து மையம்: * சிப்காட் ஒரகடம் தொழில் வளர்ச்சி மையத்தில், பெரும் தொழில் நிறுவனங்களின் வாகனங்களால் ஏற்படும் நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பெரும் ஊர்திகளை நிறுத்த, 10 கோடி ரூபாயில், 10 ஏக்கர் பரப்பளவில், சிற்றுண்டி, தங்குமிடம் ஆகிய வசதிகளுடன் கூடிய, "ஊர்தி நிறுத்து மையம்' ஏற்படுத்தப்படும். இம்மையத்தை, சிப்காட் நிறுவனம் அமைக்கும்.

* சிப்காட் நிறுவன தொழில் வளாகங்களில், மிகவும் பழமையான, ஓசூர், ராணிப்பேட்டை, கும்மிடிப்பூண்டி, இருங்காட்டுக்கோட்டை, கடலூர், தூத்துக்குடி, மானாமதுரை மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, சிப்காட் தன் சொந்த நிதியிலிருந்து, ஆண்டுக்கு இரண்டு வளாகங்களுக்கு, தலா 10 கோடி வீதம், 20 கோடி ரூபாய் செலவிடும்.

கூழ் மரங்கள்: * தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களின் தொழில் முன்னேற்றத்திற்காக, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், பெரம்பலூரில் புதிய கள அலுவலகம் ஒன்று திறக்கப்படும்.

* தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், நொய்யல் ஆற்றுப்பாசனப் பகுதிகளில், சாயக் கழிவு நீரால் மாசுபட்ட நிலங்களில், 1,000 ஏக்கரில், வனத் தோட்ட கூழ் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கு, விவசாயிகளிடம் கிடைத்த வரவேற்பை அடுத்து, நடப்பாண்டில், மேலும் 3,000 ஏக்கரில், வனத்தோட்ட மரக்கன்றுகள் அமைக்கப்படும். இதில் பங்குபெறும் விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு, 4,000 ரூபாய் குத்தகைத் தொகையை, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், ஆறு ஆண்டுகளுக்கு வழங்கும். அதன் பின், தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப, விவசாயிகள் மறு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

உடல்நல உப்பு: "உடல்நல உப்பு' குறித்து அமைச்சர் தங்கமணி அளித்த தகவல்: தமிழ்நாடு உப்பு நிறுவனம், உடல் நலத்திற்கு உகந்த, குறைந்தளவு சோடியம் கொண்ட உப்பை தயார் செய்து, வெளிச்சந்தையில் விற்பனை செய்யும். உப்பின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு, சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்பு தயாரிக்கும் ஆலை, இரண்டு கோடி ரூபாயில், ராமநாதபுரம் மாவட்டம், மாரியூர் வாலிநோக்கம் உப்பு கூட்டுத் திட்டத்தில், இந்த ஆண்டு நிறுவப்படும்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - chennai,இந்தியா
04-மே-201223:56:37 IST Report Abuse
sridhar First tamilnadu.kula irukara நதி நீரை இணைச்சாலே போதும், water & electricity problem will get clear. But it never happens in tamilnadu. Letz c....
Rate this:
Share this comment
Cancel
saraswathi.r - new delhi ,இந்தியா
04-மே-201216:46:46 IST Report Abuse
saraswathi.r நல்ல முயற்சி.இது மட்டுமில்லாமல் நீர் வளத்துக்காகவும் ஏதாவது செய்ய வேண்டும் . மழை காலங்களில் வீணாகும் நீரை சேமிக்க ஒரு நல்ல திட்டம் வகுத்தால் பக்கத்து மாநிலங்களில் கையேந்தும் நிலை வராது
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
04-மே-201214:47:02 IST Report Abuse
Pannadai Pandian ஏனுங்க..........இந்த திட்டத்தில் ஐயாவோட வாழ்வாதாரத்துக்கு ஏதாவது 20 லேந்து 25 விழுக்காடு கமிஷன் கிடைக்குமா ??? ரொம்ப கை அரிப்பு எடுத்து கிடக்குறாரு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X