அரசியல் செய்தி

தமிழ்நாடு

இந்தி திணிப்பு கேலிச்சித்திரத்தை நீக்குக: முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை

Added : ஜூன் 13, 2012 | கருத்துகள் (88)
Advertisement
இந்தி திணிப்பு கேலிச்சித்திரத்தை நீக்குக: முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை

சென்னை: ""இந்தி திணிப்பு போராட்டம் குறித்து, தமிழர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால், 12ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ள கேலிச் சித்திரத்தை, உடனடியாக நீக்க வேண்டும்,'' என, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தி மொழி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி என்பதற்கு, செயல் வடிவம் கொடுக்கும் அப்போதைய மத்திய அரசின் முயற்சியை, இந்தி பேசாத மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தி திணிப்பை எதிர்த்து, திராவிட இயக்கம் போராட்டம் நடத்தியது. தமிழ் மொழி இருக்கின்ற நேரத்திலே பிற மொழியை நுழைக்கின்ற பேதமை, ஆதிக்க மொழியாக்குகின்ற அக்கிரமத்தை நீக்க வழி காண வேண்டும் என, அண்ணாதுரை கூறினார்.


கொச்சைப்படுத்தி...: இந்தப் போராட்டத்தையடுத்து ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டு மொழியுமே மாநிலத்தின் ஆட்சி மொழியாக இருக்கும் என உறுதியளிக்கப்பட்டது. இப்படிப்பட்ட இன்றியமையா தன்மை வாய்ந்த தமிழகத்தில், ஆட்சி மாற்றத்திற்கு ஒரு காரணமாக இருந்த இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில், மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள, 12ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தில், பிராந்திய விழைவுகள் என்ற அத்தியாயத்தில், திராவிட இயக்கம் என்ற தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டுள்ள கேலிச் சித்திரம் அமைந்துள்ளது.


முற்றிலும் மாறாக...: இதுமட்டும் அல்லாமல், இந்தி திணிப்புப் போராட்டத்தை முன் நின்று நடத்திய பெரியார், அண்ணாதுரை ஆகிய மொழிப் போர் தியாகிகளை அவமதிக்கும் வகையிலும் சித்திரம் அமைந்துள்ளது. இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், அதன் உண்மை நிலையை படம் பிடித்துக் காட்டும் வகையிலும், அன்றைய இந்து நாளிதழில் வெளிவந்த புகைப்படம், மேற்படி புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ள போதிலும், இதற்கு முற்றிலும் மாறாக, தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில், இந்த கேலிச் சித்திரம் வெளியிடப்பட்டுள்ளது மிகவும் வருத்தத்துக்குரியது. இதற்கு, கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


பொருத்தமாக அமையாது: திராவிட இயக்கம் குறித்து மாணவ, மாணவியருக்கு விளங்கச் செய்ய வேண்டும் எனில், அதற்கான பாடப் புத்தகத்தில், உண்மை நிலையை விளக்கும் அப்போதைய புகைப்படங்கள் தான், சிறந்த கருவியாக அமையுமே தவிர, கேலிச் சித்திரத்தை வரைந்து, அதில் தமிழக மாணவர்களுக்கு, இந்தி படிப்பது கட்டாயமில்லை என உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டது போலவும், அவை, ஆங்கிலத்தில் உள்ளதால், தமிழ் மாணவர்களுக்கு ஆங்கிலம் படிக்கத் தெரியாது என, ஒருவர் சொல்வது போல வாசகங்களை எழுதி, தமிழர்களின் மனதை புண்படுத்துவது பொருத்தமாக அமையாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


ஏற்க இயலாது: மேலும், அந்த கேலிச் சித்திரம், இந்தி திணிப்பை எதிர்த்த மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளதை, ஏற்றுக் கொள்ள இயலாதது. தமிழனின் பண்பு யாருக்கும் தாழ்ந்தவனாக இருப்பது அல்ல; யாரையும் தாழ்த்துவதும் அல்ல என்ற அண்ணாதுரையின் கருத்தை, இந்த தருணத்தில் சுட்டிக் காட்டுகிறேன். இந்தி திணிப்புப் போராட்டம் குறித்து தமிழர்களின் மனதை புண்படுத்தும் வகையில், 12ம் வகுப்புப் புத்தகத்தில் வெளியிட்டுள்ள கேலிச் சித்திரத்தை, மத்திய அரசு உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.


Advertisement


வாசகர் கருத்து (88)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bneutral - Chandigarh,இந்தியா
15-ஜூன்-201201:40:22 IST Report Abuse
Bneutral Cant cheat people for so long in the name of language , religion and e, peoples resistance capacity gone long back.. this kind of news wont help any party.. YES HINDI IS OUR NATIONAL LANGUAGE.. WE TAIMILIANS ALONE DONT KNOW OUR NATIONAL LANGUAGE.. its a shame for us.
Rate this:
Share this comment

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load_full_taboolabc.asp, line 393