பஸ் ஓட்டுனர்களுக்கு புத்துணர்வு பயிற்சி தேவை: மனநல மருத்துவர்கள் யோசனை| Bus drivers need refreshment training | Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (6)  கருத்தை பதிவு செய்ய

""மன அழுத்தம், குடி பழக்கம் உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கி தவிக்கும், பஸ் ஓட்டுனர்களுக்கு புத்துணர்வு பயிற்சி அளிக்க, மாநகர போக்குவரத்து கழகம் முன்வந்தால், தேவையற்ற விபத்துகளை தவிர்க்க முடியும்,'' என, மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆய்வில் அதிர்ச்சி: சென்னையில், 3,461 மாநகரப் போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களை இயக்கும் பணியில், 8,988 ஓட்டுனர்களும், 8,943 நடத்துனர்களும் ஈடுபடுகின்றனர். இப்போக்குவரத்து கழகத்தில் உள்ள பெரும்பாலான ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள், மதுபழக்கத்தில் சிக்கி தவிப்பதாக, ஏற்கனவே நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வில் தெரிய வந்துள்ளது. குடும்பப் பிரச்னை, பணியின்போது அதிகாரிகளால் ஏற்படும் நெருக்கடி, வேலைப்பளு ஆகியவற்றால், மன அழுத்தம், மன உளைச்சல் உள்ளிட்டவைகளில் இவர்கள் சிக்கி தவிப்பதும் உள்ளது. மது பழக்கத்திற்கு இவர்கள் அடிமையாகியுள்ளதற்கு, இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
விதிகளை மதிப்பதில்லை: இது ஒருபுறம் என்றால், மறுபுறம் சில ஓட்டுனர்கள், கட்சி சங்கங்கள் ரீதியான பலம் பெற்றவர்களாக தங்களை கருதிக்கொண்டு, அதே மனநிலையில், போக்குவரத்து சிக்னல்களை மதிப்பதில்லை. போக்குவரத்து சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும்போதே, அதை மதிக்காமல் சர்வ சாதாரணமாக அந்த இடத்தை, மாநகர பஸ்கள் கடந்து செல்வதும், சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இதுபோன்று, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும், மாநகர பஸ் ஓட்டுனர்களை பிடித்து, வழக்கு போட முடியாத நிலையில், போக்குவரத்து போலீசார் உள்ளனர். பல ஓட்டுனர்கள் பஸ்சை இயக்கும்போதே, மொபைல்போனில் பேசியபடி செல்வதால், கவனம் திசை திரும்பி, விபத்திற்கு காரணமாக அமைந்துவிடுகிறது.


பயிற்சி தேவை: எனவே, மன அழுத்தம், குடி பழக்கம், புகை பழக்கம், கவனக்குறைவு உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கி தவிக்கும், சென்னை மாநகர

போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு உடனடியாக, புத்துணர்வு பயிற்சியையும், யோகா உள்ளிட்ட பயிற்சிகளையும் அளிக்க வேண்டியது அவசியமாகவுள்ளது.

இதுகுறித்து, சென்னை அரசு பொது மருத்துவமனை மனநல மருத்துவர்கள் கூறும்போது, "" ஓட்டுனர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் மற்றும் அதீத நம்பிக்கையே தேவையற்ற விபத்துகளுக்கு காரணமாக அமைகிறது. இதுபோன்ற மன அழுத்தத்தை குறைக்க, அவர்களுக்கு மாதத்திற்கு ஒருமுறை புத்துணர்ச்சி பயிற்சி அளிக்கலாம். போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டிய அவசியத்தை, அப்போது வலியுறுத்தலாம். விபத்தால் ஏற்படும் உயிரிழப்பால், மற்றவர் குடும்பம் மட்டுமின்றி, ஓட்டுனர்கள் குடும்பமும் பாதிக்கப்படும் என்பதையும், அவர்களுக்கு தெளிவுப்படுத்தலாம்,'' என்றனர்.

போதிய பராமரிப்பின்மையே விபத்துகளுக்கு காரணம்? போதிய பராமரிப்பின்மை மற்றும் தரமான உதிரி பாகங்களை பயன்படுத்தாதது போன்ற பல்வேறு காரணங்களால், அவ்வப்போது, அரசு பேருந்துகள் விபத்திற்குள்ளாவது தொடர் கதையாகிவருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன், தென் மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி பயணம் செய்த, அரசு விரைவுப் பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் தனியாகவும், பேருந்து தனியாகவும் சென்ற சம்பவம் நடந்தது. இதேபோல், சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட பேருந்துகள், அடிக்கடி மக்கராகி நிற்பதும் வாடிக்கையாகிவிட்டது. இதற்கு, பேருந்துகளில் தரமான உதிரிபாகங்கள் பயன்படுத்தாதது, தொடர் பராமரிப்பின்மை, அரசு போக்குவரத்து கழகங்களில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில்நுட்பப் பணியாளர்கள் நியமிக்காதவை ஆகியவை காரணமாக கூறப்படுகிறது.

அனுபவம் உள்ளது: இதுகுறித்து, பேசிய சி.ஐ.டி.யு., தொழிற்சங்க தலைவர் சந்திரன், ""மாநகர பேருந்துகளை தொடர்ந்து சரியாக

Advertisement

பராமரிக்காததால் தான், அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. ஒரு விபத்து நடந்தால், சம்பந்தப்பட்ட ஓட்டுனரை, தற்காலிக பணிநீக்கம் செய்கின்றனர். ஆனால், விபத்திற்கான காரணத்தை மறைத்து விடுகின்றனர். அந்த காரணத்தை கண்டறிந்து, மேற்கொண்டு நடக்காத வகையில், எந்த முயற்சியும் மேற்கொள்வதில்லை. அண்ணா சாலையில், விபத்துக்குள்ளான பேருந்து, ஐந்து ஆண்டு பழமையானது. அனுபவம் வாய்ந்த ஓட்டுனர் தான் பேருந்தை ஓட்டியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தொழில்நுட்பப் பணியாளர்கள் நியமித்து, சரியாக பராமரிக்காதது தான் விபத்துக்கு காரணம்,'' என்றார். இருக்கையின் அவலம்: அரசு பேருந்துகளில், ஓட்டுனர்களின் இருக்கை பெரும்பாலும் "ஓயர்'களால் கட்டப்பட்டுள்ளன. நேற்று விபத்துக்குள்ளான மாநகர பேருந்தின் இருக்கை, வலுவாக பொருத்தப்படாமல், நைலான் கயிறால் கட்டப்பட்டிருந்தது. அதுவும், உறுதித்தன்மையுடன் இருக்கிறதா எனவும் சரிபார்க்கவில்லை. கயிறு அறுந்ததால், இருக்கை கவிழ்ந்தது விபத்துக்காரணம் என, ஓட்டுனர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

பாலத்தின் உறுதித்தன்மை எப்படி? பாலத்தின் மீது மோதி, அரசு பஸ் கவிழ்ந்ததற்கு, பாலத்தின் உறுதியில்லாத் தன்மையும் காரணம் என கூறப்படுகிறது. பாலம் அடிக்கடி பராமரிக்கப்பட்டிருந்தால், பஸ் கீழே விழுந்திருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், பாலங்களின் உறுதித்தன்மை குறித்து, நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: பாலத்தின் உறுதித்தன்மைக்கும், விபத்திற்கும், எந்த சம்பந்தமும் இல்லை. 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அப்பாலம், இன்னும் உறுதித்தன்மையுடன் காணப்படுகிறது. பஸ் ஓட்டுனர் குறிப்பிட்ட வேகத்தைத் தாண்டி, அதிவிரைவாக வந்துள்ளார். அதற்கு பாலத்தின் மீது குறை சொல்ல முடியாது. அதிவேகமாக மோதினால் எந்த பாலமும் உடையும் என்பது இயல்பானது. கூடவே, பஸ்சின் வேகத்தையும், கனத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். பழைய பாலம், புதிய பாலம் என்ற வேறுபாடு பார்க்காமல் பராமரித்து வருகிறோம். பாலத்தின் உறுதித்தன்மை குறித்து, அடிக்கடி ஆய்வு நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.- நமது நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUKUDE SUKUDE - kumari,இந்தியா
28-ஜூன்-201214:53:56 IST Report Abuse
SUKUDE SUKUDE தொழிற் சங்கம் என்று ஒன்று இருப்பதனால் இவர்களுக்கு தைரியம் அதிகம் ... அதை முதலில் கலையுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Pranaw - Madurai,இந்தியா
28-ஜூன்-201213:41:06 IST Report Abuse
Pranaw பஸ் பேருந்து ஓட்டுனர்களுக்கு மட்டுமல்லாது சாலையில் செல்லும் பாதசாரிகளுக்கும்,இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கும் புத்துணர்வு பயிற்சியானது அவசியம்.. மேலும் சாலை போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியம்..
Rate this:
Share this comment
Cancel
SHivA - cheNNAi,இந்தியா
28-ஜூன்-201213:29:59 IST Report Abuse
SHivA எல்லாமே ஊழல் மயம் .. பெரும்பான்மை மக்கள் இதனால் வரும் தீவிர பிரச்சினைகளை ஆராயாமல் மாற்றி மாற்றி ஒரு கழகத்தை தேர்ந்தெடுத்து ஏமாந்து போகிறார்கள்.. எல்லோரும் மற்றவர்களை குறை கூறிக்கொண்டு தான் திருந்தாமல் இருப்பது திறமை அல்ல.. தன்னை தானே ஏமாற்றி கொள்வதே..
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
28-ஜூன்-201212:30:43 IST Report Abuse
christ சாலை ஆக்கிரமிப்பு இதனால் ஏற்படும் போக்குவரத்துக்கு நெரிசல் இவைகள் தினசரி வண்டி ஓட்டும் ஓட்டுனர்கள் மன நிலை வெகுவாக பாதிக்கிறது. ஓட்டுனர்கள் அந்த டென்சனை வண்டிகளை இயக்குவதில் காண்பிக்கின்றனர்
Rate this:
Share this comment
Cancel
Sathyan - tirupur,இந்தியா
28-ஜூன்-201210:56:36 IST Report Abuse
Sathyan ஒரு அரசு துறையில் நாம் மும்பது வயதில் ஒரு பணியில் செர்கிரோமென்றால் நாம் 58 ல் ஒய்வு பெரும் போது கண்டிப்பாக ஒரு நல்ல உயர் பதவியிலிருந்து விலகுவோம். .ஆனால் நம் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கு. அவர் முப்பது வயதில் ஓட்டுனராக சேர்ந்தால் 58 வயது வரை வோட்டுனராகவே சாகவேண்டும் .அந்த 28 வருட பணிக்காலத்தில்யாரும் விபத்து எட்படுத்தாமலோ அல்லது விபத்தில் சிக்கமலோ யாரும் தப்ப முடியாது.அதனால் அவர்களுக்கு நிர்வாக ரீதியில் தரப்படுவது ஊதிய உயர்வு நிறுத்தம் ,மெமோ மற்றும் சஸ்பெண்டு மட்டுமே. இதனாலேயே அவர்கள் மன உளைச்சல்களுக்கு ஆளாகிறார்கள்.வேறு எந்த துறையிலாவது ஒரு அரசு ஊழியரை தரம் தாழ்த்தி திட்ட முடியுமா? தாலுகா அலுவலகம் செல்வீர்கள் பத்து மணிக்கு வரவேண்டிய ஊழியர் வரமளிருப்பார் அதற்காக நாம் மணிகணக்கில் காத்திருப்போம்.ஆனால் ஒரு பேருந்து ஒன்பது மணிக்கு புறப்பட வேண்டியது ஒன்பது ஐந்துக்கு புறப்பட்டால் கூட எவனெவனோ கேள்வி கேட்பான் திட்டுவான்,ஆகவே 40 வயதை தாண்டியவர்களுக்கு கண்டிப்பாக வருடத்திட்கொருமுறை மருத்துவ பரிசோதனை செய்யலாம் ,கவுன்செல்லிங் அளிக்கலாம் ,நாற்பதை தாண்டியவர்களுக்கு வேறு துறையில் மாற்றலாம்.முக்கியமாக ஐம்பதை தாண்டியவர்களுக்கு ஓவர் டுட்டிபர்கா அனுமதிக்க கூடாது.அரசு புத்தி பேருந்துகளை இயக்கினால் மட்டும் போதாது அதனை சரிவர பராமரிக்க வேண்டும்.அனைத்து பேருந்துகளும் காப்பீடு கட்டாயம் செய்யப்பட வேண்டும் .எதட்கேடுத்தாலும் ஊழியர்களின் அஜாக்கிரதை என்று சொல்வதை நிறுத்தி அதற்கு உண்மையான காரணத்தை கண்டறியவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
28-ஜூன்-201207:40:31 IST Report Abuse
ஆரூர் ரங இந்தப் பால காண்ட்ராக்டர் . காண்ட்ராக்ட் கிடைக்க அன்றைய முதல்வரின் மகன் நடித்து அவரே தயாரித்த ஒரு மொக்கைப் பட விநியோக உரிமையை கட்டாயத்தின் பேரில் வாங்கி நஷ்டமடைந்ததாக சர்க்காரியா கமிஷனில் வாக்குமூலம் கொடுத்தது நினைவுக்கு வருகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X