பதிவு செய்த நாள் :
கருத்துகள் (15)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

திருநெல்வேலி: இசை, மொழி, கம்ப்யூட்டர் ஆன்லைன் தேர்வு ஆகியவற்றில் சிறுவயதிலேயே சாதனை மாணவராக திகழும் நெல்லையை சேர்ந்த சந்துரு, தமது 10 வயதுக்குள் 20 ஆன்லைன் தேர்வுகளில் எழுதி வெற்றிபெற்றுள்ளார். நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள "இஸ்ரோ' விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் விஞ்ஞானியாகஇருப்பவர் கார்த்திக். இவரது மனைவி லதா, இவர்கள் பாளையங்கோட்டையில் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் சந்துரு. 11 வயதாகும் சிறுவன் பாளையங்கோட்டை புஷ்பலதா, வித்யா மந்திர் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துவருகிறார். சிறு வயதில் இருந்தே கம்ப்யூட்டரில் ஆர்வமுடைய சிறுவன் , அமெரிக்க சாப்ட்வேர் நிறுவனங்களான மைக்ரோசாப்ட், சிஸ்கோ, ஆரக்கிள், ஜூனிபெர் போன்றவை

நடத்தும் ஆன்லைன் தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றுள்ளார். வழக்கமாக கம்ப்யூட்டர் துறையில் பட்டப்படிப்பு படித்தவர்கள் எழுதும் திறன் கொண்ட சிசிஎன்ஏ நெட்வொர்க் தேர்வுகளையும், எம்.சி.பி., எம்.சி.டி.எஸ்., எம்.சி.பி.டி., ஆகிய ஆன்லைன் தேர்வுகளையும் தமது 10 வயதுக்குள்ளாக எழுதியுள்ளார். இது குறித்து நெல்லையில் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்திவரும் சவுந்திரபாண்டியன் கூறுகையில், சிசிஎன்பி, சிசிடிபி எனப்படும் தேர்வுகளை இதற்கு முன்பு பாகிஸ்தானை சேர்ந்த 19 வயது நிரம்பிய இர்டாஷா ஹைதர் என்ற மாணவர்தான் குறைந்த வயதில் எழுதியுள்ளதாக தகவல்கள் உள்ளன. எனவே அந்த வகையில் அதைவிடவும் வயது குறைந்த மாணவராக சந்துரு ஆன்லைன் தேர்வில் வெற்றிபெற்றுள்ளது சிறப்பிற்குரியது என்றார்.

Advertisement

சந்துருவின் தாயார் லதா கூறுகையில், ""சிறுவயதில் இருந்தே கணிதத்தில் ஆர்வமுடையவனாக இருந்தான். அபாகஸ் கணிததேர்வின் எட்டு லெவல்களையும் தமது ஒன்பது வயதில் முடித்து தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்றான். தற்போது மொபைல் போனில் ஆன்ட்ராய்ட் தொழில்நுட்ப முறைகள் குறித்தும், கிளைவுட் கம்ப்யூட்டிங் குறித்தும் கற்றுவருகிறான். சந்துரு இசை, செஸ் விளையாட்டு களில் ஆர்வத்துடன் உள்ளான். மேற்கத்திய இசையில் லண்டன் இசைப்பள்ளியான டிரினிட்டியின் மூன்றாம் நிலை தேர்வில் வெற்றிபெற்றுள்ளான். தாமாகவே ஆர்வத்துடன் ஜப்பான், சீனா, பிரெஞ்ச் மொழிகளையும் கற்றுவருகிறான்'', என்றார்.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (15)
Poornima - Singapore,சிங்கப்பூர்
01-ஜூலை-201218:39:43 IST Report Abuse
Poornima நான் சின்னப்புள்ளையா இருக்கும் போது, எந்த ஒரு விஷயத்தையும் எங்க அம்மா, அப்பா என்னைக் கட்டாயப்படுத்தி செய்ய சொல்ல மாட்டாங்க. நான் இப்ப பார்க்கிற முக்கால்வாசி அம்மா,அப்பா புள்ளைங்க மேல எதையாவது திணிச்சிட்டே இருக்காங்க. டிராயிங், ஸ்விம்மிங் , கராத்தே, அபாகஸ், குமோன் அது இதுனு ஏகப்பட்ட கிளாஸ். எல்லாத்துக்கும் அனுப்புறாங்க. புள்ளைக்கு விருப்பமானது எதுன்னு கேட்கிறதே இல்ல. ஒரு சின்ன குழந்தை மன அழுத்தம்னு சொல்லுது. இந்த சிறுவன் கட்டாயத்தின் பேரில் படித்தானோ இல்லை விருப்பத்தின் பேரில் தான் படித்தானோ . அவங்க பெற்றோர் தான் சொல்லணும்.
Rate this:
Share this comment
Cancel
kattan - Doha,கத்தார்
01-ஜூலை-201217:34:23 IST Report Abuse
kattan dumps வச்சு அப்பாவே எழுதி பையனை பாஸ் பண்ண வச்சுருக்கிறார். அப்பா கம்ப்யூட்டர் செனட்டர் நடத்துறாராமே. அவருக்கு தெரியாத வித்தையா? இது பெருமை பட வேண்டிய விஷயம் கிடையாது.
Rate this:
Share this comment
Cancel
எமதர்மா - - CHENNAI,இந்தியா
01-ஜூலை-201202:49:06 IST Report Abuse
எமதர்மா - இதுதான் artificial intelligence என்பதுவோ?
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
01-ஜூலை-201201:48:20 IST Report Abuse
GOWSALYA இது ஒன்றும் பாராட்டுக்குரியது இல்லை...ஏனெனில்,இது பெற்றோர்களின் பெருமைக்காக செய்யத் தள்ளுப்பட்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி.......மகனே சந்துரு,அடுத்தவர்கள் உன்னைப் பார்த்து பெருமைப்பட எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன.....அதனால் உன் பெற்றோர்களும் பெருமையடைவார்கள்.ஆனால், அவர்கள் சமுதாயத்தில் பெருமைப்படுவதற்காக,உனது வருங்கால வாழ்க்கையை கெடுத்துக்கொள்ளாதே..."" விரலுக்கு ஏற்ற வீக்கம் வேண்டும்"என்று பழமொழி.....பெற்றோரின் சுயநலத்தை விட்டு,உனது நல்லெதிர் காலத்தைப் புரிந்து நடக்க இறைவன் துணை.......முக்கியகுறிப்பு : இது பொறாமையால் எழுதப்படவில்லை.அந்தச்சிறு பையனின் வருங்காலம் நலமாக அமையவே எழுதினேன்.நன்றி.
Rate this:
Share this comment
Cancel
Indiaprajai - Kualalumpur,மலேஷியா
01-ஜூலை-201200:03:17 IST Report Abuse
Indiaprajai உண்மையில் பாராட்ட கூடிய விஷயம் தான்..
Rate this:
Share this comment
Cancel
arun - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
30-ஜூன்-201220:11:16 IST Report Abuse
arun வாழ்த்துக்கள் தம்பி ,, ,, @ Velavan Sbc - - - ஏய்....., நீ என்ன சொல்ல வர்ற ..????
Rate this:
Share this comment
Cancel
j.shifa fathima - madurai,இந்தியா
30-ஜூன்-201219:58:44 IST Report Abuse
j.shifa fathima all the very best for your future upcoming my dear brother.... QUEEN .... ஏக வல்ல இறைவனின் அருள் உனக்கு என்றும் நிலைத்திருக்க இந்த சகோதரியின் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரா... இப்படிக்கு உன் அன்பு தங்கை குஈன் ஷிபா ...
Rate this:
Share this comment
Cancel
new 65 ell - Chennai,இந்தியா
30-ஜூன்-201219:26:14 IST Report Abuse
new 65 ell Thambi pls go and play and enjoy life with fris, After 8th standard onwards concentrate in all sought of things.
Rate this:
Share this comment
Cancel
Selvakumar Natarajan - Mumbai,இந்தியா
30-ஜூன்-201218:23:22 IST Report Abuse
Selvakumar Natarajan It is not a great thing.. he is Abnormal.. he has to go under medical observation.. poor parents..
Rate this:
Share this comment
Cancel
ManickamSathyaraj - chennai,இந்தியா
30-ஜூன்-201211:14:44 IST Report Abuse
ManickamSathyaraj வாழ்கையில் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் ............உண்ணா மாணிக் .சத்யா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X