பொது செய்தி

இந்தியா

முடிக்கப்படாத வங்கிக்கணக்கு பட்டியலில் முதல் ஜனாதிபதி

Updated : ஜூலை 07, 2012 | Added : ஜூலை 05, 2012 | கருத்துகள் (10)
Share
Advertisement

பாட்னா: நாட்டின் முதல் ஜனாதிபதியான டாக்டர் ராஜேந்திர பிரசாத், துவங்கிய வங்கி கணக்கு, அவர் இறந்து, 50 ஆண்டுகள் ஆன பின்னும், தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பதாகவும், அவரது கணக்கில், 1,813 ரூபாய் இருப்பதாகவும் ஆச்சர்ய தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் முதல் ஜனாதிபதியாக இருந்த பெருமை உடையவர், டாக்டர் ராஜேந்திர பிரசாத். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இவர், 1952லிருந்து, 1962 வரை, தொடர்ந்து 2 முறை, ஜனாதிபதியாக பதவி வகித்தார். கடந்த 1963ல் காலமானார். இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன், பாட்னாவில், கண்காட்சி சாலையில் உள்ள, பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில், பிரசாத், சேமிப்பு கணக்கை துவக்கினார். இதில், 500 ரூபாய் டிபாசிட் செய்தார். சில மாதங்களுக்கு பின், அவர் இறந்து விட்டார். ஆனாலும், அவரது நினைவாக, அவர் துவங்கிய இந்த வங்கி கணக்கை, தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருப்பதாக, வங்கியின் மேலாளர் எஸ்.எல்.குப்தா கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "பொதுவாக ஒருவர் இறந்து விட்டால், அவரது வங்கி கணக்கில் உள்ள தொகை, அவரது வாரிசுகளுக்கு வழங்கப்படும். ஆனால், ராஜேந்திர பிரசாத்தின் வங்கி கணக்கிற்கு, யாரும் உரிமை கோரவில்லை. எனவே, அவரது நினைவாக, அவரின் வங்கி கணக்கை தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருக்கிறோம். இதற்கான வட்டியும், அவரது கணக்கில் சேமிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது கணக்கில், 1,818 ரூபாய் உள்ளது, என்றார்.


Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raju kiran - chennai,இந்தியா
06-ஜூலை-201220:09:18 IST Report Abuse
raju kiran அது சரி Rs - 500 க்கு அறுபது ஆண்டுக்கு Rs -1318 தான் வட்டியா ?
Rate this:
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
06-ஜூலை-201217:29:09 IST Report Abuse
Nallavan Nallavan லாலு பிரசாத் அங்கே காலூன்ற ஆரம்பித்த பிறகு பாபு ராஜேந்திரப் பிரசாத் போன்ற நல்ல தலைவர்களைப் பார்க்க முடியலே இங்கே நல்லதம்பி, அங்கே லாலு
Rate this:
Cancel
Dhanabal - Thoothukudi,இந்தியா
06-ஜூலை-201213:22:00 IST Report Abuse
Dhanabal அன்று 10 ஆண்டுகாலம் இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக இருந்தவர் தூய்மையான அரசியல்வாதியாக இருந்திருக்கிறார்.எனவே அவர் வங்கி கணக்கில் மிக மிக குறைவாக பணம் டெபாசிட் செய்துள்ளார். தற்போது 5 ஆண்டுகாலம் மாநகராட்சி கவுன்சிலராக இருந்தாலே போதும். ஆடம்பர கார். பல கோடிக்கு அதிபதி. வெள்ளையர் பிடியிலிருந்து விடுதலையான நமது நாடு தற்போது கொள்ளையர்கள் பிடியில் சிக்கி சீரழிவது வேதனைக்குரியது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X