பதிவு செய்த நாள் :
கருத்துகள் (2)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

கேரம் விளையாட்டில் உலக கோப்பை வென்ற வீரர்களுக்கு, மாநில அரசு வழங்கும் பரிசுத்தொகை இன்னும் வழங்கப்படாததால், வீரர்கள் கடும் விரக்தியில் உள்ளனர். வெற்றி வாகை: சென்னையின் தெருவோர விளையாட்டு என, கேரம் பற்றி எல்லோரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் போது, அதே கேரத்தை வைத்து, உலகப் கோப்பை வென்று திரும்பினர், தமிழகத்து இளைஞர்கள். சென்னையைச் சேர்ந்த இளவழகி, ரேவதி, ராதா கிருஷ்ணன் ஆகிய மூவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் நடந்த, உலக கோப்பை கேரம் போட்டியில் பல பிரிவுகளில் கோப்பைகள் வென்று வந்தனர். இளவழகி இந்த முறையும், உலக கோப்பையின் நடப்பு வீரர் என்ற பெயரை தக்க வைத்துக் கொண்டார். உடனடியாக விளையாட்டு வீரர்கள் பெற்ற வெற்றியின் அடிப்படையில், அவர்களுக்கு, பரிசுத் தொகை வழங்கப்படும் என, மொத்தமாக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. ஆனால் ஒதுக்கப்பட்ட பரிசுத் தொகை, இன்று வரை வீரர்களிடம் அளிக்கப்படவில்லை.
கண்ணீர் கதை: கோப்பை வென்று பரிசுக்காக காத்திருக்கும் வீரர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கண்ணீர் கதை ஒளிந்துள்ளது. வியாசர்பாடியைச் சேர்ந்த இளவழகி, நான்கு முறை கேரம் விளையாட்டில் உலக கோப்பை

வென்றிருக்கிறார். ஆனால் இன்று வரை வியாசர்பாடியில் உள்ள குடிசைப் பகுதியில் இவருடைய வீடு இருக்கிறது. அப்பா மீன்பாடி ஓட்டுநர். கேரம் போர்டு வைத்தால், வீடே அடைத்துக் கொள்ளும் அளவிற்கு உள்ளது, அதன் கொள்ளளவு. பழைய இரும்புக் கட்டிலின் கீழே உலக அளவில் வாங்கிய கோப்பைகளை வைத்திருக்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், கேரத்தையே முழுநேர விளையாட்டாக கொண்டிருக்கிறார். அவருடைய அம்மா, அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருவதால், சாப்பாட்டு பிரச்னைக்கு கவலை இருப்பதில்லை. பெரியமேட்டைச் சேர்ந்த ரேவதிக்கு விளையாட்டு ஒதுக்கீட்டில் வங்கியில் வேலை கிடைத்ததால் நிம்மதியாக விளையாட முடிகிறது. மற்ற இருவரின் பாடு, படும் திண்டாட்டம்.
காரணம் தெரியவில்லை: கோப்பை வென்ற ராதாகிருஷ்ணன், ""கேரம் விளையாட்டு எனக்கு உயிர். எனவே சதா அதை பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன். அம்மாவும் மனைவியும் வேளைக்குச் செல்வதால் வீட்டின் பொருளாதார தேவை, ஓரளவிற்கு குறைந்துள்ளது. தமிழக அரசு, உலகக் கோப்பை வென்றதற்கு வழங்கப்படும் பரிசுத்தொகையை வழங்கினால் என் குடும்பத்திற்கு பெரும் உதவியாக இருக்கும்'' என்றார். வீராங்கணை இளவழகி, "" எங்களுக்கு வழங்க வேண்டிய பரிசுத்தொகையை ஏன் நிறுத்தி

Advertisement

வைத்திருக்கிறார்கள் என்று இன்று வரை தெரியவில்லை. அத்தொகை வழங்கப்பட்டால் விளையாட்டுத் துறையில் மேலும் சாதிப்பதற்கு உதவியாக இருக்கும்,"" என்றார்.
ஒரு கண்ணில் வெண்ணெய்: இது குறித்து கேரம் வீரர்களை தொடர்ந்து ஊக்குவிப்பவரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான கிறிஸ்துதாஸ் காந்தி கூறியதாவது: ஒலிம்பிக்கில் இல்லாத விளையாட்டான சதுரங்கத்தில் விஸ்வநாதன் ஆனந்த், உலகப் கோப்பை வென்ற போது தமிழக அரசின் சார்பில் 2 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதுவும் மறுநாளே வழங்கப்பட்டது. ஆனால் இளவழகி, ராதாகிருஷ்ணன், ரேவதி ஆகிய மூவரும் பல பிரிவுகளில் உலகப் கோப்பை வென்ற போது பரிசுத்தொகை குறித்த அறிவிப்பு மட்டுமே வெளியானது. இரண்டு வருடங்களாகியும் இன்று வரை அதற்கான தொகை அவர்களை சென்று சேரவே இல்லை. இன்று வரை உப்பு சப்பு இல்லாத காரணங்களுக்காக அதிகாரிகள் அவர்களை அலைய வைக்கின்றனர். இதற்கு பின்னால், ஏதாவது "உள்' நோக்கம் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. உலகக் கோப்பை வென்ற மூவரும் எளிய குடும்பத்தை சார்ந்தவர்கள். அவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டால் அது, அவர்களின் எதிர்கால வாழ்விற்கு பெரும் ஊக்கமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NALLU - CHENNAI,இந்தியா
07-ஜூலை-201207:39:48 IST Report Abuse
NALLU இதுக்கெல்லாம் நம்ம ஆளுங்க கருத்து சொல்ல வரமாட்டாங்க....
Rate this:
Share this comment
Cancel
raaja - aranthangi  ( Posted via: Dinamalar Android App )
07-ஜூலை-201206:56:07 IST Report Abuse
raaja வெளி நாடுகளில் இது பேன்ற நிகழ்வுகள் இல்லை. இந்தி்யாவை நினைத்து பெருமைப்படும் விசயங்களை விட இது போன்ற சங்கடமான விசயங்கள் ஏராளம். சோறு என்று வாயால் சொன்னால் பசி தீராது. சாப்பாடு போட்டால் தான் பசி தீரும். சம்பந்தப்பட்ட அதி்காரிகள் சம்பளத்தி்ல் இருந்து கொடுக்க வேண்டாம். அரசாங்க பணத்தை கொடுக்க ஏற்பாடு செய்தாலே போதும். தி்னமலர் செய்தி்யை படித்து விட்டு இதை செய்யட்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X