சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி எல்.கே.ஜி., மாணவி பலி

Updated : ஜூலை 28, 2012 | Added : ஜூலை 27, 2012 | கருத்துகள் (34)
Advertisement
பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி  எல்.கே.ஜி., மாணவி பலி,LKG student dead in school accident

வேலூர்:வேலூம் மாவட்டம், ஆம்பூர் அருகே பள்ளி பஸ் மோதியதில், அதே பள்ளி எல்.கே.ஜி., மாணவி இறந்தார்.

ஆம்பூர் அடுத்த உம்மராபாத் அருகே, ஈச்சம்பட்டு மீனாட்சி காலனியைச் சேர்ந்தவர் குமார். கூலித் தொழிலாளி. இவர் மகள்கள் ஸ்விதா,10, சுஜிதா, 3, உறவினர் மகன் அசோக், 12, ஆகியோர் மாரப்பட்டு எம்பாசோ (இ.எம்.பி. ஏ.எஸ்.எஸ்.ஓ.,) மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில்
படிக்கின்றனர்.

சுஜிதா, எல்.கே.ஜி., படிக்கிறார். பள்ளியின் சார்பில், 20க்கும் மேற்பட்ட எய்ச்சர் மினி பஸ்கள் உள்ளன. நேற்று வாணியம்பாடியைச் சேர்ந்த டிரைவர் கிருஷ்ணன், 35, பள்ளி பஸ்சை ஓட்டி வந்தார். மாலை, 5 மணிக்கு மாணவ, மாணவியரை பள்ளியில் இருந்து ஏற்றிக் கொண்டு, ஒவ்வொரு கிராமமாகப் போய் இறக்கி விட்டு வந்து கொண்டிருந்தனர். மாலை, 5. 15 மணிக்கு, ஸ்விதா, சுஜிதா வை, அவர்கள் வீட்டுக்கு அருகில் அருகன் துருகம் என்ற இடத்தில் உள்ள முருகன் கோயில் அருகே, பஸ்சில் இருந்து இறக்கி விட்டனர். இறங்கிய உடன் வீட்டுக்கு போகும் ஆவலில், ஸ்விதா, சுஜிதா ஆகியோர் பஸ்சுக்கு முன் பக்கமாக ஓடி, எதிர் புறமும் இருந்த சாலையை கடக்க முயன்றனர்.

அப்போது டிரைவர் வேகமாக, பஸ்சை எடுக்க, பஸ்சின் முன் பக்க டயரில் சுஜிதா சிக்கிக் கொண்டார். இதை கவனிக்காத டிரைவர் பஸ்சை வேகமாக ஓட்டினார். சுஜிதாவின் உடலில் முன்புற சக்கரம் ஏறி இறங்கியது. சுஜிதா உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.அப்பகுதியினர், பஸ் சக்கரத்தில் சிக்கிய சுஜிதாவை மீட்கப் போராடினர். இதை பார்த்த டிரைவர் கிருஷ்ணன் தப்ப முயன்ற போது, பொது மக்கள் அவரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

பின் மாணவி சாவுக்கு காரணமான பஸ்சை கொளுத்த அப்பகுதியினர் மண்ணெண்ணெய் கேன்களுடன் வந்தனர். சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த உம்மராபாத் போலீசார் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.பின் பஸ் டிரைவர் கிருஷ்ணனை கைது செய்தனர். பள்ளி தாளாளர் சண்முகத்திடம் விசாரணை செய்து வருகின்றனர். பள்ளி பஸ் டிரைவர் கிருஷ்ணன், மண்பாடி லாரி ஓட்டிக் கொண்டு இருந்தார் என்றும், அவரை பகுதி நேரமாக பஸ்சை ஓட்டச் சொன்னதால் விபத்து நடந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kamal - chennai,இந்தியா
28-ஜூலை-201220:47:00 IST Report Abuse
Kamal Cleaner -ன்னு ஒருத்தன் படிகட்டுல நிப்பான். அவன் இல்லாம எப்படி இப்போ ஸ்கூல் பஸ் ஓட்டுறாங்க?? மக்களே இன்னொரு விஷயம். இப்போலாம் தமிழ்நாட்டுல, டிரைவர் பற்றாகுறை அதிகம். டிகிரி முடிச்சிட்டு மாசம் 10000 சம்பளம் அப்படி பீத்திக்க வேண்டம். ஓம்னி, லோரி , பஸ், வான் டிரைவர் மாசம் 10000 மேல சம்பளம். கொடுமை என்னன்னா, பணம் கொடுத்தாலும் ஆளு கிடையாது. அதனால நிறைய கொடுமை நடக்குது, accident சேந்து நடக்குது. நான் ஒரு நாள் ABT ஓம்னி பஸ்ல பெங்களூர் டு தஞ்சாவூர் வந்தான். ஒரு டிரைவர் மட்டும்தான். அவர்தான் தண்ணி பாட்டில் கொடுக்குறாரு, டிக்கெட் செக்கிங், Lukkage பாக்ஸ் ஓபன் பனுவரு. கீழ இறங்கி பெட்ரோல் போடுவாரு (நாமக்கல்). 10 hours வண்டிய இஸ்டத்துக்கு ஓட்டுறாரு. Sorry . அவருக்கு ஓம்னி பஸ்-oda technique புரியாம, வளாச்சி வளாச்சி ஓட்டுறாரு. நாங்க உயிரை கையில புடிசிகிட்ட வந்தோம். இனிமேல் ஓம்னி பஸ்ல travel பண்ண கூடாதுன்னு முடிவு பண்ணிட்டோம். ஒன்லி Train . அந்த டிரைவர் மேலும் கும்பகோணம் வரை போகணும். ரொம்ப கஷ்டம்.
Rate this:
Share this comment
Cancel
ammu - Gingee,இந்தியா
28-ஜூலை-201217:20:03 IST Report Abuse
ammu என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் அந்த குழந்தைகள் ஆன்ம சாந்தி அடைய வேண்டுகிறேன்
Rate this:
Share this comment
Cancel
ammu - Gingee,இந்தியா
28-ஜூலை-201217:17:43 IST Report Abuse
ammu இந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X