போர் குற்ற வழக்கு முடிய ஐந்தாண்டாகும்: சொல்கிறது இலங்கை அரசு

Added : ஜூலை 29, 2012 | கருத்துகள் (15)
Share
Advertisement
போர் குற்ற வழக்கு முடிய ஐந்தாண்டாகும்:சொல்கிறது இலங்கை அரசு,Sri lanka war crime cases may take five years-Government

கொழும்பு:இலங்கை போர் குற்றம் குறித்த வழக்குகள் முடிய ஐந்தாண்டுகள் ஆகும் என, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.


இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு, ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான சண்டை முடிவுக்கு வந்தது. இறுதிக் கட்ட சண்டையில், பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் போர் குற்றம் நிகழ்ந்துள்ளதாக ஐ.நா., குறை கூறியிருந்தது. இது தொடர்பாக, படிப்பினை மற்றும் நல்லிணக்க குழுவும் சில பரிந்துரைகளை செய்துள்ளது. இந்த பரிந்துரைகளை உடனடியாக செயல்படுத்தக் கோரி, இலங்கை அரசுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம், சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன. இந்த தீர்மானத்தை ஏற்க மறுத்த இலங்கை அரசு, அமெரிக்காவின் நிர்பந்தத்தை ஏற்று, சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளது.


இதற்கிடையே, இலங்கை அதிபரின் செயலர் லலித் வீரதுங்கா நிருபர்களிடம் கூறியதாவது:போர் குற்றம் குறித்த விசாரணைகள் தொடர்பாக கால அட்டவணை போடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நடந்த சண்டையின் போது நடந்த, போர் குற்றங்கள் குறித்த விசாரணை முடிய ஐந்தாண்டுகள் ஆகும். முதல் கட்டமாக, ராணுவம் கொடுத்த பட்டியலில் பலியான அப்பாவிகள் குறித்து விசாரிக்க ஓராண்டாகும். இந்த விசாரணையின் பேரில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய மேலும் இரண்டு ஆண்டுகள் ஆகும். இதைத் தொடர்ந்து, வழக்குகளை நடத்தி முடிக்க கூடுதலாக இரண்டு ஆண்டுகள் பிடிக்கும். நல்லிணக்க குழு ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, எச்சரிக்கையாக பரிசீலிக்க வேண்டியுள்ளது.இவ்வாறு லலித் வீரதுங்கா கூறினார்.


சர்வதேச நெருக்கடியை திசை திருப்பவே அரசு இது போன்ற சதி வேலைகளில் ஈடுபடுவதாக, இலங்கை மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த விஜிதா ஹெராத் தெரிவித்துள்ளார். "ஏற்கனவே பல விசாரணை கமிஷன்கள் அளித்த அறிக்கையை, அரசு செயல்படுத்தவில்லை. எனவே, அரசின் செயல் திட்டங்கள் ஏமாற்று வேலையாகும்' என, இலங்கை அரசியல் விமர்சகர் குசல் பெரிரா தெரிவித்துள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
30-ஜூலை-201216:20:20 IST Report Abuse
T.C.MAHENDRAN இலங்கையில் மிஞ்சியிருக்கும் தமிழர்களையும் இந்த ஐந்து வருடங்களில் கொன்றுகுவிக்கலாம் ராஜபக்சே . அதனால்தான் இந்த இழுத்தடிப்பு .
Rate this:
Share this comment
Cancel
alex mathew - ooty  ( Posted via: Dinamalar Android App )
30-ஜூலை-201216:20:12 IST Report Abuse
alex mathew அஞ்சு வருடத்தி்ல் வழக்கு முடியும் என்று அரசாங்கமே அறிவித்தால் அங்கு what is the purpose in creating judjement commitee
Rate this:
Share this comment
Cancel
hameed - riyadh,சவுதி அரேபியா
30-ஜூலை-201212:12:24 IST Report Abuse
hameed கடல் வற்றினால் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றி செத்ததாம் கொக்கு........அது போல இருக்கு........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X