பதிவு செய்த நாள் :
கருத்துகள் (3)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

வளர்ந்த நாடுகளில் உள்ளதைப்போல், அருகில் உள்ள பள்ளி முறையை தமிழக அரசு அமல்படுத்தினால், ஒட்டுமொத்த அளவில் கல்வித்தரம் உயர்வதுடன், நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வதால் ஏற்படும் உயிரிழப்பும் தடுக்கப்படும் என, கல்வியாளர்களும், கல்வித்துறை அதிகாரிகளும் கருத்து தெரிவிக்கின்றனர். முந்தைய தி.மு.க., ஆட்சியில், நான்கு வகையான கல்வித் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்தை, தற்போதைய அரசு வலுப்படுத்தி, அனைத்து வகுப்புகளுக்கும் அமல்படுத்தி உள்ளது. வெறும் பாடத் திட்டங்களை மட்டும் பொதுவானதாக உள்ளடக்கிய இந்தத் திட்டம், சமநிலையான கல்வித்தரத்தை ஏற்படுத்தவும், ஒட்டுமொத்த கல்வித்தரம் உயரவும் வழி வகுக்குமா என்பது கேள்விக்குறி.
மரத்தடி வகுப்பு: ஏனெனில், இந்தத் திட்டம் குறித்து ஆய்வு செய்த, முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் மற்றும் வசந்திதேவி உள்ளிட்ட கல்வியாளர்கள், "பாடத் திட்டம் மட்டுமல்லாமல், பள்ளிகளின் உள் கட்டமைப்பு வசதிகள், தரமான ஆசிரியர், சுகாதார வசதிகள் என, அனைத்தும் ஒரே சீராக இருக்க வேண்டும்' என, தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். அனைவருக்கும் கல்வி திட்டம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட நிதி மூலம், அரசுப் பள்ளிகளில், தற்போது பெருமளவிற்கு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும், அரசுப் பள்ளிகளில், மரத்தடியில் வகுப்புகள் நடக்கக் கூடிய காட்சி, இப்போதும் மறைந்துவிடவில்லை.
அருகமை பள்ளி: அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் உள்ளதைப்போல், "அருகமைப்பள்ளி' என அழைக்கப்படும், அருகில் பள்ளி முறையை அமல்படுத்தினால், கல்வித்தரத்தை உயர்த்துவதுடன், நீண்ட தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்

செல்வது தடுக்கப்படும். மேலும், மாணவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்கள், நேர விரையம் ஆகியவற்றை தடுப்பதுடன், போக்குவரத்தின்போது ஏற்படும் உயிரிழப்பையும் தடுக்க முடியும் என்பது, கல்வியாளர்கள் கருத்தாக உள்ளது. இதை, கல்வித்துறை அதிகாரிகளும் ஆமோதிக்கின்றனர்.
பலன் என்ன? இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது இயங்கி வரும் பெரும்பாலான பள்ளிகள், குறிப்பாக தனியார் பள்ளிகள், அருகருகே, ஒரே பகுதிகளில் அமைந்திருக்கின்றன. இது, தேவையற்ற போட்டியை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து இதே பகுதிகளில், புதிய பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த முறையை மாற்றி, பள்ளிகள் அதிகம் இல்லாத பகுதிகளில் மட்டும், புதிய பள்ளிகள் துவங்க, அரசு அனுமதி வழங்க வேண்டும். இந்த முடிவை அரசு எடுத்தால், அனைத்துப் பகுதிகளிலும் பள்ளிகள் இருக்கும் நிலையை ஏற்படுத்தலாம். இதன்பின், அருகில் உள்ள பள்ளி முறை திட்டத்தை அமல்படுத்தி, பெற்றோர், தங்களது குழந்தைகளை, அருகில் உள்ள பள்ளியில் சேர்க்கும் கட்டாய முறையை உருவாக்க வேண்டும்.
உயிரிழப்பை தடுக்கலாம்: ஐரோப்பிய நாடுகளில், 20 கி.மீ., - 30 கி.மீ., தொலைவில் உள்ள பள்ளிகளில், சேர்க்கை மறுக்கப்படுகிறது. இதனால், அருகில் உள்ள பள்ளிகளிலேயே சேர்ப்பர். இதன்மூலம், பள்ளிகளின் மீதும், அதன் வளர்ச்சியின் மீதும் பெற்றோருக்கு அக்கறை ஏற்படும். இது, கல்வித்தரத்தை உயர்த்த வழிவகை செய்யும். சென்னை போன்ற நகரங்களில், பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று, மாணவர் படிக்கின்றனர். இதனால், விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர். அருகில் உள்ள முறை திட்டம் வந்தால், மாணவர் உயிரிழப்பு முற்றிலுமாக தடுக்கப்படும். இவ்வாறு அதிகாரி தெரிவித்தார். சிறிய நாடுகளில்...: கல்வியாளர் பிரின்ஸ்

Advertisement

கஜேந்திரபாபு கூறுகையில், ""அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இங்கிலாந்து, கியூபா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், அருகில் உள்ள பள்ளி முறை மற்றும் பொதுப்பள்ளி திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. மிகச்சிறிய நாடான வெனிசுலாவில் கூட, சமீபத்தில் இந்தத் திட்டம் அமல்படுத்தப் பட்டு உள்ளது. கோத்தாரி கமிஷன் அறிக்கையிலும், இந்தத் திட்டங்களை அமல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து, விரிவாக விளக்கப் பட்டு உள்ளது,'' என்றார்.
முதல்வர் பரிசீலிப்பாரா? சமச்சீர் கல்வி திட்டத்தை மெருகேற்றிய முதல்வர், அருகமைப்பள்ளி முறை திட்டத்தை கொண்டு வந்து, புதிய பள்ளிகள் துவங்குவதற்கான விதிமுறைகளில் சில மாற்றங்களைச் செய்தால், கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என, எதிர்பார்க்கப் படுகிறது.
பள்ளிகள் தரம் உயர்வு தேவை: சமச்சீர் கல்வி

முறை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தும் போதே, மாநகரங்கள், நகராட்சிகள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளுக்கு தர நிர்ணயம் செய்ய வேண்டிய காலமும் வந்திருக்கிறது. பள்ளிகளில் உள்ள வசதி, கற்பிக்கும் திறன், அப்பகுதி வாழ் பெரும்பான்மை மக்களின் பொருளாதாரத்திற்கு ஏற்ப கல்விக் கட்டணம் அங்கு இருக்கிறதா? படிக்கும் மாணவ, மாணவியர் எத்தனை பேர், இடைநிற்றல் இன்றி, மேனிலைக் கல்வி மற்றும் உயர் கல்வி பெறுகின்றனர் என்பதற்கான ஆவணங்களைத் திரட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த அடிப்படையில், அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு தர நிர்ணயம் செய்தால், பெற்றோர் அந்தப் பள்ளியில் தங்கள் வசதிக்கேற்ப இடம் தேடுவர். மேலும், எல்லா பள்ளிகளும், ஓரளவு தரமான கல்வி கற்பிக்க முன்வரும். அருகில் உள்ள கல்வி நிலையத்திற்கு, மாணவ, மாணவியர் அதிகமாகச் செல்லும் பட்சத்தில், அரசு பேருந்துகளில் தரப்படும் இலவச பாஸ் மற்றும் அரசு கல்விக்காக ஏற்கும் இதர செலவினங்கள் குறையும். அத்தொகையை, வளர்ச்சி தேவைப்படும் பள்ளிகளுக்கு நிதி உதவி செய்து, கல்வியை மேம்படுத்தலாம்.
- நமது நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Marutha - Mdu,இந்தியா
04-ஆக-201216:37:54 IST Report Abuse
Marutha நல்ல ஆலோசனை. நடைமுறை சிக்கல்களை விடுவித்தால், அனைவரும் 100 % ஒத்துழைப்பு கொடுப்பார். அதில் சந்தேகமேயில்லை. சிலர் அனைத்து வசதிகளையும் உள்ள பள்ளிகளை தேடுவர். சிலர் கல்வியை சீரிய முறையில் கற்று தரும் ஆசிரியர்கள் உள்ள பள்ளியை தேடுவர். சிலர் தங்களது வசதிகேற்ப பணம் செலுத்தக்கூடிய பள்ளிகளை நோக்குவர். ஒவ்வொருவரின் தேவையும் அவரவர் விருப்பம், பொருளாதார நிலையை அடிப்படையாக கொண்டது. அனைவரின் ஆசைகளையும் இப்புதிய "அருகாமை பள்ளி" திட்டத்தின் மூலம் நிறைவேற்ற முடியாது. எனவே இத்திட்டத்தினை அரசு கையிலெடுக்கும் பட்சத்தில், குறைந்தபட்சம் பள்ளிகளின் அடிப்படை வசதிகள் மற்றும் ஆசிரியர்களின் தரம் ஆகியவற்றை செம்மைபடுத்தினாலே யாவரும் எப்பள்ளியிலும் தங்கள் குழந்தைகளை சேர்க்க தயக்கம் காண்பிக்க மாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
04-ஆக-201209:16:53 IST Report Abuse
JAY JAY மிக மிக அவசியமான ஓன்று... நன்மைகள்..: 1 . கால விரயத்தை தடுக்கலாம்.... 2 . விபத்துக்களையும் , போக்குவரத்து நெரிசல்களையும் தடுக்கலாம்...3 . முக்கியமாக சிட்டி லிமிட்டில் 1 முதல் ஒன்னரை KM க்குள் பள்ளி வளாகம் இருக்க வேண்டும்.... குழந்தைகள் நடக்க என்று தனி பாதை [ LANE ] அமைத்து கொடுக்க வேண்டும்...குழந்தைகளுக்கு நடை பயிற்சியும் ஆயிற்று.... தேவையில்லா பெட்ரோல் செலவும் மிச்சம்....காற்று மாசு படுவது குறையும்....4 . புத்தகங்களின் சுமை குறைக்க படவேண்டும்.... எவ்வளவோ செலவு பண்ணுகிறோம்.... ஒவ்வொரு குழந்தைக்கும் 2 set கள் புத்தகங்கள் வைத்து கொள்ளலாம்... ஒரு Set வீட்டிலும், இன்னொரு செட் பள்ளியில் , குழந்தைகளுக்கு என்று உள்ள தனி தனி desk க்கிலுமாக வைத்திருந்தால் மிக நன்றாக இருக்கும்... நோட்டு கள் கூட ஒரே 300 page நோட்டில் அணைத்து பாடங்களும் எழுதுவது போல இருக்க வேண்டும்... கணக்கிற்கு மட்டும் தனி நோட்டு வைத்து கொள்ளலாம்... இதனால் குழந்தைகளுக்கு புத்தக சுமை குறையும்....மன சுமையும் குறையும்....5 . மாடல் school போலவும், தமிழ் கட்டாய பாடமாகவும், ஆங்கில வழி கல்வியும் கற்று கொடுத்தால் மாணவர்களின் தரம் உயரும்.....6 . cbse பாட திட்டங்களை அப்படியே தமிழில் மொழி பெயர்த்து [ குறிப்பாக கணக்கு , அறிவியல் ] அதனை அரசு பள்ளிகளில் அறிமுக படுத்தலாம்....சமசீர் கல்வி என்று தமிழ் நாட்டுக்கு ஒன்றும் தேவை இல்லை...CORE SUBJECTS களான SCIENCE & MATHS மற்றும் English பாட திட்டம் cbse standard இல் இருந்தால் அது தான் உண்மையான சமசீர் கல்வி...தமிழ், வரலாறு, சோசியல் studies ஆகியவை எப்படி இருந்தாலும் பரவாயில்லை....ஆனால் இந்தியா முழுமைக்கும் ஆங்கிலம், science மற்றும் maths ஆகியவை cbse பாடத்திட்டத்தில் இருப்பது, நமது மாணாக்கருக்கு பிற்காலத்தில் நல்லது....அது தான் உண்மையான சமசீர் கல்வி....7 . எல்லாவற்றிக்கும் மேலாக இப்போ மெற்றிக் பள்ளிகளைஎல்லாம் CBSE பள்ளிகளாக மாற்றும் பணி ஜரூராக நடந்து வருகிறது....அனைவருக்கும் cBSE கல்வி என்றால் சமசீர் கல்வியாகவும் இருக்கும்...அரசு பள்ளிகளில் தமிழில் மொழி பெயர்த்து CBSE பாட திட்டங்களை நடைமுறை படுத்தலாம்...ஆங்கில வழி கல்வி விருப்பப்பட்ட மாணவர்களுக்கு , தனியார் பள்ளிகளில் 25 % கோட்டா கொடுத்து இலவசமாக பயிற்று விக்கலாம்....அல்லது அரசு பள்ளியிலேயே ஒரு செக்ஸன் ஆங்கில வழி கல்வி தேவைப்படும் மாணவர்களுக்கு அமைத்து கொடுக்கலாம்....
Rate this:
Share this comment
Cancel
Rajendran - Theni,இந்தியா
04-ஆக-201207:43:36 IST Report Abuse
Rajendran நல்ல யோசனை இதை அமுல்படுத்த முதல்வர் முன்வரவேண்டும் . கல்வியில் போட்டி வேண்டாம் .கல்விகற்பதில் போட்டி வேண்டும்.மாணவர்கள் விபத்தில் சிக்கி அழிவதை தவிர்க்க வேண்டும்.அதிகாரிகள் தங்கள் கடமையை தவறாது செய்யவேண்டும் .நல்ல திட்டங்களை மாணவர்களுக்கு கொண்டுசெல்லவேண்டும் .தரமான கல்வி என்பது இப்பொழுது எங்கும் பேசபடுகிறது .அக்கல்வியை அளிப்பது அரசின் கடமை.தனியாரின் கையில் கல்வியை கொடுக்கும்போதுதான் அது வியாபாரமாகிறது .சட்டங்கள் தன கடமையை செய்யும் போது கட்டுகோப்பான கல்வி வளர்ச்சி ஏற்படும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X