பொது செய்தி

இந்தியா

"ஊழலுக்கு பதக்கம் என்றால் இந்தியாவுக்கு தான்':பாபா ராம்தேவ்

Updated : ஆக 12, 2012 | Added : ஆக 10, 2012 | கருத்துகள் (74)
Share
Advertisement
"ஊழலுக்கு பதக்கம் என்றால் இந்தியாவுக்கு தான்':பாபா ராம்தேவ் கிண்டல்,If Olymbic gave medal for corruption, india will win gold: Ramd

""ஒலிம்பிக்கில், விளையாட்டுப் போட்டிகளுக்கு பதக்கம் அளிக்கப்படுவது போல், ஊழலுக்கும் பதக்கம் அளிக்க முடிவு செய்தால், அந்தப் பதக்கம் நிச்69+சயம் இந்தியாவுக்கு தான் கிடைக்கும். அந்தளவுக்கு ஊழல் நம் நாட்டில் நாறிப்போய் கிடக்கிறது,'' என, யோகா குரு ராம்தேவ் குற்றம் சாட்டினார். வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும், கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வர வலியுறுத்தி, யோகா குரு பாபா ராம்தேவ், டில்லியில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

ராம்லீலா மைதானத்தில், மூன்று நாட்கள் மட்டுமே உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ள அவர், இரண்டாவது நாளான நேற்று, மைதானத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசியதாவது:ஊழலை ஒழிப்பதற்கு, வலுவான லோக்பால் மசோதாவை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்; வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும், இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வர வேண்டும்; சி.பி.ஐ., அமைப்புக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்ற, மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, இந்த உண்ணாவிரதம் நடத்தப்படுகிறது. கறுப்புப் பணத்தை மீட்பதற்கு, ஏழு யோசனைகளை அரசுக்கு சொல்லியுள்ளேன்.

ஒலிம்பிக்கில், பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவற்றுக்கு பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. அந்த விளையாட்டுகளில், ஊழலையும் சேர்த்துக் கொண்டால், நிச்சயம் அதற்கான தங்கப்பதக்கம் இந்தியாவுக்கு தான் கிடைக்கும். அந்தளவுக்கு இந்தியாவில் ஊழல் நாறிப்போய் கிடக்கிறது. சர்வதேச அளவில் இந்தியாவின் பெயரும், ஊழலால் கெட்டுப் போயுள்ளது.அன்னா ஹசாரேக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக பத்திரிகைகள் கூறுகின்றன; அதில் உண்மையில்லை; நாங்கள் ஒருமித்துதான் செயல்படுகிறோம். ஊழல் எதிர்ப்பில், நாங்கள் இருவரும் எதிர்காலத்திலும் ஒருங்கிணைந்தே செயல்படுவோம்.

கறுப்புப் பணத்தை மீட்பதில் மத்திய அரசுக்கு ஆர்வம் இல்லை. கறுப்புப் பணம் எங்கெல்லாம் உள்ளது, எவ்வளவு உள்ளது, யார், யார் வைத்திருக்கின்றனர், எப்போது வெளிக்கொண்டு வரப்படும் என்ற தகவல்கள், எதையும் அரசு சொல்வதில்லை. யார் யார் கறுப்புப் பணம் வைத்திருக்கின்றனர் என்ற தகவலையாவது வெளியிட்டால், நாட்டு மக்கள் தெரிந்து கொள்வர்; அதைக்கூட செய்ய, அரசு மறுக்கிறது.சி.பி.ஐ., அமைப்புக்கு தன்னாட்சி அளிக்க வேண்டும். அந்த அமைப்பு, முழு சுதந்திரமாக செயல்பட வேண்டும். அரசியல்வாதிகள், ஆளும் பொறுப்பில் உள்ளவர்களின் தலையீடு இருக்கவே கூடாது. பிரதமர் நேர்மையானவர் என சொல்லப்படுகிறது. அது உண்மையெனில், கறுப்புப் பணத்தை, அவர் மீட்க வேண்டும். வலுவான லோக்பால் மசோதா கொண்டு வர வேண்டும்.இவ்வாறு ராம்தேவ் பேசினார்.

- நமது டில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
12-ஆக-201206:14:41 IST Report Abuse
Bebeto முற்றிலும் உண்மை. இந்த ஊழல் தொடர் (Relay ) ஓட்டத்தில் முதலில் - கருணாநிதி, அவருக்கு அடுத்தது - ப சிதம்பரம் அவருக்கு அடுத்தது - சரத் பவார், கடைசியில் சோனியா.- இந்தியா உலக ரெகார்ட் ஏற்படுத்தும்.
Rate this:
Cancel
Kathir Jegan - boonlay,சிங்கப்பூர்
12-ஆக-201200:29:34 IST Report Abuse
Kathir Jegan திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
Rate this:
Cancel
desadasan - mumbai,இந்தியா
11-ஆக-201222:34:24 IST Report Abuse
desadasan ஒரு காவி உடை கறுப்புப் பணத்தை பற்றி கதைக்கிறது ..கண் சிமிட்டுகிறது...இருபது வருடங்களுக்குள் இரு நூறு கோடி சேர்க்க முடிந்தவர் தங்கப் பதக்கத்தைப் பற்றிப் பேசுகிறார்..நாம் நம்பிக்கெட்டவர்கள்.. கேட்டதெல்லாம் நம்புவோம்..கெட்டவர்களையும் நம்புவோம்.. மூலிகைக்காரரின் போலிப் பாஸ்போர்ட் கதை வெளிவந்துவிட்டது.. யோக குருவின் யோக்யதை வெளிவரும் நாள் எந்நாளோ?காவி உடை ஆனாலும் காசாசை போகாதடி ஞானத் தங்கமே.. கண்டவர் பேச்சை நம்பும் காலம் என்று மாறும் என் ஞானத்தங்கமே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X