பொது செய்தி

தமிழ்நாடு

ராஜிவ்காந்தி புதுப்பிக்கவல்ல எரிசக்தி தினம்: எதிலும் சாதிக்கும் சூரிய மின்சக்தி

Updated : ஆக 21, 2012 | Added : ஆக 19, 2012 | கருத்துகள் (6)
Advertisement
 ராஜிவ்காந்தி புதுப்பிக்கவல்ல எரிசக்தி தினம்: எதிலும் சாதிக்கும் சூரிய மின்சக்தி:மின் தேவைகள�


மின் தேவைகளை பூர்த்தி செய்யும் சூரிய சக்தி:

மனித இன வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது மின்சாரம். நமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய, மின்சாரம் அத்தியாவசியமாக உள்ளது. மரபு சார்ந்த மின் உற்பத்தி முறைகளான அனல், புனல், அணு, காற்று உள்ளிட்டவற்றின் அடிப்படையிலேயே, மின்சாரம் பெறப்படுகிறது.

அனல், அணு உற்பத்தி முறைகளில் மூலப்பொருட்களுக்கு, அந்நிய நாடுகளை எதிர்பார்த்திருக்கும் நிலையே உள்ளது.அதிக விலை, அதிக பயன்பாட்டால் உண்டாகும் நிலக்கரி பற்றாக்குறையும், காலநிலை மாறுபாட்டால், மழையளவு குறைவதாலும், மின்னுற்பத்தி பாதிக்கப்படுகிறது. அதிக செலவால் அணுமின் நிலையங்கள் உற்பத்தியிலும் பிரச்னை உள்ளது. இவற்றை களைந்து, அதிகரித்து வரும் மின் உற்பத்தி தேவையை பூர்த்தி செய்ய, மரபு சாரா மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் தர வேண்டும். சூரிய சக்தி, காற்றை அடிப்படையாக கொண்ட மின் உற்பத்தி, தற்போது உலகளவில் அதிகரித்து வருகிறது.

சூரிய சக்தி அதிகளவு உள்ள நமது நாட்டில், ஒவ்வொருவரும் தங்களுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்தலாம். "போட்டோவோல்டிக்' செல்களை பயன்படுத்தி, தயாரிக்கப்படும் மின்சாரத்தை வீடு, அலுவலகங்களில் பயன்படுத்தலாம். மின் தேவைகளை, மின்சார வாரியத்தை எதிர்பார்க்காமல் பூர்த்தி செய்து கொள்ளலாம்.வீடு, அலுவலகம் தவிர, தொழிற்சாலை, மில்களின் தேவையை பூர்த்தி செய்யவும், தெருவிளக்குகள், விவசாயம் உள்ளிட்டவற்றுக்கும் பயன்படுத்தலாம். மின்சாரத்தை கொண்டு செல்ல இயலாத பகுதிகளின் மின் தேவையை பூர்த்தி செய்யலாம்.

அதிகரித்து வரும் :பற்றாக்குறையை சமாளிக்க, சூரிய சக்தியை பயன்படுத்த அரசு முன்வர வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் சூரிய சக்தியை பயன்படுத்த போட்டோவோல்டிக் செல்களின் விலையை குறைக்கவும், மானியத்தை அதிகப்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வற்றாத வளமாக இயற்கையில் கிடைக்கும் சூரிய சக்தியை, அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்த துவங்கினால், இந்தியா மின்மிகை நாடாக மாறும். தொழில் வளம் பெருகி, பொருளாதாரம் செழிக்கும். நாடு வல்லரசாகும்.


ஒரு ரூபாயில் 50 கி.மீ.,"பறக்கும்' வாகனங்கள்:

இன்றைய உலகம் புகை மண்டலம் மிகுந்து, புழுதி படிந்து உள்ளது. வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகையால், சுவாசிக்கும் காற்று கூட, நச்சுப்புகையாக மாறிவிட்டது. இந்நிலை தொடர்ந்தால், மனிதன் வாழ்வதே கேள்விக்குறியாகி விடும்.சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்க, இன்றைய காலகட்டத்தில் புகையில்லாத எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நவீன வடிவமைப்பு, எளிய பராமரிப்பு, குறைந்த விலை, சிறந்த செயல்திறன் கொண்ட வாகனங்கள், மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகின்றன. மாணவர்கள், இல்லத்தரசிகள், தொழிலதிபர்கள் என, அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில், பல்வேறு மாடல்களில் இவ்வகை வாகனங்கள் வெளிவருகின்றன. ஏஞ்சல், வி 60, போபோ, அத்யா ஜீல், பாடி உள்ளிட்டவை இவ்வகை வாகனங்களில் பிரபலமானவை.ஏஞ்சல் மாடல், மின் சைக்கிள் வகையை சார்ந்தது. இதன் மூலம், ஒரு ரூபாய் செலவில் 50 கி.மீ., தூரம் பயணிக்கலாம். பஸ் கட்டணத்தை விட குறைந்த செலவே ஆவதால், நிறைவான பயணம் செய்யலாம். பெட்ரோல், சாலை வரி, ரெஜிஸ்ட்ரேஷன், லைசன்ஸ் எதுவும், இந்த வாகனத்துக்கு தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாகனத்தில் உள்ள பேட்டரியை நாளொன்றுக்கு, 6 முதல் 8 மணி நேரம் சார்ஜ் செய்தாலே போதும்.


சோலார் வாட்டர் ஹீட்டர் :சில டிப்ஸ்கள்:

இரண்டு காவிட்டி ஹீட் எக்ஸ்சேஞ் இவாக்குவேட்டட் சோலார் டியூபுளர் கலக்டர்கள்:
இது, ஹீட் எக்ஸ்சேஞ்சர்களுடன் வருவதால், இவற்றில் உப்புநீரை பயன்படுத்தலாம். சாதாரண சோலார் வாட்டர் ஹீட்டர்களில் மிகக்குறைந்த உப்பு சத்துடைய நீரை மட்டுமே பயன்படுத்த முடியும். ஏனெனில், இவை டியூப்களின் திறனை குறைத்து விடும்.சாதாரண சோலார் வாட்டர் ஹீட்டர்களில், இதை தவிர்க்க பல்வேறு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆனால், இதில் இப்பிரச்னை வர வாய்ப்பில்லை. மேலும் இந்த டியூப்கள், புளூ டைமண்ட் கிளாஸ் கோட்டட் சேமிப்பு டாங்க்குடன் இணைந்து செயல்படும்போது, எவ்வித உப்புநீரையும் பயன்படுத்தலாம்.புளூ டைமண்ட் கிளாஸ் கோட்டட் சேமிப்பு டாங்க்:இந்த விசேஷ டாங்க் வகைகளில், மிகவும் மோசமான உப்புநீரை கூட, உபயோகிக்கலாம். இந்த வகையான டாங்க்குகளை எவ்விதமான டியூப்களுடனும் உபயோகிக்கலாம்.


சூப்பர் - ஹை பிரெஷர் சோலார் கலக்டர்கள்:


இந்த புதிய வகையில் இரண்டு காவிட்டி ஹீட் எக்ஸ்சேஞ் இவாக்குவேட்டட் சோலார் டியூப்களுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த டியூப்களில், ஹீட் பைப்கள் கிடையாது. இவை ஹீட் எக்ஸ்சேஞ்சாக செயல்படுகிறது. இந்த கலக்டர்கள் மிகுந்த அழுத்தத்தை தாங்கி, அதிகளவிலான வெப்பநிலையை அடையும். இவை குறைந்த விலையில் கிடைக்கிறது.
சிறந்த சோலார் வாட்டர் ஹீட்டர் வாங்க, சில டிப்ஸ்கள்:
* ஒரு சோலார் ஹீட்டரின் திறனை சரியாக கணக்கிட வேண்டும். திறன் என்பது ஒருநாளில் எவ்வளவு லிட்டர் நீரை வெப்பமாக்கும் என்பதாகும். வெப்பநீரை மாலையிலும் உபயோகப்படுத்தவேண்டும் என்றால், அதையும் திறன் கணக்கீட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், மாலையில் வெப்பநீரை பயன்படுத்தினால், மறுநாள் காலை வெப்பநீர் கிடைக்காது.
* சோலார் ஹீட்டர் வாங்கும்போது, டியூப்களை சரி பார்க்க வேண்டும். கறுப்பு நிற டியூப்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவை ஒரு கோட்டிங் கொண்டுள்ளது; உற்பத்தித்திறன் குறைவு. நல்ல டியூப்கள் நீல நிறத்தில் இருக்கும்; மூன்று கோட்டிங் கொண்டுள்ளது. மிகவும் சிறந்த டியூப்கள், தங்க ஊதா நிறத்தில் இருக்கும்; மிக அதிகமான வெப்பநிலையை அடையக் கூடியவை.
* வென்ட்களுக்கு இன்சுலேஷன் உபயோகப்படுத்த வேண்டும். இவை குளிர்காலத்தில், மின் சக்தியால் ஹீட்டர் இயங்கும்போது, சக்தியை சேமிக்க உதவும். சில நிறுவனங்கள் இன்சுலேஷனை இலவசமாக தருகின்றன.
* டியூபுளர் சோலார் ஹீட்டரில் ரிப்ளக்டர் உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும். பொதுவாக சூரிய ஒளி மேல்பகுதியில் மட்டுமே விழும். இந்த ரிப்ளக்டர் உதவியால், டியூப்பின் கீழ் பகுதியிலும் சூரிய ஒளி படுவதால், அதிகமான நீர் சூடாகும்.
* ஹீட்டரை தாங்கும் கட்டமைப்பு, துருப்பிடிக்காத பொருளால் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலால் செய்யப்பட்ட கட்டமைப்பு, நீண்டநாள் உழைக்கும்.
* ஹீட்டர் வேலை செய்யும்போது, அதிக வெப்ப நிலையை அடையும். மேலும் படிமண்கள் உருவாகும். இவை காலப்போக்கில், ஹீட்டரின் உற்பத்தி திறனை குறைத்து, செல்பாட்டை நிறுத்தி விடும். எனவே, படிமண்களை அகற்ற வசதி உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
* மழைக் காலத்தில் ஹீட்டர் மின் இணைப்பில் செயல்படும்போது, மின் அதிர்வு தாக்க வாய்ப்புள்ளது. எனவே, மின் இணைப்பு டாங்க்கின் உட்புறமாகவும், நன்கு மறைக்கப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.
* ஐந்து ஆண்டு வாரன்டி, "ஐ.எஸ்.ஐ.,' அல்லது "எம்.என்.ஆர்.இ.,' முத்திரை உள்ளதா என, சரி பார்த்து வாங்க வேண்டும்.
* "ஐ.எஸ்.ஐ.,' மற்றும் "எம்.என். ஆர்.இ.,' முத்திரை பெற்ற உற்பத்தியாளருக்கு மட்டுமே அரசின் நிதியுதவி உடனடியாக கிடைக்கும். இல்லையெனில், வாடிக்கையாளர்கள் பல மாதங்கள் அரசு நிதிக்காக காத்திருக்கும் நிலை ஏற்படும்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pappulu Pk - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஆக-201210:21:13 IST Report Abuse
Pappulu Pk அதெல்லாம் சரி சோலார் பேனலோட விலை என்ன ? அதற்க்கு மானியம் என்ன? என் வீட்டில் அதை வைக்க எவ்வளவு செலவாகும்? யார்ட்ட தரமான உபகரணங்கள் வாங்கலாம். அத சொல்லலியே ??? pappulu2005@gmail.com
Rate this:
Share this comment

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load_full_taboolabc.asp, line 393